Wednesday, December 24, 2014

ஒளிர்தல்




ஜெ

வெண்முரசின் மகத்தான பகுதிகளில் ஒன்று என்று இடும்பி கதையைச் சொல்லலாம். ஒரு முழு வாழ்க்கையயே பார்த்தது மாதிரி இருந்தது. தனியாகவே குறுநாவலாக ஆக்கிவிடலாம். அதுவரை வந்த அரண்மனை வாழ்க்கைக்கு நேர் மாறான உலகம். அங்கும்  அரசு குடும்பம் எல்லாம் உள்ளது. ஆனால் எல்லாமே தளிர் மாதிரி முளைத்த நிலையில் அழகாக உள்ளன. அந்த அழகு மனதை மிகவும் கவர்ந்தது. வாசிக்க வாசிக்க சலிக்கவில்லை

அங்கே வந்ததும் பீமனுக்கு பூமியில் கால்தரிக்கவில்லை, வானத்திலே பறந்து வாழ்ந்தான் என்றெல்லாம் சொல்வதை அப்படியே காட்சியாகவும் ஆக்கிவிட்டிருக்கிறீர்கள். கிளைகளில் அப்பனும் அம்மாவும் பையனும் தாவி விளையாடும் இடம் கவிதை. அவர்களின் கடைசி அந்திநேரம்.பிரிவு அளிக்கும் வேதனை எல்லாமே மனசை நிறைத்தது

சிக்கலான நுட்பமான பகுதிகளைவிட இத்தகைய  luminous ஆன பகுதிகள் அளிக்கும் அந்த ஒரு மகிழ்ச்சி மிகவும் அற்புதமானது

நன்றி

சரவணன்.
மும்பை