இடும்பவனத்தின் அத்தியாயம் வழியாக ஒரு விஷயத்தைத் தொகுத்துக்கொள்ள முடிகிறது. மகாபாரத காலத்தை நீங்கள் இன்றைக்கு 4000 வருடம் முன்புள்ளது என்று நினைக்கிறீர்கள் என்றால் அஸ்தினபுரி கங்கைச்சமவெளி மக்களைத்தான் அதிநவீனமானவர்களாக சொல்கிறீர்கள். கலிங்கம், வேசரம் போன்ற நாடுகள் சமானமான இடத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. காந்தாரம் போட்டியில் இருக்கிறது
அதேசமயம் சீனா கொஞ்சம் முன்னணியில் இருக்கிறது. யவனம் என்று நீங்கல் சொல்வது மெசபடோமியா என்றால் அதுவும் கொஞ்சம் முன்னணியில்.ஏனென்றால் பெரிய கப்பல்களை வைத்திருக்கிறார்கள். சோனகர்கள் என்றால் எகிப்தியர்கள் இல்லையா? எதியோப்பியா வருகிறதா தெரியவில்லை [அபிசீனியா]
இவர்களை விட கொஞ்சம் பின்னால் நிற்பவர்கள் அசுரர்கள். இன்றைய மதியபிரதேச- பிகார் பகுதியின் பஸ்த்ர்-சம்பல் நிலம்தான் ஆசுரநாடு. அசுரர்களின் ஊர். அவர்கள் கொஞ்சம் பின்னால் நிற்கிறார்கள். அல்லது வெல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஒருகாலத்தில் பிரம்மாண்டமான அரசுகளை அமைத்து நகரங்களை நிலைநாட்டி பெரிய வளர்ச்சியுடன் இருந்து தோற்றநிலையில் இருக்கிறார்கள்
அரக்கர்கள் என்பவர்கள் இவர்களைவிட கொஞ்சம் பின்னால் நிற்கிறர்கள். அவர்கள் அரசுகளை அமைக்கவே இல்லை. பெருங்கற்கால நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள் அப்படியே வாழ்கிறார்கள். அவர்கள் பெருங்கற்களை நாட்டுவதனால்தான் அவர்களை அரக்கர்கள் என்றார்களோ என்னவோ
இந்த அரசியல் சித்திரம் இதுவரை தெளிவாகி வருகிறது. இதில் எல்லா அரசகுலங்களுக்கும் அரக்கர்களும் அசுரர்களும் தேவைப்படுகிறார்கள். அதிகாரத்துக்கான கொலைவெறிப் போட்டி நடந்துகொண்டிருக்கிறது
சாமிநாதன்