வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Friday, July 31, 2015

உடன்போக்கும் செவிலியும்

ஜெ

மன்னிக்கவும்

நீண்டநாட்களாக வெண்முரசு வாசிக்கவில்லை. விட்டுப்போய்விட்டது. நேற்று வரை பதினைந்துநாட்களாக உட்கார்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்

அமிதையின் கொந்தளிப்பைப்பற்றித்தான் எழுதவேண்டும். மகள் விட்டுச்செல்லும்போது அன்னை படுகிற பாடு அற்புதமாக வந்துள்ளது. உண்மையான பாசம் அடையக்கூடிய எல்லா மகிழ்ச்சியும் தடுமாற்றமும் துக்கமும் உள்ளது

நம் தமிழிலக்கியத்தில் இது ஒரு துறையாகவே உள்ளது. உடன்போக்கு செல்லும் தலைவியை எண்ணி துயரமடைந்து செவிலியன்னை பாடும் ஏராளமான பாடல்கள் சங்கப்பாட்டில் உள்ளன. இந்த அத்தியாயங்கள் அந்தக் குறிப்புகளைத்தான் கொடுக்கின்றன என்று விஷயமறிந்தவர்களுக்குத்தெரியும். மற்றவர்களுக்கு தேவையற்ற நீட்டலாகக்கூடத்தோன்றலாம்

சம்ஸ்கிருதத்தில் இந்த உடன்போக்குக்கு செவிலியன்னை வருந்தும் இலக்கிய துறை அல்லது மரபு உண்டா?

சாரங்கன்

அன்புள்ள சாரங்கன்

சங்க இலக்கியத்தில் உள்ளது போல ஒரு தெளிவான துறையாக ஏராளமான படல்கள் இல்லை.

ஆனால் கதாசப்தசதி போன்ற நூல்களில் செவிலியன்னையின் துயரம் ஒரு பாடல்பொருளாகவே உள்ளது

வெண்முரசில் அது சங்கப்பாடல்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது

இது காவியம். விஷயமறிந்தவர்களுக்காக எழுதப்படுவது

அறியாதவர்கள் கேட்டுத்தெரிந்துகொள்ளட்டுமே

ஜெ
Posted by ஜெயமோகன் at Friday, July 31, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

என்னுள் உறையும் அமிதை


   சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கில்லாத ஒரு சுதந்திரம் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்து சென்றுவிடலாம். செல்லும் வீடு பழையதாக இருந்தால் கூட நம்மை பொருத்தவரை அது புதிதுதானேன்? புது வீடு புது சூழல் புது நட்பு என அது ஒரு வகையில் உற்சாகம் தரும் ஒன்று. ஆனால் வீட்டைக் காலி செய்து போகும்போது ஒரு முறை திரும்பி நோக்கினால், அந்த வீடு கொண்ட வெறுமையை அது தன் குதூகலத்தை இழந்து வாடியிருப்பதை காணலாம்.    நாம் ஒவ்வொரு இடமாக சென்று பார்த்து வருவதை, பொருட்கள் எதுவும் விடுபட்டுள்ளதா என்பதற்கல்ல தன்னிடம் விடைபெற்றுக்கொள்ளவே என அவ்வீடு  நினைத்துக்கொண்டிருக்கும். அவ்வீட்டிற்கு ஒரு முகமும் கண்களும் இருப்பதாக நாம் கற்பனை செய்தோமானல் அந்தக் கண்களில் கண்ணீர் ததும்பி இருப்பதை காணமுடியும்.

     ஒரு செவுலித்தாய் ஒரு விதத்தில் தாயைவிட மகளுக்கு நெருங்கியவள். தாய்க்கு மற்ற பிள்ளைகள், கணவன் என கவனிப்பதற்கு மற்றவர்கள் இருக்கிறார்கள். செவுளித்தாய்க்கு அம்மகள்  ஒருத்திதான் எல்லாம். கையில் தவழ்ந்தவள், பின்னர் கண்களில் அப்புறம் கருத்தில் தவழ்ந்து எப்போது அவளுக்கு குழந்தையாகவே இருப்பவள். அந்தத் தாயின் உலகம் அவளே என ஆகிவிடுவதால், அந்த மகள் அடுத்த சொல் என்ன சொல்வாள், அடுத்த அடி எங்கே வைப்பாள், அடுத்த செயல் என்ன செய்வாள் என எல்லாம் அறிந்தவளாய் இருப்பாள். ஆனால் ஒரு நாள் அம்மகள் அவளை விட்டு செல்ல வேண்டியிருக்கும்.  செல்லும் இடம் புதிதானதாக,  அவளுக்கு பிடித்தமானதாக இருக்கும். அந்த பரவசத்துடன் அவள் அனைத்தும் மறந்து மறுபிறப்பென அடுத்த வாழ்வில் நுழையும்போது பிறந்த அகம் சென்ற பிறவியென தூரத்தில் சென்றுவிடும். அதனுடன் செவுலித்தாயுடனான உறவும் குழந்தைக்கால நிகழ்வாய் மனதின் ஓரத்தில் சென்றுவிடும். ஆனால் அந்தத் தாய்,  குடியிருந்தவர் காலி செய்த வீடு போல களையிழந்து வெறுமை கொண்டுவிடுகிறாள்.  அவளின் வாழ்வின் நோக்கம் முடிந்துவிட்டதைப்போல் இருக்கிறது. மகளின்  நினைவுகளை, அவள் விட்டுச் சென்ற தடயங்களை தன் கைகளால், கண்களால், சிந்தையால்  வருடி வருடி அந்தத் தாய் தன் வாழ்நாள் முழுதும் மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறாள்.   

           அமிதையின் இந்த நிலையை வெண்முரசு அழகாக படம் பிடித்து காட்டுகிறது. அந்தத் தாயின் மனம் தயிர் கலயத்தைப்போல்,  ருக்மணி தன் துணைவனை அடையப்போகும் ஆனந்தம்  ஒரு பகுதியாகவும்,  அவள் தன்னை விட்டு பிரியப்போவதன் துயரம் இன்னொரு பகுதியாகவும்  கொண்ட கயிற்றால், கடையப்படுகிறது. 

     பணி நிமித்தம் என் மனைவி தூர நகர் ஒன்றில் சில ஆண்டுகள் இருக்க நேரிட்டதால் என் மகன்கள் இருவருக்கும்  செவுலித்தாயாக இருக்கும் பேறு பெற்றவன் நான். குழந்தையை குளிப்பாட்டும், உண்வு தயாரித்து ஊட்டும், கதை சொல்லி தூங்க வைக்கும், இயற்கையின் கூறுகளை  ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தும் மகிழ்ச்சிகள் பல அடையப்பெற்றேன். உலகின் மிக இனிமையான  வேலை, செவுலித்தாயாக இருப்பது என அறிந்துகொண்டேன்.
         இப்போது என்மகன் பட்ட மேல் படிப்புக்காக இன்னும் சில நாட்களில் 
 
அமெரிக்கா செல்ல இருக்கிறான். அதற்கான எதிர்பார்ப்பும் பரவசமும் அவனுக்கிருப்பதை காண்கிறோம்.  அவனை அறிவியல் என்ற வரனை மணந்துகொண்டு வேறுவீடு செல்லும் மகள் போல் எனக்கு நினைக்கத்தோன்றுகிறது.  இனி அவன் வீட்டிற்கு வருவது என்பது வெறும் விடுமுறைக்காக என ஆகிவிடும். அவனுடைய அணுகும் முகவரி எனது வீட்டு முகவரியாய் இனி இருக்காது.அவன் என்ன உண்கிறான், என்ன உடுக்கிறான்,  என்ன செய்கிறான் என்பது பார்த்தறிவதாய் இல்லாமல் கேட்டறிவது என ஆகிவிடும். என் கைவிரலை அழுந்தப் பற்றியிருந்த சிறு கை வளர்ந்து உறுதியடைந்து ஆனால் இப்போது பிடி நழுவிசெல்கிறது... 

   என் மனதின் ஆழத்தில் நான் அமிதையை  உணர்கிறேன். வெண்முரசின் இந்தப்பகுதி எனக்காக எழுதியதாய் உள்ளது.
தண்டபாணி துரைவேல்

Posted by ஜெயமோகன் at Friday, July 31, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, July 30, 2015

உடல்மொழி

பீஷ்மகர் சினத்துடன் அவனை நோக்கி பின் தோள்களை தளர்த்தி “என் மகள் விழையாத எதையும் செய்ய என் சொல் ஒப்பாது” என்றார். ருக்மியின் உள்ளத்தில் இருந்த மெல்லிய ஐயத்தை அவரது அச்சினம் இல்லாமலாக்கியது

wow..லேசர் கற்றை போல சொற்களைக் கொண்டு, உடல் மொழி கொண்டு சதுரங்கம் விளையாடுகிறீர்கள்..

வணிகமும்,  இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அரசூழ்தல்களை வேண்டுவது..

ஒரு நாள் கழிந்து வீடு வந்ததும், அழுக்கான சட்டையைப் போல் மனத்தையும் கழட்டி வீசி விட்டு, இனிமேல் விளையாடவே போகக் கூடாதெனத் தோன்றும்.. அடுத்த நாள் காலை காஃபி குடிக்கும் வரை...

