Friday, January 9, 2015

மழுங்கடிக்கப்படும் நீதி







ஜெ

தர்மன் பாஞ்சாலி விவாதத்தில் நீதியைப்பற்றிவரும் வரிகள் வியப்பு கொள்ளச்செய்தன. நீதியை உருவாக்குவது ஒரு வழி என்றால் அதற்கு நேர் எதிர்வழியிலே போய்த்தான் நீதியை நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கிறது.  அது generalization என்றால் நீதி வழங்குதல் personalization  எழுதபட்ட நீதியை மழுங்கடிப்பதுதான் சிறந்த நீதிவழங்குதல் என்று வாசித்தபோது என்ன இது என்று முதலிலே தோன்றினாலும் அட ஆமாம் என்று பிறகு தோன்றியது. நீதிமன்றத்தில் ஒரு பொது நீதியை கருணையினால் ஒரு நீதிபதி வளைத்தால் நாம் அதைக் கொண்டாடத்தானே செய்கிறோம்

ஒரு பொது நீதியை உண்டுபண்ணிய உடனே மனுஷ மனம் அதை மழுங்கடிக்க அராம்பிக்கிறது. ஒதை compromise என்றுதான் நினைத்திருந்தேன். அதுதான் human element என இப்போது புரிந்தது. பாஞ்சாலியின் காமத்தையும் காதலையும் சொல்லும் இடத்தில் இது வருகிறது. இந்த வரி அவள் மனசை நமக்குக் காட்டுவதற்காக வந்ததாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒழுக்கம். அதை மீறுவது அன்புஎன்று சொல்வதாக இருக்கலாம். அவள் மனசை தருமன் எளிதாகத் தொட்டுவிட்டான்


ஜெ