Monday, April 23, 2018

நான்கு வகையார்



சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோஸ்ர்ஜுந| 
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப

நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதா, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என அவர்கள் கூறப்படுவார்

கீதையின் இந்த பகுப்புக்கு இரண்டு வகை விளக்கமாக அமைந்துள்ளது  வெண்முரசின் இந்த அத்தியாயம். துன்புற்றவர்கள் முதல் விடை.   பயனை விரும்புவவர் இரண்டாவது விடை.  அறிவை விரும்புவோர் மூன்றாம் விடை. ஞானிகள் நான்காம் விடை என சொல்லலாம். ஞானிகளையும் கடந்த ‘இரக்கமில்லாத; விடை அதாவது விஸ்வரூபம் வியாசர் கண்டது

ஜெயராமன்