பாலா
Posted by ஜெயமோகன் at Thursday, July 30, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

வெண்முரசில் வாழ்வின் உணர்வுகள்:


இந்திரநீலம் 59,60 இரு அத்தியாயங்களிலும் நாயகி அமிதை தான். அவளின் எதிர்பார்ப்புகளை அவளின் உளமோட்டமாகவும், உடல்மொழியாகவும் மட்டுமே நம்மிடம் கடத்திவிட்டார் ஜெ. பொதுவாக நாவலின் இது போன்ற தருணங்கள் சாகசத்துக்கானவை. அதை நிகழ்த்துபவனின் திறனையறிய அவன் முன் இருக்கும் தடைகளை விலாவாரியாக விளக்கி, அதிலிருக்கும் ஒரேயொரு குறையை அவன் அதை உபயோகப்படுத்தித் தாண்டும் போதே நமக்கும் அறியத் தருவது தான் சாகச எழுத்தின் பலம். தடைகளின் விவரிப்பிலேயே நமது மனம் ஒரு எதிர்பார்ப்பை அடைந்துவிடும். அப்படியென்றால் இங்கே நமக்கெல்லாம் எதிர்பார்ப்பு ஏதுமில்லையா? ஆம், எதிர்பார்க்கிறோம். கிருஷ்ணன் எவ்வாறு ருக்மணியைக் கொள்ளப் போகிறான் என காத்திருக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு எவ்வாறு நமக்குள் வந்தது? நிகழ்வுகளின் நாயகியான அமிதையின் எதிர்பார்ப்புகள் நமக்குள் கடத்தப்பட்டதாலேயே.


மீண்டும் மீண்டும் சொற்களின் சாத்தியத்தில் உணர்வுகளை நம்மை அனுபவிக்கச் செய்கிறார் ஜெ. கிருஷ்ணனிடம் இருந்து தூது எப்படியும் வந்துவிடும். ஆனால் எப்படி அவளை வந்து  அடையப் போகிறது என்ற  எதிர்பார்ப்பை, "துயிலெழுகையில் வந்து மெல்ல தொட்டு பகல் முழுக்க காலமென நீண்டு, அந்தியில் இருண்டு சூழ்ந்து, சித்தம் அழியும் கணத்தில் மறைந்து, இருண்ட சுஷுப்தியில் உருவெளித்தோற்றங்களாகி தன்னை நடித்து, விழித்தெழுகையில் குனிந்து முகம் நோக்கி எப்போதும் உடனிருந்தது அந்த எதிர்பார்ப்பு. " என்ற வரிகள் எவ்வளவு துல்லியமாக விவரிக்கிறது. வாழ்வின் அதி முக்கியமான தருணங்களின் எதிர்பார்த்தலை  நிகழ்த்திய போதெல்லாம் நாள் முழுவதும் உடனிருக்கும், தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போலிருக்கும் அந்த உணர்வை எழுத்தில் கண்டு அடைந்தது மகத்தான அனுபவம். இதே போன்ற துல்லியமான உணர்வு விவரணம் என்றால் இதற்கு முன் மழைப்பாடலில் குந்திக்கு மணி மகுடம் அளிக்கப்படுகையில் அவளின் மகிழ்ச்சியை விவரித்ததைச் சொல்லலாம். 

"மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன? கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோல நிகழவேண்டும். எப்படி இது நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற அறிதலையும் இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல் அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின் மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம் போல. இந்தக் காலைநேரம் போல".


இங்கே ஜெ காட்டும் மற்றொரு முக்கியமான அவதானிப்பு, நமது அகங்காரத்தின் நிறைவுக்காகவே நமது எதிர்பார்ப்புகள் என்பது. தன்னைச் சுற்றி நடப்பவற்றிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல அமர்ந்திருக்கும் ருக்மணியிடம் சினக்கும் அமிதை இறுதியாக, "அப்படியென்றால் இவை அனைத்தும் தான் கொண்ட துடிப்பின் விளைவே. இத்துயர் தன்னுடையது மட்டுமே. ஆம் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். விழைவது நான். என் மகள் அரசியாக வேண்டுமென்று. அவள் காதல் கனியென்றாவது என் நிறைவுக்கே." என்று சமாதானம் ஆகிறாள். 


இந்திரநீலம் 60 - மகிழ்வுடன் நடந்தேறும் பிரிவின் வேதனையை, அதனால் விழையும் சோர்வை, அது தரும் குழப்பத்தை அணு அணுவாக விவரித்திருக்கிறது இந்த அத்தியாயம். இன்று அமிதை இழக்கப் போவது என்ன? அது தரும் வலி என்ன? உயிர் போகும் வேதனை என்பார்கள்... இங்கு அதை அனுபவிக்கிறாள், "அரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது அந்த நாளின் காலை என்றுணர்ந்தாள். குருதியின் வாசம் எழும் இருண்ட முன் புலரி." காலை புலர்வது குறைப்பிரசவத்தில் வெளியே வந்த குழந்தை போல துடிக்கிறதாம்...  நம் அகத்திணை பாடல்களைப் பற்றிச் சொல்லும் போது அதில் வரும் உவமானங்கள் பெரும்பாலும் புறத்தைப்  பற்றியதாகவே இருக்கும் என்பார்கள். இங்கே அவளின் வேதனையை காலை புலரும் வேதனையாகச் சொல்கிறார். இருளைக் கிழிக்கும் கிழக்கு.. ஏன் அவளுக்கு இருள் தேவைப்படுகிறது? இருண்டிருக்கும் காலம் வரை ருக்மணி அவளுடன் இருப்பாள் அல்லவா!!  திரும்பத் திரும்ப உளவியல் நாடகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை நம் கண் முன் விரிந்து கொண்டே செல்கிறது. இவையெல்லாம் தான் வெண்முரசை தனித்துவம் கொண்டதாக மாற்றுகின்றன.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
Posted by ஜெயமோகன் at Thursday, July 30, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, July 29, 2015

பெண்ணின் உள்ளிருக்கும் உலோகம்



     ஒரு பெண் உடளவில் எவ்வளவு மென்மையானவள் என்பது அவளைப்பார்க்கும்போதே தெரியும். அவள் மனதின் மென்மையை அவளுடன் சற்றே பழகும்போது தெரியும்.  ஆனால் ஒருவன் ஏதோ  ஒரு சமயத்தில் அந்த மென்மையடுக்குக்கு அடியில் தெரியும்  உலோக கட்டுமானத்தை கண்டு திகைக்க நேரிடும். இந்த மெல்லிய  பெண்ணிற்கு உள்ளே வளைக்கவோ உருக்கவோ முடியாத இந்தக் கடின உலோகத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்த உலோக உவமையை ஜெயமோகன் ஒரு கதையில் கூறியிருப்பார். நாம்  பல்வேறு  தர்க்கங்கள் என்னும் ஆயுதங்களோடு ஒரு பெண்ணை இசையவைக்க அனைத்து ஆயத்தங்களோடு சென்றிருப்போம்.  ஆனால் ஒன்றும் நிகழாது.  அனைத்து தர்க்கங்களும் அந்த உலோக பரப்பில் பட்டு முனை முறிந்து தெறித்து விழும். அத்தகைய  நிலையில் நாம் அவளிடம் பேசுவதைவிட  ஒரு பாறையில் முட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறோம்.

   நாம் சற்று ருக்மியின் நிலையில் இருந்து பார்ப்போம். அவனுடைய தர்க்கங்கள் எவ்வளவு நேர்த்தியாகவும் நியாயமாகவும் இருக்கின்றன. அதற்கான சூழலும் இயற்கையாக அமைகிறது. தந்தை தாய் மக்கள் என அனைவரும் அவன் தர்க்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலை இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் எந்த தர்க்கமும் தர்க்கிக்க விரும்பாத ஒருவரிடம் செல்லுபடியாவதில்லை. ருக்மணி, ருக்மியின் தர்க்கங்களுக்கு எதிராக எந்த தர்க்கத்தையும் வைக்கவில்லை என்பதை நாம் பார்க்கலாம். கண்ணால்கூட காணாமல் வெற்று ஒற்றை வார்த்தையில் மையல் கொண்டு கண்ணனையே மணப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் ருக்மணியிடம் என்ன தர்க்கம் இருக்கிறது?  மேலே நகர முடியாமல் ருக்மணியின் பிடிவாதத்தில் முட்டிக்கொண்டு நிற்கும் ருக்மியின் மீது நமக்கு  பரிதாபம்தான் ஏற்படுகிறது.
     
