அன்புள்ள ஜெ
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஓராண்டு ஓடியே விட்டது வெண்முரசு ஆக்கம் தொடங்கி.
பல விமர்சனங்கள் கடந்து வெற்றி நடை கம்பீரமாக.
மகாபாரதம் பல கோணங்களில் பரிமளித்து வருகிறது.
மகாபாரத நிகழ்வுகளின் வூடே கிடைக்கும் மன வளர்ச்சி தெரபியே என்னை கவர்கிறது.
துரோணர் அர்ஜுனன், கர்ணன் பரசுராமர் --அருமையான குரு சிஷ்ய உறவு.
குரு சிஷ்யனுக்கு சுட சுட தன் சிந்தனைகளை transmit செய்கிறார் என்று எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். குருகுல வாசம் பற்றி குறிப்பிடும் போது.
அதையே நான் உங்கள் எழுத்தில் அனுபவித்து வருகிறேன்.
கடந்த 365 நாட்களில் சுடச் சுட படித்து விட்டு மாடு அசை போடுவது போல் நினைவுகள் நாள் முழுக்க.
மிகச் சில நாட்கள் மட்டுமே நான் மாலையில் வாசித்தது.
ஆசிரியனை மாணவன் அடைவதென்பது பேரன்பு கணம்தோறும் வளர்வது.
நீங்களும் ஒரு விதத்தில் பலருக்கும் ஆசிரியரே.
(உங்கள் மகள் சொன்னது போல ஒரு வருட கல்லூரிப் படிப்பு 3 நாட்களில் கிடைத்தது போல எங்களுக்கு கல்லூரிக்குச் செல்லாமலேயெ online tutorials every day)
குரு வணக்கங்கள்.
அன்புடன்
மாலா