இனிய ஜெயம்,
இன்றைய பீமன் கடோத்கஜன் சந்திப்பு பிறகு வரும் உரையாடல் இவை எல்லாம் இன்று உள்ளே புகுந்து என்னவோ செய்கிறது. [இனியன் ஐந்து]
பீமன் கிட்டதட்ட செய்த செய்யப்போகும் பாவங்கள் அனைத்துக்கும் பாவ மன்னிப்புக் கேட்கிறான். 'உன் தந்தையை முடிவின்றி மன்னித்துக் கொண்டிரு' எனும் சொல்லின் வழியே பீமன் முற்றிலும் தோற்றுப் போகிறான்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு எனும் சொலவடையின் பொருள் இன்று கடோத்கஜன் மொழியில் ஆழமான உளவியல் பொருள் கொள்கிறது.
அம்மா வசம் அரக்கு மாளிகை விட்டு தப்பும் குந்தியின் மன நிலை பற்றி கதை சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் இயல்பாக ''காடு வா வாங்குது வீடு போ போங்குது மேல சொல்லு'' என்றார்கள் அட இது அதேதான் என நினைத்துக் கொண்டேன்.
சுழற்றி எறிந்த முல்லை மாலை போல பறக்கும் பறவைகள் எனும் வர்ணனையும் இன்றைய அஸ்தமனமும் அழகு. இடும்பியின் அழுகை புரிகிறது. காலை வரைநீளும் பிரிவே இடும்பியால் தாள இயலவில்லை எனில் இனி வரப் போகும் நெடிய பிரிவு?
கடலூர் சீனு