வெண்முரசு முழுக்க பட்சிகள், மிருகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன அவைகளுக்கெல்லாம் சில பொதுவான குணாதிசய்ங்கள் உள்ளன. அவைகள் பெயருடன் இருக்கின்றன.அவைகள் பேசுகின்றன. அவைகளுக்கு மனித உணர்வுகளும் அறிவுத்திறனும் இருக்கிறது. அவைகளில் சில வேதங்களும் தத்துவங்களும் அறிந்தவைகளாக இருக்கின்றன அவைகள் மனிதர்களால மறுபிறப்பு எடுக்கவும் செய்கின்றன
இந்த அம்சங்களைக்கொண்டுதான் நாம் எல்லா மிருகங்கள் பட்சிகள் கதைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும் ஜெமோ இவைகளை ரியலிஸ்டிக் ஆக எழுதவில்லை. கதாபாத்திரங்களாக எழுதியிருக்கிறார். பஞ்சதந்திரம் மாதிரியான கதைகளிலே உள்ள சிம்பலிஸத்தை இதில் கொண்டுவர முயன்றிருக்கிறார். இது மகாபாரத காவிய அமைதிக்கு சேர்ததாகவே உள்ளது
இந்த மிருகக் கதைகளின் பொயட்டிக் சஜஷன் என்ன என்பதே முக்கியமானதாகப் பார்க்கவேண்டியது. ஆகவே இவற்றின் பெயர்கள் முக்கியம். உதாரணமாக குஹ்யசிரேயஸ் அவன் கழுதைப்புலி. ஆகவே இருட்டின் புகழ் என்று பெயர்
இப்போது ஒரு நரி வருகிறது. பிரயாகையில் அதன் பெயர் ஜிஹ்வன். நாக்குள்ளவன். அதேமாதிரி ஒரு குரங்கு வந்தது. அதன் பெயர் சூர்ணன். தூசுநிறமானவன்
வீரர்கள் அரசர்கள் எல்லாம் மிருகங்களிலும் இருக்கிறார்கள். அங்கும் இதே அரச அதிகாரத்துக்கான போர் நடந்துகொண்டிருக்கிறது. மாகாபாரதப்போர் என்பது மனிதர்களிலே நடந்த ஒன்று கிடையாது எல்லா உயிர்களிட்மும் அது நடந்துகொண்டே இருக்கின்றது