மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வெண்முரசு குறித்து சில விஷயங்கள்.
1) வீரசேனர் காம, குரோத, மோகங்களை வென்று சியமந்தக மணி பெற்றார் என சத்ராஜித் சொல்கிறார். அவரை பற்றி சொன்ன கதையில் ஒரு விஷயம் இங்கே இணைகிறது. அவர் கடந்த பிலங்களின் பெயர்கள் - காமாந்தகம், குரோதாந்தகம் மற்றும் மோகாந்தகம். மேலும் பார்வை தெரியாததால் அந்த பிலங்களில் உள்ள ஆபத்துகளை அவர் பார்க்காமல் கடக்கிறார். அந்த மூன்று விஷயங்களை கடந்ததால் பிரம்மத்தின் அருள் பெறுகிறார்.
2) கிருஷ்ணன் பெரும்பாலும் வரும்போதெல்லாம் தேரோட்டிக்கொண்டு வருவதாகவே உள்ளது. பிறகு தான் தோன்றியது, போரில் இவர் தானே அர்ஜுனனுக்கு தேரோட்டி. இப்பொழுதே பயிற்சி எடுக்கிறார்.
3) உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.
நன்றி,
இப்படிக்கு,
சா. ராஜாராம்,
சா. ராஜாராம்,
கோவை.