 தான் அழிந்தாலும் பரவாயில்லை என தன் நிலையிலிருந்து இறங்காமலும்,  எந்த தர்க்கத்திற்கும் செவி கொடுக்காமலும் இருக்கும்  பெண்ணின் இந்த இயல்பு அச்சமூட்டுவது.  இதை அம்பையிடம் பீஷ்மர் கண்டு திகைத்திருக்கிறார். குந்தியிடம் பாண்டு, விதுரர், அவளின் ஐந்து புத்திரர்கள் மட்டுமல்லாது அஸ்தினாபுரியின் அரசவையே கண்டு அதிர்ந்திருக்கிறது. திரௌபதியின் உள்ளே இருக்கும் இந்த உலோகம் கூரிய வாளாக வெளிவந்து உயிர்களை பலி கொள்ள காத்திருக்கிறது. சிறிது முன்னர் இந்த உலோகத்தை, சியமந்தக மணியை திரும்பக் கொணர உண்ணா நோன்பிருந்த பாமாவிடம் கண்டோம்.
     
இருவகையான ஆண்கள் இருகிறார்கள். ஒருவகையினர், அதுபோன்ற உலோகம் வெளிப்படும் நேரத்தில்  மனைவிக்கு பயந்து அவள் சொல்படி நடப்பவர்கள். கண்ணனைப்போல அதுபோன்ற சமயத்தில் காலில் விழுந்து சரணடைந்து விடுவார்கள். மற்றொருவகையினர்  அதை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பவர்கள்.  நான் கண்ணனை வழிகாட்டியாக கொண்டவன்.

தண்டபாணி துரைவேல்
Posted by ஜெயமோகன் at Wednesday, July 29, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கதைமானுடர்

அன்புள்ள ஜெயமோகன்,

 நான் உங்கள் தளத்தை கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். நான் சில வருடங்களுக்கு முன் எனது அலுவலகத்துக்கு செல்லும் நேரத்தை வீணடிக்காமல் இருக்கவே புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன். முதலில் உங்கள் அறம் புத்தகமே என் இலக்கிய ஆர்வத்தை தூண்டியது. அதன் பிறகு உங்கள் வளைத்தளத்தின் அனைத்து கட்டுரைகளையும் கதைகளையும் தேடி தேடி படித்தேன். உங்கள் பிற புத்தகங்கள் விஷ்ணுபுரம், வெள்ளை யானை, ஆகியவற்றையும் படித்து உள்ளேன். வெண்முரசு தினமும் படித்து கொண்டு இருக்கிறேன். ஆரம்பத்தில் மகாபாரதத்தின் மேல் ஒரு வெறுப்பே இருந்தது. ஏனென்றால் பல நண்பர்களை போல் நானும் அதை பற்றி ஒன்றும் தெரியாமலே வெறுத்தேன் (இளமையின் பெரியாரியமும் ஒரு காரணம் தான் போலும்). சரி படித்து பார்ப்போமே என்று ஆரம்பித்த பின்பு  இந்த கதை களஞ்சியத்தில் மூழ்கி திளைக்கிறேன். இப்பொழுதெல்லாம் தெரிந்த மனிதர்களையும் மகாபாரத கேரக்டராக யோசித்து ரசித்து கொள்கிறேன். வீட்டில் வளர்த்த கண் தெரியாத மீனுக்கு திருதராஷ்டிரன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு சென்று விட்டது.
 உங்கள் உழைப்பும் முக்கியமாக உங்கள் பயணங்களும் மிகுந்த ஊகத்தை கொடுக்கிறது. இந்த வருடம் நான் சில முக்கியமான பயணங்களை மேற்கொள்ள உங்கள் பயணங்கள் மிகுந்த உதவியாய் இருந்தது. உங்கள் உதவியால் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தேன். உங்கள் கனடா, அமெரிக்க பயணங்கள் இனிதே அமைந்ததற்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன் ,
அருண் ஆனந்த்
சென்னை
Posted by ஜெயமோகன் at Wednesday, July 29, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, July 28, 2015

இன்னொரு கம்சன்

ஆசிரியருக்கு,

சிசுபாலன் முதலில் ருக்மணியை அணுகி தோற்ற  பின் தான்  பாமையை அணுகுகிறான் என கதையின் காலக் கோட்டை வைத்து ஊகிக்கிறேன். அனைத்தும் சாதகமான சூழலில் ருக்மணி நழுவுகிறாள் என்றால் பாமையிடம் நுழையவே மறுக்கப் படுகிறது. 

இருவரிடமும் உள்ளார்ந்துள்ள கிருஷ்ணன் தனது செயலை  நிகழ்த்துகிறான். இங்கு சிசுபாலன் இன்னொரு கம்சனாக தோற்றம் கொள்கிறான்.  தோற்றாலும் கிருஷ்ணன் கையால் ஒரு கடைத்தேற்றம்.

பார்க்காத துவாரகையை உணர்கிறாள் பாமை என்றால் பார்க்காத கிருஷ்ணனை நினைவில் மீளும் அந்த சூதனின் பாடலால்  உணர்கிறாள் ருக்மணி. அழகான இணைப்பு இது.     

கிருஷ்ணன்.     
Posted by ஜெயமோகன் at Tuesday, July 28, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தமையன்

"ருக்மி அவள் அருகே வந்து கனிந்து ஈரம் படர்ந்த குரலில் “தங்கையே, இதுநாள்வரை உன்னை நான் பிறிதென எண்ணியதில்லை. சேதி நாட்டரசருக்கு உன் கையை வாக்களிக்கையில்கூட உன் சொல் என் சொல்லென்றே எண்ணினேன். நீ இதுவரை கண்டிராத எவர் பொருட்டோ என்னையும் உன் தந்தையையும் இவ்வரசையும் துறக்கிறாய். பித்து கொண்டாயா? எங்ஙனம் பேதை என்றானாய்?” என்றான்."  

காலங்காலமாய், பெண்மை தான் விரும்பிய ஆண்மையுடன் இரத்த உறவுகளைப் புறந்தள்ளி, வெளியேற விழையும்போது, அக்குடும்பத்து ஆண்கள் படும், கடும் அகத்துன்பம் இது. அழுகையை கைக்கொள்ளல் ஆண்மையின் இலக்கணமல்ல என்று நம்பும் ஆண்மனது தடுமாற, கையறு நிலையில், ஆணிலிருந்து வேதனையின் உச்சத்தில் வெளிப்படும் சொற்களே இவை.

கணபதி கண்ணன்
Posted by ஜெயமோகன் at Tuesday, July 28, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, July 27, 2015

வெண்முரசு யூ டியூபில்

வெண்முரசை யாரோ ஒருவர் வாசித்து பதிவு செய்து யூட்யூபில் ஏற்றி கொண்டிருக்கிறார். அத்தியாயங்களை முழுமையாக படிப்பதாக தெரியவில்லை. 

https://www.youtube.com/watch?v=Ge41C4j0Zzc
Posted by ஜெயமோகன் at Monday, July 27, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

நாயகன்

ஆசிரியருக்கு,

நேற்றைய பகுதியின் சடங்குகளுடன் இணைத்து இன்றைய பகுதியைப் படித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. வெண் முரசின் சிறப்பம்சமே இதில்  இழி மகன் என எவரும் இல்லை.

வானுயர்ந்த தலைக்கனத்துடனும், இகழ்சியுடனும் சிசுபாலனின் வரவு முகச்சுளிப்பை உண்டாக்கியது , இது குடிகளின் வாழ்த்துரையிலும் வெளிப்பட்டது. பலமுறை சொல்லி இருந்தாலும் - (நாடு என்பது மணிமுடியும் செங்கோலுமாக கைக்கு சிக்குவது. மண்ணும் நதிகளுமாக விழி தொடுவது. முறைமைகளும் நெறிகளுமாக சித்தம் அறிவது. ஆனால் நம்முன் நிறைந்திருக்கும் குடிகளின் உளமென பெருகித் திகழ்வது. அந்தத் தெய்வம் எளிதிலேற்பதில்லை)  என்கிற நேற்றைய பகுதி மிகச் செறிவானது. 

குடிகளின் அத்தனை புறக்கணிப்பையும் தன் ஒரே பெருஞ்  செயலால் ஊமையாகினான் சிசுபாலன். இப்பகுதியில்  இலக்கியச் சுவை கொப்பளித்தது. திறம்படச் சொல்வதல்ல, திறம் வாய்ந்த சம்பவ அமைப்பே இலக்கியத்தின் அடிப்படை.       

வலுவும் வீரமும் அமைத்துள்ள இடம் தன் கழுத்தில்  செருக்கை அணிந்து கொள்ள உரிமையுடையது.  

கிருஷ்ணன்.     
Posted by ஜெயமோகன் at Monday, July 27, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

வில்

அன்புள்ள ஜெமோ,

தங்களை ஸான் ஹொஸேவில் சந்தித்தது பெரு மகிழ்வு அளிக்கும் நிகழ்வாகும்.
 
இன்று இணையத்தில் எனக்குக்கிடைத்த பொக்கிஷம் இது தான்.
 
