Thursday, May 4, 2017

இடைவெளிகள்





ஜெ

வெண்முரசில் வாசகர் பயணம்செய்யவேண்டிய இடைவெளிகள் இருப்பது அது இமேஜ்களைப் பயன்படுத்தி எதையோ சொல்லிவிட்டுச்செல்லும் இடங்களில்தான். அந்த இமேஜ்களை எப்படிக்கையாள்வது என்று அதன் வடிவமே முன்னர் நமக்குக் காட்டியிருக்கிறது. பலவகையான தெய்வங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பலவகையான உருவகங்கள். அவற்றின் வழியாக என்ன சொல்லப்படுகிறது என்பதுதான் வெண்முரசின் சாரம் என நினைக்கிறேன். இதை இந்தியாவின் தொன்மையான சிற்பசாஸ்திரம் காவியலக்‌ஷணம் சார்ந்து அணுகவேண்டும்.

நான்கு பெண்களின் சிலை ஒரு குறிப்பான உருவகம். “பெண்களை இருவகையில் அறிகிறோம். உறைந்தும் உருகியும்.” உருகும்நிலையில் பெண்களுக்கு ஒரு நாற்றம் உண்டு. அந்த நாற்றத்தின் தெய்வவடிவங்கள் அவர்கள். அது உண்மை அல்ல. அது ஆண் அறியும் நிலைதான். அதை அறியமுடியாமல் அவன் கிளம்பி ஓடுகிறான். அல்லது அறியவேண்டாம் என முடிவெடுக்கிறான்

மனோகரன்