Monday, May 20, 2019

அமுதையும் நஞ்சையும் கக்குவது



அன்புள்ள ஜெயமோகன் சார், 
                                                                                                                                                                                                                                                                                 இருட் கனியின் 39 ம் அத்தியாயத்தை வாசிக்கும்போது ஆதிசேஷனும்  பாற்கடலும் ஞாபகம் வந்தது.  எல்லோரும் அவர் அவர் மனதை கடைந்து அமுதையும் நஞ்சையும் வெளியில் கக்குவது வெண்முரசு முழுதும் நடக்கிறது. அர்ஜுனனை நோக்கி  யுதிஷ்டிரர் கக்கும் நஞ்சு கடைசியா ? இல்லை இன்னும் இருக்கிறதா ? என்று கேள்வி வந்தது.  ஒரு சராசரி மனம் போல் தர்மர் நஞ்சை கக்கும்போது எல்லாம் இதான் கடைசி இனி பரிசுத்தம் ஆகிவிடுவார் என்றே தோணும். ஆனால் அவர் நஞ்சை கக்கும்போது எல்லாம் "இது எல்லாம் சரிதானே"  என்று தோன்றி நஞ்சை நியாயபடுத்தும்.இப்போது யோசிக்கும்போது அனைவர் கக்கும் நஞ்செல்லாம் எனது மனதின் நஞ்சு என்றே தோன்றுகிறது. அதாவது நான் பரிசுத்தம் ஆகிவிட்டதாக நம்பி மீண்டும் மீண்டும் நஞ்சை கக்கி திகைத்து நிற்பது. இல்லை என்றால் அர்ஜுனன் ஏன் அப்படி திகைக்கிறான்? உயிருள்ளவரை கடைந்து கொண்டுதான் இருக்கவேண்டும் போல.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   கர்ணன் தர்மரின் மணிமுடியை குப்பையைப்போல்  அம்பால் அடித்து நடத்தி அதன் மேல் எச்சில் என்னும் நஞ்சை உமிழ்ந்துவிட்டு சென்றுவிடுகிறான். ஆனால் தர்மர் அது அர்ஜுனனின்  அம்பு என்று கூறி அர்ஜுனனுக்கு அந்த மணிமுடிமேல் இருந்த ஆசையை கூறுகிறார். அர்ஜுனனுக்கே இருந்தால் கர்ணனுக்கு எப்படி இல்லாமல் இருக்கும்? ஆனால் வேறு வழி இல்லாமல் " சீ..சீ..இந்த பழம் புளிக்கும்" என்ற மனநிலையில் இருந்திருக்கிறார்கள். சொத்தை அனுபவிப்பவர் அல்லவா தர்மர் சரியாய் கண்டுபிடிக்கிறார். தரிமரிடம் இருந்து இப்படி ஒரு தாழ்வுணர்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை. கர்ணன் மீது கொண்ட பயம், திரவுபதி கர்ணன் மேல் கொண்டிருக்கும் நுண்காதல் [ நுண்காதல் என்றால் என்ன ? ] , தனது  வலிமையற்ற உடல், அர்ஜுனன் திரவுபதியை கூடிவிட்டு தர்மர் மேல் கொண்ட இளக்காரம் எல்லாவற்றையும் கூறிவிட்டு மெய்மையினால்  உண்மையில் ஆண்மகன் தான்  தான் என்கிறார்.  இதை ஏன் இங்கு கூறுகிறார்? பீமன் தான் சொன்னபடி துச்சாதனனின் குருதியினால் பாஞ்சாலியின் கூந்தலை நனைத்துவிட்டான், பாஞ்சாலி பிறப்பெடுக்க காரணமான துரோணரை அர்ஜுனன் கொன்றுவிட்டான்.ஆனால் பாஞ்சாலிக்கு புறவயமாய் காட்ட  தன்னால் செய்ய ஒன்றும் இல்லையே என்ற மருகுதலா?  இல்லை பாஞ்சாலியை இப்போதுதான் புரிந்து கொள்கிறாரா? .  ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம் நாளைக்கு எல்லை மீறி எதோ செய்யபோகிறார்கள்.                                                                                                                                                                                                                                                                                                               ஸ்டீபன் ராஜ் குலசேகரன்