நகர்மயமாகி வரலாற்றுடன் தொடர்பற்ற ஸியோல் நகர 
வாலிபன் தன் மூதாதையருடன் தொடர்பு கொள்ளும் ஓர் அற்புத அனுபவம் இதில் உள்ளது.
தவிர வில்லைப்பற்று நீங்கள் வெண்முரசில் சொன்ன பல விஷயங்களை இந்த வாலிபன்
மீள நினைவுறுத்துகிறான். மூதாதையர் குரல் எப்போதும் ஓய்வதில்லை போலும்,
நம் செவிகள் கேட்காத போதும்..
 
http://www.ted.com/talks/dong_woo_jang_the_art_of_bow_making

நன்றிகளுடன்,
ஜெய்கணேஷ்
Posted by ஜெயமோகன் at Monday, July 27, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, July 26, 2015

உண்டாட்டு

எதிர்பார்த்தபடியே உண்டாட்டு அத்தியாயம் பிரமாதம். கொண்டாட்ட மனநிலையை அப்படியே வடித்துவிட்டீர்கள். சூதன் பாடும் ஒரு வரியில் ருக்மணி கண்ணனைக் கண்டடைவதும் அற்புதமாக இருந்தது.

தனக்குரியவனை(ளை)க் கண்டடையும் தருணம் என்பது அம்பை-பீஷ்மரிலிருந்து, அம்பிகா-விசித்திரவீர்யனிலிருந்து, பீமன் - இடும்பியிலிருந்து, பாமா-கிருஷ்ணன் வரை மிக அற்புதகமாக வந்திருக்கிறது. அதைத் தொடந்திருக்கிறீர்கள்...

படித்து முடித்த பிறகு இப்படி ஒரு உண்டாட்டில் என்னால் உட்கார முடியுமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். மனவிலக்குகள் நீங்கி கொண்டாடுவது அவ்வளவு சுலபம் இல்லை! முதல் ஹோலியின்போது கழுவ எத்தனை நேரம் ஆகும் என்றுதான் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது...

அன்புடன்
ஆர்வி
Posted by ஜெயமோகன் at Sunday, July 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

குறுக்கல்

அன்புள்ள அருணாச்சலம்,

அம்பை சார்ந்த கருத்து அவரவர் கற்பனையை பொறுத்தது. அதை பகிர்ந்து கொள்வது மட்டுமே முடியும். அதை இருவரும் செய்துவிட்டோம்.

கதாப்பாத்திரங்களை உன்னதமாக்குகிறோம் என்று சொல்லவில்லை எளிமைபடுத்துகிறோம் என்று தான் சொன்னேன். உன்னதமாக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை அல்லது கருத்தை அதன் உச்சத்துக்கு கொண்டு வைப்பது. உன்மையில் வெண்முரசு சில கதாப்பாத்திரங்களை உன்னதமாக்குகிறது, ராதை, அம்பை, துருபதனின் வஞ்சம் போன்றவைகளை அதன் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறது. ஆனால் கதாப்பாத்திரங்களை ஒற்றைப்படையாக பார்த்தால் நாம் அதை குறுக்கிகொள்கிறோம்.

மேலும் வெண்முரசு அனைவரையும் நல்லவராகவோ, கெட்டவராகவோ காட்டுகிறது என்று நான் சொல்லவில்லை. முக்கிய கதாப்பாத்திரங்கள் பிறப்பிலேயே கெட்டவர்களாக சித்தரிக்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்வில் ஒரு நிலையில் உருமாற்றம் அடைகிறார்கள். அதற்கான காரணம் அங்கு தெளிவாக கூறப்படுகிறது என்று தான் சொன்னேன். கதாப்பாத்திரங்களை எளிமையாக காட்டுவதில்லை சிக்கல் நிறைந்தவர்களாகவே காட்டுகிறது. கர்ணனை நிராகரிக்கும் குந்தியும், அவனை அடித்து உதைக்கும் பீமனும் ஏன் அப்படி செய்தார்கள் என்ற கேள்வி பெரிதாய் நம் முன் இருக்கிறது. பீமனின், குந்தியின் இயல்புக்கு எதிராகவே இந்த செயல்பாடு இருக்கிறது.

//வெண்முரசு உணர்த்த முயல்வது ஒன்றே ஒன்று தான். மானுடம் இனிமையானது. //
இப்படி குறுக்கிகொள்வது பற்றி தான் ஜெ அன்மைய பல உரைகளில் பேசியிருக்கிறார் இது வெண்முரசின் திரண்ட கருத்தாக எடுத்து வைக்கிறீர்கள். இதற்கும் நீலத்தின் ராதைக்கும் என்ன சம்பந்தம்? தருமனின் குழப்பங்கலுக்கும், அர்ஜுனனின் தேடலுக்கும், சகுனியின் வஞ்சத்துக்கும், கர்ணனின் அவலங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது நீங்கள் நாவலில் கண்டடைந்த முழுமை பார்வையாக இருக்கலாம். அது அகவயமானது. அதை புறவயமாக வெண்முரசுடன் தொர்ப்பு படுத்தமுடியாது.

ஹரீஷ்
Posted by ஜெயமோகன் at Sunday, July 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இருகேள்விகள்- மேலும்

அன்புள்ள ஹரீஷ்,

நீங்கள் இரண்டு கேள்விகளை விதைத்துள்ளீர்கள்.

 அ
1. அம்பையின் வஞ்சம்
2. கதாபாத்திரங்களை உன்னதமாக்கல்


1. அம்பையின் வஞ்சம்: அம்பை பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என சிகண்டியிடம் வேண்டுவது அவளது தாள முடியாத வஞ்சத்தால் அல்ல, அவர் மீது கொண்ட பெருங்காதலால் தான். வஞ்சங்கள், வெறுப்புகள் போன்ற எதிர் உணர்வுகள் நிறைவை நல்காது. வஞ்சமுரைத்து பழி வாங்கிய எவரும் அந்த உச்சம் உடைந்த பிறகு தீராத் தனிமையிலும், தாங்கவியலா சுய இரக்கத்திலும் மட்டுமே உழல்வர். மழு ஏந்திய பரசுராமன் இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் அம்பை நிறைவுடனேயே தீ புகுகிறாள். வஞ்சத்தால் அழிவை வேண்டியவளாக இருந்தால் பீஷ்மரை மீளா நரகில் தள்ளும் படியான ஒரு மரணத்தை அவருக்கு அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பாள். ஆனால் சிகண்டி பீஷ்மர் யாரென்றே அறியாமல் அவரைக் கொல்வதாக வாக்களித்த பிறகு, அவனிடம் அவரைப் போரிலே கொல்ல வேண்டும் என்று கேட்கிறாள். துவந்த யுத்தத்தில் அவரை வீழ்த்தி அவர் வீரசொர்க்கம் அடைய வேண்டும் என்றே அவள் விழைகிறாள். அவர் முழுமை கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறாள். வெறும் வஞ்சம் இதை வேண்டாது. வஞ்சத்தின் விளைவுகளை துருபதனிடம் துரோணர் நடந்து கொள்ளும் விதத்திலும், அஸ்வத்தாமனும், கிருதவர்மனும், கிருபரும் ஆடப் போகும் கொலைவெறியாட்டத்தில் பார்க்கலாம்.


இன்னுமொன்று, அம்பை தன் நெஞ்சையறைந்து வெளியேறிய அக்கணமே பீஷ்மர் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்ற கடைசி ஆசையையும் உதறிவிட்டார். அவர் தன்னைக் காக்க, தன்னை மணங்கொள்ள முன்வரும் உர்வரையிடம், 'பெண்ணின் அன்பைப் பெறாதவன் பிரம்மஞானத்தாலேயே அந்த இடத்தை நிறைத்துக் கொள்ள இயலும். ஆனால் நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழி சூழ்ந்தவன்.' என்றே சொல்கிறார். பழியிலிருந்து மீள அவருக்கிருக்கும் ஒரே வாய்ப்பு வீரனுக்குகந்த மரணம். அம்மரணத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்றே சிகண்டியிடம் வேண்டுகிறாள் அம்பை. நன்றாகப் பார்க்க வேண்டும், அவள் ஆணையிடவில்லை. மாறாக எனக்காக செய் மகனே என இறைஞ்சுகிறாள். இது வஞ்சமல்ல என்று என்னை எண்ண வைத்த இடம் இது தான். வஞ்சத்தால் வழிநடத்தப்பட்டவள் பாஞ்சாலன் படையெடுக்க முன் வரும் போது அவனை வாழ்த்தி நகர் நீங்கியிருக்க மாட்டாள்.


மேலும் அவள் இறப்பைத் தேர்ந்தெடுப்பது, காசி மன்னன் பீமதேவன் தன் புது பட்டத்தரசியை வங்கத்திலிருந்து கொள்ளும் போதே. அவளுக்கென்று இருந்த கடைசி உறவும் அறுந்த பிறகே. அவள் சிதையேறுவது அஸ்தினபுரிக்கு அருகில் இருக்கும் காட்டில். ஏன் அஸ்தினபுரி? அது அவள் கொழுநன் பூமி. தட்சனால் துரத்தப்பட்ட தாட்சாயணி, தன் கணவனைச் சேர தேர்ந்த வழியன்றோ எரிபுகுதல். அவள் சுயம்வரத்தின் முன் கேட்கும் கதையும் தாட்சாயணியுடையது தானே!!!


