Sunday, January 11, 2015

ரதிவிஹாரியின் புன்னகை

 
 
 
மழைப்பாடலில் விதுரருக்கு காவியத்திலிருந்து ரதிவிஹாரி என்றொரு வார்த்தை கிடைக்கும். அதை சொல்லி உணர்வெழுச்சி அடைவார். எண்ணி எண்ணி வியப்பார். காமத்தில் விளையாடுபவன். அப்படி ஒருவன் இருக்க முடியுமா என்று. அப்படிபட்டவன் மனிதனாக இருக்கவே வாய்ப்பில்லை என்று நினைத்து கொள்வார். நாள் முழுதும் அந்த வார்த்தையே சொல்லி கொண்டிருப்பார்.

இப்போது பிரயாகையில் கிருஷ்ணனின் 'அந்த புன்னகை' என்ற வார்த்தையையும் சொல்லி  சொல்லி அலைபாய்கிறார். அந்த புன்னகை ரதிவிஹாரியாக இருக்ககூடியவன் மட்டுமே அளிக்க கூடிய புன்னகை. தான் செய்யும் செயலும் அதனால் கிடைக்கும் லாபமும் நஷ்டமும் அவன் ஆண்மாவை அணுகாதவனே ரதிவிஹாரி. அப்படி பட்ட ரதிவிஹாரியே மக்களுக்காகவே பாடுப்பட்டு அவர்கள் போற்றினாலும் தூற்றினாலும் அவர்களை பார்த்து புன்னகைக்க முடியும்.

அவனாலேயே உணர்வெழுச்சியையும் தான்டி உன்மையை பார்க்க முடியும். எது அறம் என்று முடிவெடுக்க முடியும். விதுரரிடம் கிருஷ்ணன் உடைத்து விட்டு போனதும் அதையே. அவர் செயல்களால் அவருள் வளர்ந்த ஆனவம். அதை ஒற்றை சுண்டில் குலைத்து விட்டு போய்விட்டான்.

காவியத்தின் மூலம் அவர் அகத்தில் எழுந்த கணவு நாயகனையே அவர் அடையாளம் காணமுடியவில்லை. அதற்கும் அவரது ஆனவமே காரணம். அது முற்றிலுமம் உடைந்துருகும் போது அவனை கண்டுகொள்கிறார். அவரும் புன்னகைக்கிறார்.

ஹரீஷ்