Wednesday, September 12, 2018

தெய்வங்களின் போராட்டம்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் நாவல்கள் இதுவரை பிரிந்துபிரிந்து வளர்ந்தன. இப்போது ஒன்றாக வேகமாகச் செல்கின்றன. திசைதேர் வெள்ளம் ஆரம்பமே தீவிரமாகச் செல்கிறது.இந்நாவலின் போக்கு என்னவாக இருக்குமென ஊகிக்க முடிகிறது

கிரேக்கப்புராணங்களில் இப்படி தேவர்கள் நேரடியாக வந்து தங்களும் போரில் ஈடுபடுவதை வாசித்திருக்கிறேன். நம்மூர் புராணங்களில் உள்ளதா என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன். இங்கேயும் கந்தர்வர் கின்னரர் நாகங்கள் எல்லாம் போரில் ஈடுபட்டதை புராணங்கள் சொல்கின்றன என்று சொன்னார்.மகாபாரதத்திலேயே குறிப்புகள் நிறைய உள்ளன. பிற்காலப் புராணங்களான தேவிபாகவதம் போன்றவற்றில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது என்றார்

அந்தப்பகுதி மெய்சிலிர்ப்பூட்டுவதாக உள்ளது. தெய்வங்கள் வெறிகொள்வதும் ரத்தபலி கேட்பதும் ஒரு பெரிய நாடகம்போல உள்ளது

மகாதேவன்