Friday, October 10, 2014

வெண்முரசு தளம்




ஜெ,

நீலம் வந்தபின் வெண்முரசு விவாதங்கள் தளத்தை திறக்கவே பயமாக இருக்கிறது. ஒருநாளுக்கு பல பதிவுகள். இன்று [9-10-2014] மட்டும் ஏழு பதிவுகள். இத்தனை கட்டுரைகளை போடத்தான் வேண்டுமா?

சாரதி

அன்புள்ள சாரதி,

இது குறிப்பிடத்தக்க எல்லா கடிதங்களையும் சேமிக்கும் ஓர் இடம். அதைக்கொஞ்சம் வாசிப்புக்கும் உரியதாக ஆக்கலாமே என்று படங்களையும் போடுகிறேன். இது பொதுவாச்கர்கள் வரும் இடம் அல்ல. வெண்முரசின் சிறந்த வாசகர்கள் மட்டுமே வரும் இடம். இந்தக்கடிதங்கள் ஒரு காலப்பதிவாக இருக்குமென நினைக்கிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெசார்

வெண்முரசு வாசிப்பதில் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் அதை வாசித்த இன்னொருவரிடம் பேச எனக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான். என் சுற்றத்தில் வாசிப்பவர்களே குறைவு. அவர்களும் பாலகுமாரன் ரேஞ்சுதான். வெண்முரசு போன்ற ஒரு படைப்பை தினமும் வாசிப்பதெல்லாம் அவர்களால் முடியாது. யாரிடமாவது பேசலாமென்றால் இந்த இணையதளம்தான் ஆறுதலாக இருக்கிறது. புதியவிஷயங்களை தெரிந்துகொள்ளவும் நான் எரசித்த விஷயங்களை யாராவது சொல்லும்போது கேட்பதும் சந்தோஷமாக இருக்கிறது

எஸ்


அன்புள்ள எஸ்

இந்த தளம் ஒரு  கூட்டுவாசிப்புக்கான இடம். இன்றைய இணையச்சூழல் தான் இதற்கான வாய்ப்பை அளிக்கிறது. அதைப்பயன்படுத்திக்கொள்கிறேன்

ஜெ