ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Tuesday, April 24, 2018
Monday, April 23, 2018
முதற்கனல் சித்திரங்கள்
அன்புள்ள ஜெ
நலம் தானே? முதற்கனல் வாசிப்பில் சித்தராங்கதன் கனாகச் சுனையில் ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருப்பதை படித்தபோது கிரக்கத்தொன்மத்தில் நெமிசிஸ்ஸிடம் சாபம் பெற்ற நர்சிஸஸ் நீரில் தனது தீரா முகபாவங்களைக் கண்டு தன்னுருவின் மீது தானே காதல் கொள்ளும் சித்திரத்தினை மனம் சென்று தொட்டது.அவனுடைய தாயும் சத்தியவதி போன்று செவிசஸ் என்ற நீர்மகள் என்பது இன்னும் வியப்பாக இருந்தது.
இதேபோல குருதிச்சாரலில் நக்கனை அன்னயை பற்றிய விவரணைகளில் நூற்றாண்டு காலத் தனிமை நாவலின் ரெமிதியாஸ் நினைவில் எழுந்தால் இருவரின் கட்டற்ற தன்மையையும் ஏதோ ஒரு இடத்தில் என் மனம் இனைத்துக்கொண்டது. ஒன்றிலிருந்து இன்னொன்றை தொட்டேடுக்கும் போது களமும் கதையும் இன்னும் பெருகுகிறது.
வியாசனுக்குள் எழுந்த கட்டற்ற பித்தும் கவியும் தனிமையும் ஆமைதியும் குரோதமும் காமும் வெறுப்பும் துயரும் தான் உருக்கொண்டு மாகபாரதம் முழுக்க கதை மாந்தர்களன பிறந்தனர் என்ற எண்ணத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். அதன் நேர் நிலை உச்சம் சுகர் என முதற்கனலில் வாசித்தடைந்தேன்.
தாங்கள் இமையத் தனிமையில் இருந்த நாட்களில் ஏதோ வேகத்தில் குருதிச்சாரலைத் தான் முதலில் படித்தேன். தங்களை இமையத்தனிமைக்கு அழைத்துச்சென்ற ஆற்றல் என்ன என அறியும் ஆவலில்.
போன முறை என்னை பற்றி ஏதும் சொல்லவில்லை.நான் கோவையை சேர்ந்தவன் ராமக்கிருஷ்ண மிஷனில் படித்துவருகிறேன்.
தங்கராஜ்
கோவை

நான்கு வகையார்
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோஸ்ர்ஜுந|
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப
நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதா, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என அவர்கள் கூறப்படுவார்
கீதையின் இந்த பகுப்புக்கு இரண்டு வகை விளக்கமாக அமைந்துள்ளது வெண்முரசின் இந்த அத்தியாயம். துன்புற்றவர்கள் முதல் விடை. பயனை விரும்புவவர் இரண்டாவது விடை. அறிவை விரும்புவோர் மூன்றாம் விடை. ஞானிகள் நான்காம் விடை என சொல்லலாம். ஞானிகளையும் கடந்த ‘இரக்கமில்லாத; விடை அதாவது விஸ்வரூபம் வியாசர் கண்டது
ஜெயராமன்
நான்கு ஞானநிலை
ஜெ
வியாசர் நான்கு ஞானநிலைகளைச்
சொல்கிறார். இங்குள்ள கர்மச்சுழற்சியைச் சொல்லும் நான்கு விளக்கங்கள் அவை. அதில் முதலாவது
உள்ளதுதான் எங்கும் சொல்லப்படும் இந்து நம்பிக்கை. கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகளும்
இதெல்லாம்தான். மற்ற மூன்றும் லௌகீகர்கள் அல்லாமல் ஞானம் தேடுபவர்களுக்கு உரியவை.
அவற்றை வியாசர் உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. என்கிறார்
ஆனால் அவை விடைகள் அல்ல கேள்விகளே
என்கிறார் கிருஷ்னன். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள். என்று சொல்கிறார்
கேள்விகளே விடைகளாகி வருகின்றன.
கேள்வியில்லா வெறுமையில் நின்று பார்ப்பவனுக்கு விடையே அல்லாத பிரம்மாண்டம் காணக்கிடைக்கிரது
மாதவன்
இமைக்கணப் பயணம்.
