அன்புள்ள ஆசிரியருக்கு
இதுவரை வந்த அத்தியாயங்களிலேயே பிரயாகை-56 ஒரு கச்சிதமான சிறுகதையாக தோன்றுகிறது. விதுரரின் பார்வையில் பீஷ்மரின் வெவ்வேறு முகங்கள் வெளிப்பட்டு கடைசி வரியில் திடுக்கிட வைக்கும் திருப்பம்.
கால்மடித்து உள்ளுக்குள் ஒடுங்கி அமர்ந்திருக்கும் யோகி, பொருளியல் சாத்தியங்களை காணும் மதியூகி, போரை தவிர்க்கும் அரசியல் ஞானி, அடுத்த தலைமுறையை வாழ்த்தும் கனிவான பிதாமகர் - ஆனால் அடிப்படையில் அந்த வாள்தான் அவர்...அஸ்தினபுரியின் சாமுராய்.
துரோணர் உருவாக்கும் படைக்கலங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் நாள் வந்துவிட்டது என்று புரிந்துகொண்டாரா ? இல்லை இளமையைக் கண்டு முதுமை தன் 'last stand'க்கு தயாராகிறதா ?
சண்முகவேலின் ஓவியத்தை வைத்தே ஒரு த்ரில்லர் படம் எடுக்கலாம் போல
மதுசூதனன் சம்பத்