Tuesday, October 7, 2014

வண்ணக்கடல் பற்றி




அன்புள்ள ஜெ சார்

வண்ணக்கடலை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஏற்கனவே ஒருமுறை வாசித்திருந்தேன். வண்ணக்கடலின் அமைப்பைப்புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டபட்டேன். அது இரண்டு தனித்தனிக்கதைகளகாச் சென்றுகொண்டிருந்தது. இளநாகன் இந்தக்கதையிலே எதற்கு என்ற எண்ணம் வந்தது. ஆனால் இப்போது வாசிக்கும்போது இளநாகன் கதை வழியாக மகாபாரதத்தின் அஸ்திவாரம் மேல் ஒரு விமரிசனத்தையும் ஆசிரியராக நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்ற எண்ணம் வந்தது.

அது ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. கிண்டலாகச் சொல்லப்படும் பிரபஞ்சதரிசனமே சொல்லிவிட்டது. அப்புறம் குந்தியைக் கிண்டல் செய்யும் இடம் வருகிறது. அதெல்லாம் இணைந்து மகாபாரதம் மீது ஒரு பெரிய விமர்சனமாக மாறிக்கொண்டே போனதைக்கவனித்தேன்.

அந்த விமரிசனம் இரண்டுவகையிலே இருந்தது. கேலிக்கூத்துநாடகத்தில் வாலி சுக்கிரீவன் பகடி போல ஒரு விமர்சனம் நேரடியாகவே வருகிறது. இன்னொன்று தத்துவங்கள் வழியாக வரும் விமர்சனம். பல்வேரு தத்துவப்பார்வைகள் வழியாக மகாபாரதத்தை நாம் ஆராய்ச்சிநோக்குடன் பார்க்க வழிசெய்யப்படுகிறது. ஊழ் என்ற விஷயம் பற்றிய தத்துவ விவாதம் நிகழ்கிறது

கடைசியாக வருவது அசுரர்களின் கதை. அதுவே மகாபாரதமீதுள்ள விமர்சனங்களின் உச்சக்கட்டம் என்று தோன்றியது

சரவணன்


ஜெ,

வண்ணக்கடலை அவ்வப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று வாசித்த இடம் பீமன் பிறப்பதும் குரங்குப்பால் குடித்து வளர்ந்ததும். அது ஏன் என்று தோன்றியது. மகாபாரதத்தில் இல்லாதது அது. மகாபாரதத்தில் உள்ள ஃபேண்டஸி வேறுமாதிரி.

பீமனின் அண்ணன் குரங்கான அனுமன். மாருதி என்றால் குரங்கு. மாருதன் என்றால் காற்று. பீமன் காற்றின் மகன். அந்த அர்த்தத்தில்தான் வைக்கப்பட்டிருக்கிறது இல்லையா

மகாபாரதத்தில் பீமனும் ராமாயணத்தில் அனுமனும் குழந்தைகளுக்ககாவே எழுதப்பட்ட கதாபாத்திரங்களைப்போல இருக்கின்றன . அந்தக்குழந்தைத்தனமும் கொண்டாட்டமும் நாவலில் வந்தாகவேண்டும். ஒரு கிளாஸிக் என்பது எல்லாமும் கலந்ததுதான் என்று சொல்லியிருக்கிறீர்கள். குழந்தைகளுக்காக குரங்குகளுடன் லீலை ஆடும் பீமனை காணவிரும்புகிறேன்

அருண்



மரபின்மைந்தன் எழுதும் தொடர் முதற்கனல் பற்றி