அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்றைய அத்தியாயம் (பிரயாகை - 85).
சொல்ல
வார்த்தைகளில்லை. கர்ணனின் இருப்பில் தொடங்கி கிந்தூரத்தை வென்று நான்கு
கிளிகளை அடிப்பது - ஊடாக நிகழும் அர்ஜுனன், தர்மன், கர்ணன் மன நாடகங்கள் என
பிரயாகை அதன் உச்சத்தில் உள்ளது.
கிட்டத்தட்ட
ஒரு திரைக்காட்சியாகவே கண்முன் அனைத்தையும் காண முடிந்தது. நான்
(மட்டுமல்ல, பலரும்) கொண்டிருக்கும் ஜராசந்தனை பற்றிய சித்திரம் வேறு.
ஆனால், அவனையும் துரியனை போல பெரும் மனவிரிவு கொண்டவராக காட்டி, அனைவருள்
உறையும் நன்மையை காட்டி விட்டீர்கள்.
கர்ணன் திரும்பி வரும் பொது துரியனின் கண்களில் நீர் சுரந்தது - அவனுக்கு மட்டுமல்ல, படிப்பவர்கள் பலருக்கும் தான்.
தொடரட்டும் உங்கள் இச்சாதனை தொடர்.
அன்புடன்,
கணேஷ்
பஹ்ரைன்