"அவன் இடத்தில் என்னை வைத்து நடித்துக்கொண்டிருந்த நான் ..."
இந்த நடிப்பு எப்போதுமே தேவைபடாத கர்ணனும், பீமனும் - எப்போதும் நிறைவும் அழகும் கருணையும், எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய 'an absence of performance anxiety, a sense total abandon' இது சாத்தியமாவது கீழ்கண்ட பீமனின் சொற்களில் சொல்லியிருப்பது போலவா
"அவனைப்போன்றவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை மூத்தவரே. தேவை என்றால் தெய்வங்கள் இறங்கி வரும்” என்றான்."
கர்ணன் போன்ற சிலரை பிரமிப்புடன் பார்ப்பதை தவிர செய்ய வேண்டியது, செய்யக்கூடியது ஒன்றும் இல்லை போலும்.
மங்கை
அன்புள்ள மங்கை
மனிதர்களில் பிறரால் தன்னை நிறைத்துக்கொள்ளவேண்டியவர்கள் உண்டு. பிறர் மீதான அன்பாலும் பகைமையாலும். அவர்களே பெரும்பான்மை. தன்னைத் தானே நிறைத்துக்கொள்பவர்கள்தான் முழுமை நோக்கிச் செல்லமுடியும். இரு சாராரையும் மகாபாரதத்தில் காணலாம்
ஜெ
ஜெ
ஜெ
சிலருடைய பேச்சு, செயல், அவர்கள் தங்களுடைய தன்னறம் என்று கொள்வது, அதை வாழ்ந்து காட்டிய விதம் மற்றவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய மிக பெரிய நம்பிக்கையை, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற தெளிவை கொடுக்கும் - காந்தியின் வாழ்வு போல.
கர்ணன் mythical கதா பாத்திரமோ, ரத்தமும் சதையுமாய் உலவியவனோ, எப்போது படித்தாலும் கண்ணில் நீர் நிறைகிறது - அவன் அடைந்த அவமானங்களுக்காக அல்ல. நினைத்திருந்தால் தனக்கானதை வென்றெடுக்கும் வலிமை உள்ளவனாய் இருந்த போதும்.அவனுடைய பெரும் கருணை கண்ணில் நீர் வர வைக்கிறது.
அன்புடன்
மங்கை