Thursday, May 11, 2017

மீண்டும் வெய்யோன்






அன்புள்ள ஜெ

இடைவெளியில்  மீண்டும் வெய்யோன்வாசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் அந்நாவலில் அத்தனை நீளமாக ஏன் குழந்தைகளும் குடியும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. நாவல் முடியப்போகிறது. பெரிய போர் வந்து அத்தனைபேரும் சாகப்போகிறார்கள். அதை நினைக்கையில் உண்மையில் மிகப்பெரிய துயரம். ஏனென்றால் இன்றைக்கு மகாபாரதக்க்கதாபாத்திரங்கள் அல்ல அவர்கள் எல்லாரும். நம் மனசுக்குள் வாழும் அணுக்கமான கதாபாத்திரங்கள். அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கை மட்டும் அல்ல மனமும் நமக்கு மிக நன்றாகத்தெரியும். அவர்களின் அழிவு நம் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்ப்பது போல. வெய்யோனின் முடிவில் வரும் அந்த கிரகணம் எவ்வளவு பெரிய குறியீடு  சூரியன் கறுக்கிறது. உலகில் உள்ள எல்லாமே கருமைகொண்டு தெய்ந்து அழிகின்றன

ராஜ்குமார்