Tuesday, May 14, 2019

இருட்கனி 22-ஆம் அத்தியாயம்.

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,



இருட்கனி 22-ஆம் அத்தியாயம்.  கர்ணனை நோக்கி தவிர்க்க முடியாத விசையொன்றால் ஈர்க்கப்பட்டு தான் சென்றுகொண்டிருப்பதை உணரும் அர்ஜுனன் கலிங்கம் சென்று கடலை நோக்கி பெற்ற ஆட்கொள்ளப்பட்ட உணர்வை, பெருநீர்மையை, பேராழியை, அதன் இயலை, விரிவை, கொடையை அருளியலை என்று சென்று ”நீலத்தால் ஆட்கொள்ளப்பட்டவன்“ என்ற இடம் தொடுகிறான்.

கர்ணனை விட தான் ஒருபடி குறைவு என தன்னை அவனுடன் ஒப்பிட்டுக் கொண்டு அர்ஜுனன் கருதும் எண்ணங்கள் ஏனோ ”ஒரு பெண் தன் காதலனுக்கு எழுதும் கடித்தில் உள்ளது போல” என்ற எண்ணத்தைத் தோற்றவித்தது.

துணைத்தெய்வம் எழலாகாதா? இத்தேரில் நான் முற்றிலும் தனித்திருக்கிறேன்.  அருகிருக்கும் ஆட்கொண்ட தெய்வம் எழுகிறது பேதையினை கையாளத் தெரிந்த தலைவன் என்பது போல.  நாணறுந்தது காண்டீபம்.  “நீ கேட்பாய் என்று தெரியும் இது ஆழியும் அம்பும் ஒன்றே ஆனது, இங்கு எவரிடமும் இல்லாதது”


அன்புடன்,
விக்ரம்,
கோவை