தன் இறப்பிற்கு அஸ்தினபுரியைத் தேர்ந்தெடுத்தது அவளது ஆழ்மனம். அங்கிருந்தது பெருங்காதலே! அவள் கொண்ட வஞ்சம், அவள் நெஞ்சில் அணையாக் கனலாகி அவள் உடலை எரித்தது. அந்த வஞ்சத்தின் வதையிலிருந்து மீள இயலாததாலேயே அவள் முடிய விழைகிறாள். அத்தருணத்தில் தான் சிகண்டியை பீஷ்மரைக் கொல்லப் பணிக்கிறாள். தான் கொண்ட வஞ்சத்தால் தன்னையும், தான் கொண்ட பெருங்காதலால் பீஷ்மரையும் அழிக்கிறாள் அவள். 


"பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும்" என்று இதைத் தான் தீர்க்கசியாமரும் விசித்திரவீரியனுக்கு கூறுகிறார்.


2. கதாபாத்திரங்களை உன்னதமாக்கல்: இங்கே கதாபாத்திரங்களின் எதிர் உணர்வுகளை நியாயப்படுத்தவில்லை. வெண்முரசும் எவ்விடத்திலும் அதைச் செய்யவில்லை. உண்மையில் நூறு சதவித தீமை என்ற ஒன்று இருக்க வாய்ப்பேயில்லை என்பதையே வெண்முரசு மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது. தன்னைக் காக்க பச்சிளம் குழந்தைகளைப் பலியிடும் கம்சனிடம் கூட எஞ்சிய நீலக்குருவியைக் காட்டும் காவியமே இது. தான் முடிசூட வாரணவதத்தை நிகழ்த்திய துரியனின் உளச் சோர்வையும், சுய அழிவையும் காட்டுவதால் அவன் செய்தது நியாயம் என்று கூறுவதில்லை வெண்முரசு. துருபதன் ஐங்குலம் முன்னால் தான் அறவான் தான் என நிரூபிக்க துரோணரை அடையாளச் சிக்கலுக்கு உட்படுத்துவதால் அவன் தரப்பு நியாயமானது என வாதிடுவதில்லை வெண்முரசு. 


மாறாக இத்தருணங்களில் எல்லாம் அவர்களின் தரப்பையும் நம்மைக் காண வைப்பதன் மூலம் மானுடரை முழுமையாகக் காட்ட முயல்கிறது வெண்முரசு. எவரும் தீமை மட்டுமே கொண்டவரல்லர், அதே போல் எவருமே நன்மை மட்டுமே உடையவரல்லர். நன்மையும் தீமையும் கலந்தவரே அனைவரும். மற்றவரிடம் உள்ள நன்மையைக் காண்பதும், தீமையைக் காண்பதும் நம்மிடம் உள்ள நன்மை, தீமைகளைப் பொறுத்ததே என்பதையே வெண்முரசு நமக்கு அறியத் தருகிறது. எனவே தான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தவனாக கர்ணனைக் காட்ட மறுக்கிறது வெண்முரசு. மாறாக அதை ஓர் பேரறமாக, ஓர் நல்விழுமியமாக முன்வைக்க முயல்கிறது அது. இது உன்னதமாக்கல் அல்ல. ஒருவகையில் அறம் என்பதன் காட்சியாக்கல். விழுமியங்களை நிலைநாட்டல். 

மீண்டும் மீண்டும் நாம் கருப்பாகவே கண்ட கதாபாத்திரங்களை நன்மையும் கொண்டவர்களாகக் காண்பிப்பது அவர்களை வெண்மையாக்க அல்ல. வெண்முரசு நாம் வெண்மையாகக் கண்டவர்களைக் கூட மங்கலாக்கக் கூடிய தருணங்களால் ஆனது தான். வெண்முரசு உணர்த்த முயல்வது ஒன்றே ஒன்று தான். மானுடம் இனிமையானது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
Posted by ஜெயமோகன் at Sunday, July 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பழிமூலம்

ஆசிரியருக்கு ,

மகா பாரதத்தில் சபையில் சிசுபாலனை கிருஷ்ணன் கொன்றது, ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றதற்கு நிகர். அடிப்படையில் தந்திரங்களற்ற ராமன் வாலியைக் கொன்றது ஒரு பிறழ்வு.

அடிப்படையில் தந்திரசாலியான கிருஷ்ணன் சிசுபாலனைக் கொன்றது ஒரு நீதிப் பிறழ்வல்ல என்கிறது வெண் முரசு.  அதற்கான முஸ்தீப்புகள் சிசுபாலன் பாமையை நாடுவது முதல் இன்று ருக்மணி வரை எழுப்பப் பட்டிருக்கிறது. இது ஒரு அபாரமான புனைவு யுக்தி.

தன்னுள் இருக்கும் பெண்ணும் , பெண்ணுள் இருக்கும் ஆணும் தன்னைத் தான் கண்டு பூப்பது  ஒரு  இலக்கிய தியான  அனுபவம்.  

கிருஷ்ணன்.        
Posted by ஜெயமோகன் at Sunday, July 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, July 25, 2015

அரசியலில் அலைகழிக்கப்படும் பெண்கள்.


       மன்னர்களின் அரசியலிலிருந்து, குலங்களின் அரசியல், மதங்களின் அரசியல்  சாதிகளின் அரசியல், குடும்ப உறவுகளின் அரசியல், பணக்காரர்களின் அரசியல், படித்தவர்களின் அரசியல் என அனைத்தும்   ஒரு பெண்ணின் திருமணத்தை பாதிப்பதாக இருந்துவருகிறது.

   ஆணுக்கு இந்த பாதிப்பு இல்லையா? பெரும்பாலும் இல்லை, அல்லது பெண்ணைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக மட்டுமே ஆணுக்கு உள்ளது. ஒரு பெண்,  படிக்காத ஒருவனை, தன்னைவிட வசதி குறைவானவனை, தன் குடும்பத்தினர் விரும்பாத ஒருவனை , வேற்று சாதியைச் சார்ந்தவனை, வேற்று மதத்தினை சார்ந்தவனை திருமணம் செய்ய விழைந்தாள், அவள் சமூகம எப்படி எதிர் வினை புரிகிறது என்பதைக் காண்கிறோம். பெண்ணின் விருப்பம் என்பது இடது கையால புறந்தள்ளப்படுகிறது.  இது, ஆண் விஷயத்தில்  அவன் சமூகம்  காட்டும் எதிர்ப்புக்கு, பல மடங்கு அதிகம்,
.

       வயதானவனா, பல பெண்களை முதலிலேயே மணந்திருப்பவனா, தன் மகள் விரும்பும் அழகுள்ளவனா, அறிவுள்ளவனா, பண்புள்ளவனா என எதைப்பற்றியும் சிந்திக்காமல், தன் அரசியலுக்கு பலனளிக்குமா என்பதைமட்டுமே கவனத்தில் கொண்டு மன்னர்கள்   தம் பெண்களுக்கு வரன்களை பார்க்கிறார்கள். ஒரு ஒப்பந்தம் போல், ஒரு பரிசைப்போல், ஒரு அபராதத்தொகைபோல் அல்லது ஒரு காணிக்கைபோல் தம் மகளை ஒருவனுக்கு கையளிக்கிறார்கள்.  

  எளிய ஏழைக் குடும்பங்களில் குறைவாக உள்ள இந்த அநீதி,   படிப்படியாக அதிகரித்து மன்னர்களின் குடும்பத்தில் உச்சத்தில் இருக்கிறது.  பெண்களின் திருமண சுதந்திரம், குடும்பத்தின் சமூக அந்தஸ்து உயர உயர,  வெகுவாக குறைந்துகொண்டே போகிறது.  

 ஆணின் விதை விழுந்து  முளைத்தெழும் நிலம் என பெண்ணை கருதுகிறார்கள். குழந்தை முழுதுமாக தந்தையின் ரத்தம். தந்தையின் வாரிசு, தந்தையின் வழிதோன்றல் என்றே மனிதர்கள் கூறிவருகிறார்கள். ஒரு குழந்தையின் அனைத்திற்கும் சரிபாதி உரிமை உடையவள் தாய் என்பது கவனத்தில் கொள்ளப்படுவது இல்லை. அவளை ஆணின்  குழந்தையை பெற்று வளர்க்கும் வெறும் கருப்பை எனமட்டுமே கருதி கையாள்கிறார்கள். 

அவளை மணம்புரிந்த மன்னனும் அவளை தனது முழுதான உடைமை, தனக்கேயான, தன் மானம் காத்துவைக்கப்படும்  ஒரு பெட்டகம் எனக்கொள்கிறான். அதனால் எதிரி மன்னன் இவனை வெல்லும்போது இவனை இழிவு படுத்துவதற்கு இவன் மனைவியை இழிவு படுத்த வேண்டும் என நினைக்கிறான்.

