வலியை அனுபவிப்பதை பல கதாபாத்திரங்கள் செய்கின்றன. ஆனால் சிவை சம்படை என்ற
இரண்டு கதாபாத்திரங்களும் மனவலியாலேயே அழிகின்றன. அதுதான் கர்ணனின் நிலைமையுடன்
மிகவும் ஒத்துப்போகிறது
இந்த வலி அதாவது வண்டு துளைக்கிற வலியுடன் சேர்ந்துபோகிற இடம் வண்ணக்கடலிலே
வருகிறது கர்ணன் துரோணரால் துரத்தப்பட்டு காட்டுக்குள் ஓடுவதை ஒரு பழங்குடித்தலைவன்
பார்த்து சொல்லக்கூடிய இடம். அந்த வலியும் இந்த வலியும் சமமாகவே இருக்கிறது.
அது நேரடியாகச் சொல்லப்படுகிறது. இது குறியீடாக. கர்ணனின் கதாபாத்திரமே இந்த
வலியம்சத்துடன் தான் இருக்கிறது
“அத்தகைய
பெருந்துயர் கொண்ட ஒருவன் ஒருமுறை இவ்வழிச்சென்றான். உயிருடன் தோல் உரித்து
வீசப்பட்ட சாரைப்பாம்பு போல அவன் விரைந்தான். பின்பு மண்ணில் விழுந்து புழுவெனச்
சுருண்டுகொண்டான்.”
“அப்போது
எந்தை மண்கீறி எழுந்து ஒரு சாலமரமாக அவனருகே நின்று அவன் தலைமேல் தன் கைகளை
வைத்தார். கலங்கியழியும் கண்களுடன் அவன் நிமிர்ந்து அந்தக் கைகளைப்
பற்றிக்கொண்டான். அவன் நெஞ்சுலைய எழுந்த விம்மலால் இக்கானகம் விதிர்த்தது.
எந்தையின் பெருஞ்சொல் பாறையுருளும் ஓசையாக எழுந்து மலையடுக்குகளில்
எதிரொலித்தது. http://www. jeyamohan.in/57846
அந்த
அத்தியாயத்தில் மண்ணுக்குள் செல்லும் புழுக்களாக வலி வர்ணிக்கப்படுகிறது. அது இந்த
வண்டுடன் மிகவும் ஒத்துப்போகிறது
அருண்