ஆசிரியருக்கு ,
பாமையின் நிமிர்வு இன்று தெளிவாகிறது ,
இவள் அம்பைக்கும் , திரௌபதிக்கும் நிகர்த்தவள், குலத்தால் ஒரு படி கீழ்
ஆதலால் ஒரு படி உயர்ந்தவள். மன்றில் வந்து நின்று பேசும் சமனை யாதவ குலம்
பெண்களுக்கு வழங்கியதாலேயே அவர்கள் பேரரசை கட்ட ஆற்றல் கொண்டவர்கள்.
பாமை
பூ தொடுத்துக் கொண்டிருக்கும் காட்சியும் , கலங்களின் பாய்
தாழ்தல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வாடும் பூ போன்ற வர்ணனையும் ,
அபாரம்.
துவாரகை பாமையின் கனவு.
கிருஷ்ணன்.