ஆசிரியருக்கு ,
இந்திரநீலம் துவங்கிய முதலே இயல்பில்
அதிலொரு ஒருமை இருப்பதை நாம் காணலாம் , முதலில் தன்னைச் சுற்றி அழகிய
ஆண்களை கொண்டுள்ள திரௌபதி , அதன் பின் அதேபோன்று துவாரகையில் பென்னழகில்
திளைக்கும் திருஷ்டத்தும்னன்.
பாமையின் அங்க அழகை மேலிருந்து கீழாக வர்ணித்து , இப்போது கிருஷ்ணனின் விஸ்வரூபத்தை பாதம் முதல் முடி வரை.
கிருஷ்ணன்
ஆடியான களத்தில் உண்மையில் பாமை தான் விஸ்வரூபம் எடுக்கிறாள் , பாமை வழி
உண்மையில் பெண்மை தான் விஸ்வரூபம் எடுக்கிறது , பெண்மை வழி உண்மையில்
கண்ணிமை தான் விஸ்வரூபம் எடுக்கிறது. கவித்துவமும் தரிசனமும் மோதிச்
சிரிக்கும் விளையாடல் இந்திர நீலம்.
கண்ணைப் பறிக்கும், சித்தம் பற்றும் இன்றைய பகுதி எழுதப் பட்ட எந்த எழுத்துக்கும் நிகரானது.
கிருஷ்ணன்.