Wednesday, October 15, 2014

வண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்





வண்ணக்கடல்-02-ஜுன்-02-2014

நமக்கு நடக்கும்வரை எந்த கொடும் துன்பமும் வெறும் செய்திதான், ஆனால் நம்மைப்பற்றிய  வதந்திக்கூட நமக்கு பெரும் துன்பம்.

தனக்கு உரிய சிறு துன்பமோ தனக்கு உரிய பெரும் துன்பமோ தன்னைத் தாக்கையில் தப்பித்துக்கொள்ளும் மனிதன், தப்பிக்க முடியாதபோதுஉனக்கும்  கீழே  உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுஎன்று மனதிற்கு ஆறுதல் சொல்லித் தப்பித்துக் கொள்கின்றான்.

நமது துன்பம் நீங்குவதைவிட நமது துன்பத்தைவிட கொடும் துன்பம் அனுபவிப்பவனைப் பார்க்கையில் ஆறுதல் ஏற்படுவது எத்தனை பெரிய சுயநல கானல்நீர் இன்பம்.

மனிதனுக்கு மட்டும் இல்லை இறைவனும் பிறவி எடுத்து துன்பப்படுகையில் இந்தஉனக்கும்  கீழே  உள்ளவர் கோடிஎன்ற சொற்களை நினைத்துதான் நிம்மதி அடைந்திருப்பான்.

இறைவனுக்கும் இந்த துன்பத்தை பரிசலிக்கவேண்டும் என்று இறைவனை மனிதவடிவில் படைத்து மனிதன்போலவும் அவனுக்கு குடும்பம் உண்டாக்கிய அந்த ஆதி மனிதன் வாழ்க!

அவன் பெற்ற இன்பம் ஆண்டவனும்  பெருகின்றான்.

எவ்வளவு பெரிய துன்பமும் தாண்டிய பிறகு அதுதான் உலகின் மிகபெரும் நகைச்சுவை.எத்தனை பெரிய நகைச்சுவையும் நகைத்து முடித்தப்பிறகு அதுதான் மாபெரும் சிந்தனை துன்பம்.

இருதினங்களாய் வண்ணக்கடலின் மேல்பகுதி நகையோடிக்கொண்டு இருந்தாலும் அதன் ஆழத்தில் கொதிக்கும் துன்பம் சிந்தனையைக் மீட்டுகின்றது.

ஆயிரம்நாக்கிருந்தாலும்பேசமுடியாமையால்அதுநல்லபாம்புஎனஅழைக்கப்பட்டதுஅப்படி என்றால் ஒரு நாவால் உலகை வளைத்து பேசும் மனிதன்? 

எவ்வளவு?’ என்றான்அவன்நடுங்கிப்போய்.‘முந்நூற்றுமுப்பத்துமூன்றுகோடி!’ என்றான்பிரம்மன்.அவன்குழம்பிசற்றுமுன்வேறுதொகைசொன்னாயேஎன்றான்.‘அதுசற்றுமுன்புஅல்லவா?அவர்கள்கணம்தோறும்பெருகுகிறார்கள்பெருமானே…’ என்றான்பிரம்மன்.படிப்பதற்கு பகடிபோல் இருந்தாலும் சுடும் உண்மை இது.

ஹரிச்சந்திரன் கதை சொல்லும்போது கிருபானந்த வாரியார் சுவாமிகள் சந்திரவதிக்கு எல்லாம் தெரியும் என்று பட்டியல் இட்டுக்கொண்டே வந்து கணவனோடு எதிர்த்துப்பேசமட்டும் தெரியாது என்று முத்தாய்ப்பு வைப்பார்.

கணவனோடு எதிர்த்துப்பேசத்தெரியாத பெரும்தாய் பெரியபிராட்டிக்குகூட ஒன்று பேசத்தெரியும்நான்தான்அப்போதேசொன்னேனே?’ இது அன்னையின் மொழி அதனால்தான் மண்ணில் அந்த மந்திரத்தை மகள்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற இரசியத்தை உடைகிறார் திரு.ஜெ.

நமக்கும் கீழே இருப்பவர்கள் துன்பத்தைப்பார்த்து நிம்மதித்தேடுவதை விட்டுவிட்டு நமக்கும் மேலே உள்ளவன் துன்பத்தைப் பார்த்து முன்னேறு என்பதுபோல் உள்ளது இந்த பகுதி.

அழகியதாமரை(யில்)மூக்கைப்பொத்தியபடிஅய்யனும், வாசனைஅறியும்நாக்கைஉள்ளிழுத்தபடிசேடனும், முந்தானையால்முகம்பொத்திதிருமகளும்திகைத்தமர்ந்திருந்தனர். ‘என்னசெய்யலாம்தேவி?’ என்றான்அவன்.‘இங்கிருந்துநாற்றமேற்பதற்குப்பதில்இந்தமுடிவிலாஉலகங்களில்ஒவ்வொன்றாகப்பிறப்பெடுத்துலீலைசெய்யலாம்என்றாள்அவள்.

மண்ணில் இருந்து விண்ணில் இருக்கும் ஆதி நாராயணனுக்க இந்த கண்ணதாசன் பாடலை ஒளிபரப்புவதில் மகிழ்கின்றேன்.





காக்கும் கடவுள் ஸ்ரீலெட்சுமி நாராயணன் அனைவரையும் காக்கட்டும் நாடு நலம்பெறட்டும்