JM Sir,
ஜனவரி 1 20 14, வியாசனின் பாதங்களைத் தொட்டு தொடங்கிய இந்தப்(பணி) பயணம் அடைந்துள்ள தொலைவே, இந்தப் பயணம்முடிவிலியை நோக்கியோ என்று தோன்றுகிறது.
http://www.jeyamohan.in/43681
வருடத்துக்கு ஒரு நாவல் என்று கூறி, நான்கு நாவல்களைப்பிரசவித்துவிட்டீர்கள்.
இந்த கர்ப்பத்திற்க்கு என்ன பெயர்?
எண்ணிப் பார்க்கையில், எனது கடந்த வருடம் ஒருநாள் கூடவெண்முரசு இல்லாமல் கழிந்ததில்லை.ஒரு நாவலுக்கும்மற்றொன்றுக்கும் உள்ள இடைவெளியிலும் கூட அன்றாடம்திருப்பிப் படித்தல் என்று, வெண்முரசு என் வாழ்க்கையினைவியாபித்திருக்கிறது.
டிசம்பர் 31 2013 வரை, நான் நாட்குறிப்பு (டைரி)எழுதியதில்லை.ஜனவரி 1 2014, முதல் வெண்முரசு குறிப்புகள் எழுதத்தொடங்கினேன்.ஒவ்வொரு நாளும் அத்தியாயத்தில்இடம்பெற்றவர்கள், அவர்களுடய முக்கிய சம்பாஷணைகள்,வர்ணனைகள் என இன்றுவரைத் தொடர்கிறது.பயணங்களின் போதுபுரட்டிக் கொண்டு வந்தால் முழு நாவலையும் மறுவாசிப்பு செய்தஉணர்வு.
ஆன்மீகம்,வரலாறு, புவியியல், மானுடவியல், தத்துவம், வணிகம்,மனோதத்துவம் என பெரும் கலவை.நமது தேசத்தைப் பற்றியவரலாறு, பண்பாடு எதைப்பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தைத் தூண்டியது வெண்முரசு.
வெண்முரசு விவாதங்கள் மற்றுமொரு அருமையான வாய்ப்பு.நான்கவனிக்கத் தவறிய குறியீடுகள், புரியாத இடங்கள் போன்றவற்றைபுரிந்து கொள்ளல் சாத்தியமாயிற்று.குறிப்பாக "வெண்முரசு விவாதங்கள்" இல்லையெனில் " நீலம்" நாவலை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்திருக்காது.
உடல்மொழிகள் மற்றும் வர்ணனைகளுக்கென்றே தனி ஆராய்ச்சிதொடங்கலாம்.ஆளுமைக் கட்டமைப்பு, சூழல் மாற்றம் எனஒவ்வொன்றிலும் உள்ள செவ்வியல் தன்மை வியக்கவைக்கிறது.ஆண்கள் அனைவருமே "அன்" விகுதியிலிருந்து "அர்"பெற்றுவிடுகின்றனர்.பெண்கள் பாவம்!!
உங்களின் காடு நாவலுக்குப் பிறகு, காட்டில் வாழ்கின்ற அனுபவம்இதில் கிடைத்தது.
வெண்முரசின் தனித்துவமே அதன் ஆன்மீகம் தான்.“வேள்விமுகம்”தொடங்கி, இன்று “அன்னைவிழி” வரை ஒவ்வொரு அத்தியாத்திலும்ஆன்மீக சாரம் இல்லாமல் இருந்ததில்லை.
வாசித்தலே ஒரு தியான அனுபவமாகியது.
இந்தப் பயணம் இன்னொரு சரித்திரம்..
தொடரட்டும்...
திளைக்கக் காத்திருக்கிறோம்.
மகேஷ் காங்கோ