ஜெ,
மீண்டும் ஒரு கடிதம்
இரு வர்ணனைகள். காலையில் காற்று கோதிவிட்ட தடத்துடன் நிற்கும் புல்வெளி கொண்ட ஆயர்பாடி பசு நக்கிய தடம் கொண்ட கன்று போல ஈரமாக நிற்கிறது
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து திருவிழா காணச்சென்ற குழந்தை மாதிரி இருக்கிறாள் தோழி லலிதை
அபாரம்
பால் நிறையும் செம்பு பற்றிய வர்ணனை இன்னொரு பெருங்கவிதை.
கொதிக்கும் எண்ணையில் நீர் விழும் ஒலிபோல பால்கறக்கும் ஒலிகள்
ஒலித்து ஒலித்து நிறைந்து நுரைத்து ஞானத்தின் அமைதிகொண்டன சிறுபாற்குடங்கள்.
பெருங்கலத்தில் ஒழிந்தபின் முக்தியின் வெறுமையை அள்ளிக்கொண்டன
வாழ்க. அதற்கு அப்பால் சொல்வதற்கொன்றும் இல்லை
சுவாமி