அன்பு ஜெ ,
மெய்யறிவிற்கு தேடலாக ,வழியாக இமைக்கணக்காடு அமைந்திருப்பது வாசகர் அறிவதே.அதுவும் இன்றைய காலக்கட்டத்தின் நிகழ்வுகள் பல ,மனச்சோர்வையும் , உளச்சிக்கலையுமே பெரிதும் தரக்கூடியதாய் இருக்கின்றன.
ஒருவன் எவ்வளவு தான் உலகியலறிவு பெற்றவனாயினும் , practical life என்பது மாறுபாடு உடையதே.தெரிந்த விஷயங்களும் ,அனுபவிக்கப் படும்போது வேறொரு நிலையையே அடைகின்றது என்றே நினைக்கிறேன். "புரிதல்" என்பது மானுடத்தின் அடிப்படை கொடையாக ,பிரம்மத்தால் வழங்கப்பட்டது என்றே ஏற்கிறேன்.
அதுவும் தங்களுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளது போல , தட்டும் கையும் ,திறக்கும் கதவென மெய்மை ஒருவனுக்கு அமையுமென்றால் , அது நல்லூழே!
பெரும் சவாலான ஒரு விஷயம் ஒன்றை , வாசல்வரைச் சென்று பார்க்கும் நிலையொன்று ஏற்பட்டது. அதற்கென ஒரு சிறு பயணம் மேற்கொண்டு ,பேசியும் , ஐயப்பட்டும் , ஆரம்பித்ததே தவறென்றும் பல நினைவுகளினூடே அதைச்சென்றடைந்தோம்.
அக்கணத்திலிருந்தே அதிலிருந்து மீள ஆரம்பித்தோம் சிற்சில புரிதலினூடே. அதன் எதிர்திசைப் பயணம் , எங்களைக் குழப்பி திகைப்படையச் செய்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சொல்லொன்னா விடையைக் கண்டைந்துப் போன்ற மனநிலையை அடைந்தது எனக்கு வியப்பையே ஏற்படுத்தியது.
நினைத்ததை அடைந்து சந்தோஷிப்பது சாமான்யர்களும் அடையக்கூடியதே , ஆனால் எதிர்வினைகளின் மூலம் , அதுவும் செயலன்றி , ஒரு வகையான மாயா அனுபவத்தால் பெறுவதென்பது , நடைமுறைச் சாத்தியமற்ற அந்நிலை வெ.மு.வாசகர்களுக்கு கூடுபவையாகவே தோன்றியது.வீடு வந்ததும் இதையே என் துணைவருடன் பகிர்ந்துக்கொண்டேன். இதுபோல் தான் பெரிய பெரிய கதாபாத்திரங்கள் எல்லாம் கண்ணனையடைந்து , அவர்களுக்கு பதிலினை கணப்பொழுதில் மாறும் ,இமைக்கணக்காட்டிலடைந்தாரென்றே ன்.எவ்வளவு பேசினும் வாசகர்களின் வாழ்வியலில் பெரும் பகுதி தங்களுடையது என்பது மறுக்கவொண்ணாதாகிறது.
அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.
செல்வி அழகானந்தன்
கடலூர்.
இரக்கமில்லாதது
உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம்
ஜெ
மேலே சொல்லப்பட்ட வரி எவ்வளவு குரூரமானது என எண்ணிக்கொண்டிருந்தேன். என்னால் அதை உள்வாங்கவே முடியவில்லை. பின்னர் நீங்களே எழுதிவிட்டீர்கள். benevolent ஆன ஒரு இயற்கையை, பிரபஞ்சத்தை, கடவுளை கற்பனைசெய்துகொள்ளாமல் இங்கே வாழவே முடியாது. ஆனால் அந்தப்ப்பிரம்,மாண்டத்தில் அதற்கு அதெல்லாம் இல்லை என்பதை அறியாமலும் எவரும் இல்லை. ஆனால் பயமும் மன அழுத்தமும் திரும்பவந்து கடவுளைப் பற்றிக்கொள்ளச் செய்கின்றன
சாமிநாதன்
Subscribe to:
Posts (Atom)