Monday, May 15, 2017

அழகுணர்ச்சி



ஜெ

வெண்முரசை நாம் முழுமையாக வாசிப்பதில்லை என்பதை எப்போதுமே நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன். எப்போதோ ஒரு காலத்தில் இதைப்பற்றிப்பேசிப்பேசித்தான் நம்மவர் புரிந்துகொள்ளப்போகிறார்கள். அதுவரைக்கும் நாம் ஆங்காங்கே நக்கியும் முகர்ந்தும் புரிந்துகொண்டே போகவேண்டியதுதான்

நேற்று சாதாரணமாக வாசிக்கையிலே இந்த வரி அகப்பட்டது
அழகின் உள்ளடக்கம் ஆனந்தம்.
இரு,
 நிறை,
 திகழ்
 என அது சொல்லிக்கொண்டிருக்கிறது

இந்த வரியை பற்றி மட்டும் நினைத்துக்கொண்டிருந்தேன்.அழகுணர்ச்சி நமக்கு ஏற்படும்போது தான் மிகப்பெரிய எக்ஸிஸ்டென்ஷியல் உணர்ச்சி ஏற்படுகிறது. நாம் பெருகி உலகமாக ஆகும் ஹோலிஸ்டிக் உணர்ச்சி ஏற்படுகிறது. இவையனைத்திலும் மிகச்சிறந்த வடிவில் உச்சமாக அமையவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த மூன்றும்தான் அழகு என்பது.

இத்தகைய நூற்றுக்கனக்கான வரிகளால்தான் மாமலர் எழுதப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.சீனிவாசன்