எதற்காக அழுதார்
பீமன் பகனை கொன்ற கதையை கேட்கும் திருதராஷ்டிரர் பாண்டவர் உயிரோடு இருக்கும் செய்தி அறிந்து ஆனந்தமடைகிறார். பின்னர் சரிந்து உடைந்து அழுகிறார். அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என நினைத்துப்பார்த்தேன்.
பாண்டவர் உயிரோடு இருப்பதன் மகிழ்ச்சியை தாங்காகாமல் அவருடைய இளகிய மனம் உருகி அழுகிறார் என கொள்ளலாம்.
அல்லது அவருடைய தந்தைமை, முடி சூட பேராவலுடன் காத்திருந்த தன் மகன் துரியோதனன் விதியிடம் மறுபடியும் ஏமாற்றப்பட்டு வீழ்ந்திருப்பதை கண்டு இருக்கலாம்.
ஆனால் நான் பின்வரும் காரணத்தை முக்கியமானதாக கருதுகிறேன். ஒருவன் நம்மிடம் சந்தேகம் கொண்டு விலகி செல்கிறான் என்றால் அவனுக்கும் நமக்குமான உறவு முற்றிலும் சிதைந்துவிட்டது என்பதாகும். பாண்டவர்கள் தீ விபத்திலிருந்து உயிர் பிழைத்தவுடன் திருதராஷ்டிரனிடம் வராமல் தலைமறைவாகிவிடுவது அவர்கள் தன்னிடம் ஐயம் கொண்டிருக்கிறார்கள் என்பதை திருதராஷ்டிரன் மனம் தெளிவாக அறிந்திருக்கும். அவர் பாண்டவர்களுக்கும் தந்தையானவர் என்ற நிலை இல்லாமலாகிவிடுகிறது. உண்மையில் அவர் இப்போதுதான் உண்மையில் பாண்டவர்கள் என்ற தன் ஐந்து பிள்ளைகளை இழந்துவிட்டதை அறிகிறார். அத்துடன் அவருடைய நெருங்கிய உறவினர்களே அவருடைய நீதியின் மேல் நம்பிக்கையற்றுபோவது அவருக்கு பேரிடியாக இருந்திருக்கும். இந்த பேரிழப்பே அவரை அழுகையில் ஆழ்த்தியிருக்கும் என நினைக்கிறேன்.
தண்டபாணி துரைவேல்
[குழுமவிவாதத்தில்]