 ருக்மணியின் அண்ணன் தன் தங்கையை வைத்து அரசியல் செய்ய நினக்கிறான். ருக்குமணி பாமாவைப்போல்        தன் துணிவால், மதி நுட்பத்தால், நல்லூழால்,  இந்த அரசியல் ஆட்டத்தில் அலைகழிக்கப்படாமல் தப்பித்துவிடுவாள் என நினைக்கிறேன்.  சில பெண்கள்  இன்னும் சாமர்த்தியமாக அந்த ஆட்டத்தை தானும் எடுத்து விளையாடுகிறார்கள் - குந்தி, திரௌபதிபோல. ஒரு சிலர் வீறுகொண்டு எழுந்து இந்த அநீதியை தட்டிகேட்கிறார்கள் அம்பையைபோல.  வெண்முரசு   ஆண்களின் அகங்கார சூதாட்டத்தில் பெண்கள் சிறைபிடிக்கப்பட்டும் வீழ்த்தப்பட்டும்  ஏமாற்றப்பட்டும்   அலைகழிக்கப்படுவதை  கூர்மையாக  சொல்லிச் செல்கிறது, ஒருவேளை இதுதான் வெண்முரசுவின் நோக்கமோ என எண்ணத் தோன்றுகிறது. 


Posted by ஜெயமோகன் at Saturday, July 25, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இரு கேள்விகள்


நான் பொதுவாக கவனித்ததில் நாம் சில சமயம் கதாப்பாத்திரங்களின் சிக்கலை உள்வாக்கி கொள்ளாமல் ஒருவாறு ஒற்றைபடையாக்கிவிடுகிறோமோ என்று தோன்றியது. எல்லோரும் நல்லவர்கள், நல்லதுக்காகவே செய்கிறார்கள் என்று சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.

இப்படிப்பட்ட பார்வை பொதுவாக அம்பை, சகுனி, திருதராஷ்டிரன், துரியோதனன் போன்ற கதாப்பாத்திரங்கள் மேல் வைக்கப்படுகிறது.  இதற்கு ஏதோ ஒரு வகையில் வெண்முரசு கதை அமைப்பும் காரணமாகிவிடுகிறது. ஏனெனில் வெண்முரசின் எதிர்மறை கதாப்பாத்திரங்கள் யாரும் பிறவியிலேயே எதிர்மறை தன்மையுடன் இருப்பதில்லை - பிரயாகை வரை நான் படித்ததில். அந்த கதைமாந்தர்களுக்கு வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் நடக்கும் ஒரு அவலம் அவர்களை உருமாற்றுகிறது.

இன்னொன்று, ஏதோ ஒருவகையில் பாத்திரங்கள் நம்மை தொடக்கத்தில் கவர்ந்துவிடுகிறது. அந்த பாத்திரங்கள் ஒரு எதிர்மறை தன்மையை பெற்று கொள்ளும் போது அதை அப்படி பார்க்க நம்மால் முடிவதில்லை. ஆனால் இந்த கதாப்பாத்திரங்களின் மாற்றத்திற்கான ஆதார காரணங்களை கண்டறிய வேண்டும். அப்படி ஆராய்வதின் மூலம் மானுடத்தின் உன்மைகளை, தன்மைகளை நம்மால் இந்த படைப்பிலிருந்து எடுக்கமுடியும்.
----

பீஷ்மரின் நிராகரிப்பு அம்பையிடம் அம்பை என்ற வகையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் விளைவு இப்படியிருந்திருக்காது. ஆனால் அந்த நிராகரிப்பு அம்பை என்றவளையும் தாண்டி அவளிள் ஆழத்தில் உறையும் அந்த பெண் எனும் உயிர் சக்தியை சென்று தாக்குகிறது. அதை விளைவாக இந்த வஞ்சம் விளைகிறது.

சுநீதிக்குள் இருந்து அந்த தாய்மை விஸ்வரூபம் எடுப்பது போல், இங்கு அம்பைக்குள்ளிருந்த அந்த பெண் என்ற பெரும் சக்தி விஸ்வரூபம் எடுக்கிறது. அவளது அந்த பெரும் கோபம் பாலையின் பெருந்தகிப்பு. ஆணின் அகந்தையை விட பெண்னின் அகந்தை அதிகமோ என்று நினைக்கவைப்பது அது. ஏனெனில் அந்த அகங்காரம் ஒன்று நான்காகி நான்கு ஒரு பெரும் பெருக்காகும் அகங்காரம். அந்த அகங்காரத்தை நசுக்கும் போது அதிலிருந்து முளைக்க இருந்த விதைகள் அனைத்தும் பெருவடிவம் எடுக்கும் பேயாகிறது.

ஹரீஷ்
Posted by ஜெயமோகன் at Saturday, July 25, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

யோகப்படிமம்

ஆசிரியருக்கு,

எனக்கு மிகவும் பிடித்த படிமம் எனது இளவயது அனுபவம்.  அது நான்  முதன் முதலில் என் ஊரில் உள்ள குளத்தில் குத்தித்து, மேல் தளம் வெம்மையகவும் அடித்தளம் குளுமையாகவும் இருந்தது அது. ஒரு வினோத அனுபவம், நண்பர்கள் அதனை பொருட்படுத்த வில்லை. நாளெல்லாம் அதைப்பற்றியே சொல்லிக் கொண்டிருந்தேன்.

இன்று அந்த நாட்களை நினைவு படுத்தியது. உங்களின் இயற்கை அவதானிப்பு விவரனைகள் எப்போதும் உள்ளத்தில் குளிர் நீர்க் கத்தியென இறங்குபவை. இன்றைய மலை , மழை மற்றும் புழை வர்ணனைகள்  சிலிர்க்க வைத்தது. குறிப்பாக கணுக் கணுவாக ஆழத்திற்கு  செல்லும்போது குளிர் ஏறுவது.  

ஒரு நோக்கில் இது ஒரு யோக அனுபவம். மேலே வெம்மையும் அடியில் குளுமையும் இது ஒரு யோகப் படிமம். 

கிருஷ்ணன்            
Posted by ஜெயமோகன் at Saturday, July 25, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, July 24, 2015

வெண்முரசில் காமம்


அ௫னா, வென்முரசு விவாத தளங்களை படிக்க ஆரம்பித்ததிலி௫ந்து நான் உங்களை தீவிரமாக ரசித்து வாசித்து வ௫கிறேன்.. .  நாம் கூடுகையில் விவாதித்து போல, அம்பை பீஷ்மரை கொல்ல துடிப்பது அவளின் காதலின் உச்சம் என பொ௫ள் கொள்வது ஒ௫ காவியதன்மைக்கு வேன்டுமானால்  நன்றாக இ௫க்கும்..ஆனால் அவளுள் இ௫ந்த்து தீரா வஞ்சமே... காமத்தின் மூலம் ஏற்படுவது ஒ௫ பெ௫ம் வேட்கை, அது அடையாமல் போனால் உள்ளத்தில் எரிவது வஞ்சம் என்ற பெ௫ம் நெ௫ப்பு.. இது இக்காவியத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அது எரிந்து கொன்டி௫க்கிறது.. இந்த அனையா வஞ்ச நெ௫ப்பின் "முதற்கனல் " தான் அம்பைக்கு பீஷ்மர் மேல் ஏற்பட்ட பெ௫ம் வஞ்சம்.. கர்ணன் தோற்று தி௫ம்பும் பொழுது அவனுக்கு காட்டபடும் சிவப்பு சேலை அந்த நெ௫ப்பின் இன்னொரு கனல்.. தான் மிகவும் நேசிப்பவர்களிடம் ஏற்படும் ஏமாற்றம் கொடிய வஞ்சமாக உ௫மாறுகிறது.. துரியனுக்கு இந்திரபிரஸ்த சபையில் கிடைக்க போவது மற்றுமொரு கனல்.. இந்த மாபெ௫ம் நெ௫ப்பு சுழற்சியில் உ௫வானது தான் இந்த காவியமே.. (வென்முரசில் ஒவ்வொரு கதாபாத்திரத்தி௫க்கு ஏற்ப அவர்களின் காம விழைவு அழகாக சித்திரிக்கபட்டு வ௫கிறது... இது பற்றி ஒ௫ தனி தலைப்பாகவே எழுத முயற்சித்து வ௫கிறேன்)...


ரகுராமன்
Posted by ஜெயமோகன் at Friday, July 24, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பருவங்கள்

ஆசிரியருக்கு,

இன்றைய பகுதி ஒரு விழி விருந்து. ராதை, ஜாம்பவதி , ருக்மணி, பாமை என ஒவ்வொருவரும் ஆண்டின் ஒவ்வொரு பருவத்திற்குரியவர்கள்.
ராதை உதிர்காலம், ஜாம்பவதி குளிர்காலம், பாமை வேனிற்காலம், ருக்மணியே வசந்தகாலம்.  

இன்னொரு நோக்கில் இந்த ஒவ்வொருவரும் பெண்ணின் ஒவ்வொரு பருவத்திற்கும் உரியவர்கள். ராதை பதின்மம், ஜாம்பவதி முன்னிளமை, பாமை இளமை, ருக்மணி பின்னிளமை.            
கிருஷ்ணன் அணைத்து பருவங்களையும் உறையவைத்து ஒவ்வொரு பருவமாக ஒளிரும்  ஒரு நீலக்கல்.   

கிருஷ்ணன்.     
Posted by ஜெயமோகன் at Friday, July 24, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

முடியுரிமை

அன்புள்ள ஜெ.

சமீபமாக வெண் முரசு விடாது படித்து வருகிறேன்.

