Tuesday, May 2, 2017

மந்தன்




ஜெ,
பீமனின் குணத்தை நுட்பமாக வாசிக்கிறேன். அவன் ஆரம்பம் முதலே சிந்தனை ஓட்டம் இல்லாதவனாகவும் தொடர்ச்சியாகப்பேசாதவனாகவும் இருக்கிறான். ஆனால் அவ்வப்போது சர்க்காஸ்டிக் ஆக எதையாவது சொல்கிறான். அவைகள் எல்லாமே கூர்மையாக உள்ளன. அதாவது அவன் அறிவானவன், ஆனால் மொழியறியாதவன். ஆகவே அவனை மந்தன் என்கிறார்கள். அவன் மன ஓட்டங்கல் கூட தொடர்ச்சியாக இல்லை.

ஆனால் அவன் முண்டனால் மனவசியம் செய்யப்படும்போது நன்றாக பேசுகிறான். ஆனால் அப்போது அவன் வேறு ஒருவனாக இருக்கிறான். அவன் முண்டனிடமிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அவன் பேசிக்கொண்டே போக இவன் பாட்டுக்கு இருக்கிறான். முண்டன் அவனை மனோவசியம் செய்து காலப்பயணம் செய்யவைக்கும்போது மட்டும்தான் அவன் எதையாவது புதிதாகத்தெரிந்துகொள்கிறான் என நினைக்கிறேன்

மனோகர்