பாமையை யாதவப் பேரரசி எனக்கொண்டாடும் அத்தியாயங்களைப் படித்த போது, ஏன்
ருக்மணி யாதவப் பேரரசி இல்லையா எனும் கேள்வி எழுந்தது. சியமந்தக மணி
மீட்பைத் தொடர்ந்து வந்த அத்தியாயங்களில் அதற்கான விடை தெளிவுறக்
கிடைத்து விட்டது. சுவாரசியமான அந்த நாடகம் தொடர்கிறது. இருப்பினும் வேறு
ஒரு கேள்வி என் மனதில் உள்ளது.

தகுதியுள்ள மூத்தவரே பட்டத்துக்கு உரியவர் எனும் முறைமை மஹாபாரதத்தின் பல
தளங்களிலும் அழுத்தமாக முன் வைக்கப்படுகிறது. பாண்டவர்களில் அர்ஜுனன் அதி
முக்கியமானவனாகவும், பிரதான காப்பாளனாகவும் இருப்பினும், தருமரே
முறைமையின்படி அரசராக முன் நிறுத்தப்படுகிறார்.

யாதவ குலக்குடிகளுக்கு இளைய யாதவர்தான் காப்பாளரும், எல்லாமும். அதற்குக்
காரணங்கள் பல உண்டு. அவை சரிதான். சபைகளிலும் அவர் கருத்து அதி
முக்கியமானது. அதுவும் சரிதான். ராஜ்ய பரிபாலனம், மற்றும் போர்களில்
பலராமரும், இளைய யாதவரும் இணைந்து பங்காற்றுவதும் இயல்பானதே. ஆனால்
முறைமை என்று பார்த்தால், பலராமரின் மனைவி ரேவதிதானே யாதவப்பேரரசி.

இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்


அன்புள்ள ரமேஷ்கிருஷ்ணன்

மதுராவும் துவாரகையும் தனித்தனி நாடுகளாகவேஇருந்தன. பலராமர் மதுராவின் அரசர். கிருஷ்ணன் துவராகையை நிறுவி தனியரசு செய்தார்.

இது ஒன்றே விளக்கமெனச் சொல்லலாம். மற்றபடி பாகவதம் அப்படித்தான் சொல்கிறது

ஜெ
Posted by ஜெயமோகன் at Friday, July 24, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, July 23, 2015

நான்கு வினாக்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வெண்முரசு குறித்து சில விஷயங்கள்.

1) கண்ணனின் காதலிகள் அனைவரும் மழை மூலம் கண்ணனை நெருங்குகிறார்கள். ராதை(நீலம்), சத்யபாமா, ஜாம்பவதி மற்றும் ருக்மணி அனைவரும். இதனால் தான் "கார்மேக"வண்ணனோ ?

2) கிருஷ்ணவபுஸில் சததன்வாவின் காதலி, கண்ணனை மனதார நினைப்பதாக சொல்கிறாள். ஆனால் தன் காதலனுக்காக இழிநரகம் கூட செல்வேன் என்கிறாள். இது என்ன மன நிலை? இருவரையும் நினைக்கிறாளா?

3) இந்திரநீலம்-51, ஆற்றில் உள்ள வெப்ப அடுக்குகள் பற்றி வந்தது. இப்போது தான் இதை பற்றி கேள்விப்படுகிறேன். இணையத்தில் தேடிய போது தான் இதன் அறிவியல் தகவல்கள் தெரிந்தது.
http://www.lakeaccess.org/ecology/lakeecologyprim4.html
https://en.wikipedia.org/wiki/Lake_stratification

4) மகதம் அஸ்தினாபுரிக்கு இணையான பெரிய ராஜ்ஜியம் என்று அடிக்கடி வருகிறது. அவர்களின் வரலாறும் வருமா?

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
 
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வெண்முரசு குறித்து சில விஷயங்கள்.

1) கண்ணனின் காதலிகள் அனைவரும் மழை மூலம் கண்ணனை நெருங்குகிறார்கள். ராதை(நீலம்), சத்யபாமா, ஜாம்பவதி மற்றும் ருக்மணி அனைவரும். இதனால் தான் "கார்மேக"வண்ணனோ ?

2) கிருஷ்ணவபுஸில் சததன்வாவின் காதலி, கண்ணனை மனதார நினைப்பதாக சொல்கிறாள். ஆனால் தன் காதலனுக்காக இழிநரகம் கூட செல்வேன் என்கிறாள். இது என்ன மன நிலை? இருவரையும் நினைக்கிறாளா?

3) இந்திரநீலம்-51, ஆற்றில் உள்ள வெப்ப அடுக்குகள் பற்றி வந்தது. இப்போது தான் இதை பற்றி கேள்விப்படுகிறேன். இணையத்தில் தேடிய போது தான் இதன் அறிவியல் தகவல்கள் தெரிந்தது.
http://www.lakeaccess.org/ecology/lakeecologyprim4.html
https://en.wikipedia.org/wiki/Lake_stratification

4) மகதம் அஸ்தினாபுரிக்கு இணையான பெரிய ராஜ்ஜியம் என்று அடிக்கடி வருகிறது. அவர்களின் வரலாறும் வருமா?

நன்றி.
 
ராஜாராம் கோவை
 
 
 
அன்புள்ள ராஜாராம்
\கண்ணனை முகிலுடன் அன்றி கற்பனைசெய்ய முடியவில்லை. முகில்வழிபாடே ஒரு கட்டத்தில் கண்ணன் வழிபாட்டுடன் இணைந்திருக்கலாம்

சததன்வாவின் மனைவி கண்ணனை தன் கணவனில் காண்கிறாள் என கொள்ளலாம். மற்றபடி எனக்கு அந்த நுட்பம் பிடிகிடைக்கவில்லை

மகதம் பின்னர் விரிவக வரும்



Rajaram Sarangapani
i_am_rajaram@yahoo.co.in

Show details
Posted by ஜெயமோகன் at Thursday, July 23, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கனவுகள்


நல்ல பதிவு அருணாச்சலம். நன்றி. [வெண்முரசில் கனவுகள்]

கனவும், மயக்கமும் நடக்கும் தருணங்கள் பெரும்பாலும் தர்க்கத்தை மீறி நடக்கும் செயல்கலுக்காக, ஒரு படிம தன்மையுடன் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்குள் நடக்கும் மாற்றங்களுக்காக, அவர்களின் குணமாற்றங்களுக்காக சொல்லப்படுகிறது. எனக்கு தோன்றிய அப்படிப்பட்ட தருணங்கள் இவை.
  • அம்பிகை வியாசருடன் கூடும் இரவில் அவள் கனவில் தோன்றும் யானை. அம்பாலிகையும் கனவு காண்பாளா தெரியவில்லை.
  • விஷம் குடித்த பீமனுக்கு தோன்றும் கனவு.
  • சகுனி, சகோதரர்களுடன் ஒரு குழியில் விழுந்து சகோதர்களின் உயிர் தியாகத்தால் பிழைத்து வருவது. இறந்தவர்களின் எழும்புகளில் இருந்து பகடை செய்வது. - இதை பற்றி ஜெ சொன்னார். இது சமண மகாபாரத்தில் வரும் கதை. இது மகாபாரத கதைக்குள் அடங்காது, ஏனெனில் சகுனியின் சகோதரர்கள் யாரும் சாவதில்லை. இருந்தாலும் இந்த கதை நன்றாக இருப்பதால் இதை கனவு காட்சியாக வைத்ததாக சொன்னார்.
  • சகுனியை கடிக்கும் ஓநாய். நாம் இருவரும் இதை பற்ற எழுதியிருக்கிறோம்.
  • https://groups.google.com/d/msg/venmurasu-readers-discussions/WWGuTS2-3sk/0x4BW90SDEAJ
  • http://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_23.html
  • துரியோதனன் ஸ்தூணகர்ணனை சந்தித்து தன்னுள் இருக்கும் பெண்மையை அடித்து கொள்ளுமிடம். இப்படி ஒரு காட்சி சிகண்டிக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  https://groups.google.com/d/msg/venmurasu-readers-discussions/b-vKqJja2ec/f2UsZ_w0DPoJ
  • வஜ்ரமுகி குருவி வரும் இடங்கள்.
  • குந்தி சூரியனுடன் கூடுமிடம்.
  • அம்பை முன் தோன்றும் மூன்று பெண் தேவதைகள்.

இப்போதைக்கு இவ்வளவு தான் நினைவுக்கு வருகிறது. வெண்முரசை பற்றி நெடுநாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.

ஹரீஷ்

Posted by ஜெயமோகன் at Thursday, July 23, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

நாம் ஏன் காதல்கொள்கிறோம்?


   திருஷ்டத்துய்மன் சுப்ரைமீது காதலில் இருக்கிறான் என்று தெரிகிறது.  ஏன்? சுப்ரை மீது காதல் ? அதற்கு அவள் அழகு காரணமா? அரசிளங்குமரனான திருஷ்டத்துய்மன் அவளைப்போன்ற அழகிகளை இதுவரை காணாமலா இருந்திருப்பான்.   அவர்கள் பழகியதில்லை, பேசிக்கொண்டதில்லை. ஒரு இரவின் குளறுபடியான சிறிய சந்திப்பு மட்டுமே. எதனால் அவனுக்கு அவள் மீது அப்படியொரு காதல்? அதுவும்  பார்க்கும் பெண்ணிலெல்லாம் அவன் அவளை காண்கிறான்.

   எந்த உணர்ச்சியும் கலக்காமல் அறிவுபூர்வமாக மட்டும் கொண்டும் சிந்தித்தால் காதலே ஒரு அபத்தம் போல் தொன்றுகிறது. வெறும் காமத்தில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இயற்கை இனப்பெருக்கத்திற்காக காமம் என்ற கயிற்றின் மூலம் நம்மை ஆட்டுவிக்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் இது பொதுவானது. சிந்தனை என்ற ஒன்றை கொண்ட மனித இனம் இந்த இயற்கையின்  லீலையை புரிந்துகொண்டு காமத்தின் பிடியிலிருந்து விலகியோ அல்லது காமம் துய்ப்பதற்கு ஒரு எளிதான வழிமுறையை கண்டிருக்க வேண்டும்.  ஆனால் மனிதர்கள் காமத்தில்  காதலை கலந்து மிகவும் சிக்கலாக்கிக்கொண்டிருக்கின்
றனர்.
     அல்லது காதல் காமம் மட்டும்தானா? காமத்தின் அலங்கரிக்கப்பட்ட வடிவம்தான் காதலென்பதா? காமத்தின் அடிப்படை எதிர் பாலினத்தவரின் உடலழகு என்பதால்  எதிர்பாலரின் உடல்மட்டும்தான் காதலை தீர்மானிக்கவேண்டும்.  அப்படியாகுமானால் அழகு அதிகமான மற்றொருவரை காணும்போதெல்லாம காதலும் மாறிக்கொண்டிருக்கவேண்டும். நம் துணையின் அழகு காலத்தால் விபத்தால் குறையும்போது காதல் குறைந்துவிடுவதில்லை. ஆகவே காதலின் வலிமை என்பது அழகில் அல்ல.  

      சிந்தனை ஒன்றி மனங்கள் கலப்பதுதான்  காதல் என்பதா?  காதலைச் சொல்லிக்கொண்ட அடுத்த நொடியிலிருந்து சண்டையை ஆரம்பித்துவிடும் காதலர்கள், திருமணத்திற்கு பின்னரும் தம் சண்டையை ஆயுட்காலம் முழுதும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் காதல் குறைவதில்லை என்று கண்டிருக்கிறேன். படு கஞ்சனான என் தாத்தாவும் சமயத்தில் யாருக்கும்  தெரியாமல் வீட்டு  பொருட்களை விற்கக்கூடிய   செலவாளியான  என் பாட்டியும் வாழ்ந்த வாழ்வில் இல்லாத காதலா? சில சமயம் ஒரு தம்பதியினரை அவர்களுக்குள் இருக்கும் சிந்தனை வேறுபாடுகளே அவர்களை   காதலில் மேலும் நெருங்க வைக்கிறது என்பதைக்கண்டிருக்கிறோம்.

     எது காதலாகிறது? காமத்திலிருந்து தோன்றும் காதலை எது உயர்த்துகிறது? ஒருவருக்கொருவர் தம்மை உடமையாக்கிக்கொண்டு அர்ப்பணித்துக்கொள்வதையே நான் காதல் என்று உணர்கிறேன். காதலன் தம்மை முழுமையாக தன்னிடம் சமர்ப்பித்துவிட்டதாக அறியும் பெண்னே அவனுக்கு தன் காதலை தெரிவிக்கிறாள். அப்போதே அவனுக்கு தன்னை அவனின் உடைமையென அறிகிறாள். காமத்தில் வெறும் உடலை மட்டுமே பகிர்ந்துகொள்கின்றனர்.  ஆனால் காதலிலில் ஒருவருக்கொருவர் உடல் உள்ளம் என முழுமையாக தன்னை கொடுத்துக்கொள்கிறனர். 

   சுப்ரை தன்  உடல் மட்டுமல்லாது  தன் உயிரையும்  கொடுக்கத் தயாராக இருப்பதை திருஷ்டத்துய்மன் அன்றைய இரவில் அறிகிறான். அவளின் முழுமையான இந்த அர்ப்பணிப்பு அவனிடம் அவளின்மேல் காதலை ஏற்படுத்துகிறது. அவள்   தன்னை அவனுக்கு உடமையாக்குவதன் மூலம் அவள் தன்னை அறியாமலேயே அவனை தனக்கு உடமையாக்கிக்கொண்டுவிட்டாள். அவன் உள்ளம் நிறைந்து அவன் கண்களில் காணும் காட்சிகளிலெல்லாம் அவளை அவன் காண வைத்துவிட்டாள். தன்னை கொடுப்பதன் மூலம் ஒருவரை தனக்கென பெறும் உயரிய காதல் இது.
தண்டபாணி துரைவேல்
Posted by ஜெயமோகன் at Thursday, July 23, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

வழிகள் 3

நன்றி மகராஜன் அருணாசலம்.

1.திருஷ்டத்யும்னன் முதலில் வரும்  பாதை முன்னால்  கிருஷ்ணன் காம்பில்யம் சென்ற பாதை என்று நான் புரிந்து கொண்டேன். தேவபாலபுரி வரை கடலில்  சென்று அங்கிருந்து சிந்து வழியாக.... அல்லவா?

2... மகதத்துடனான போர் இல்லையே என்பது என் முக்கிய வினா அல்ல  அதில் நீங்கள் சொல்லும் விளக்கம் போலவே நானும் நினைத்தேன். .கங்கையிலும்  யமுனயிலும் மாறி மாறி பயணிக்கும் போது    பிரயாகை பற்றிய குறிப்புகளே  இல்லையே என்று தான் வியந்தேன். .

3.மூன்று வழிகள் சொல்லப்பட்டுள்ளன என்றே நினைக்கிறேன். இந்த மூன்றாவது வழி சற்று குழப்பமாக உள்ளது.நான் நினைப்பது போல சரமாவதி, சம்பல் அல்லாமல் வேறு  ஒன்றாக இருக்கலாம்.. தெரியவில்லை.

               உண்மையில் வெண் முரசுக்கு வெளியிலும் தேடுவதும் பல் வேறு படைப்புகளுடன் அதனை  ஒப்பிட்டு வாசிப்பதும்   அதன் வாசிப்பை மேலும் செழுமை ஆக்குகிறது என்பதே  என் அனுபவம்.தொடர்ந்து பேசுவோம்.

வெ சுரேஷ்
Posted by ஜெயமோகன் at Thursday, July 23, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, July 22, 2015

வெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்

நண்பர்களே,


வெண்முரசில் தொன்மங்களை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் உத்திகளில் இரண்டு முக்கியமானவை.

1. சூதர் பாடல்கள்
2. கனவுகள்

வெண்முரசு கனவுகளைப் பயன்படுத்தும் விதமே தனித்துவமானது. இதுவரையிலும் வந்த கனவுகள் அனைத்துமே அக்கதாபாத்திரங்களின் நனவிலி மனதின் தன்னிச்சையான வெளிப்பாடுகளே! இது வரையிலும் வந்திருக்கும் சில கனவுகளைப் பார்ப்போம்.


1. ஊர்வரையின் கனவு: முதற்கனலில் பீஷ்மர் வழக்கம்போல் அரண்மனையை விட்டு ஊர் சுற்றும் போது (அரண்மனையில் இருக்க விரும்பாமல், அவரது இருப்பை விரும்பாதவர்களால் என்று வாசிக்கவும்!!), வழியில் தங்கியிருக்கும் ஓர் ஊரின் தலைவரின் மகளே ஊர்வரை. அவள் கனவில் பீஷ்மரைத் தாக்க வரும் ஒரு காட்டுப் பன்றியிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறாள். அந்த காட்டுப்பன்றி அவளைக் கண்டதாலேயே அவரைத் தாக்காமல் செல்கிறது. அதனால் அவரை திருமணம் செய்ய முன்வருகிறாள். பீஷ்மர் அவரின் சூழ்நிலையால் மறுத்துவிடுகிறார். அப்போதும் அவர், பெண்ணே உன்னை மணந்தால் நான் வாழ்வேன் என்பது உண்மை, ஆனால் என் விதியை என்றோ முடிவு செய்துவிட்டவன் நான், என்றே கூறுகிறார். உண்மையில் அவர் யாருக்கு இப்பதிலுரைக்கிறார்? ஏன் இந்த கனவு இங்கு உரைக்கப்பட வேண்டும்? கதைக்கும், ஊர்வரைக்கும் என்ன தொடர்பு? இதற்கெல்லாவற்றிற்கும் பதில் பிறிதொரு அத்தியாயத்தில் ஜெ தந்திருப்பார்.


2.சிகண்டியின் கனவு: சிகண்டி தன் பிறவி நோக்கம் வெல்லுமா எனறறிய சந்திக்கச் செல்லும் நாகசூதனிடம் தனக்கு வந்த ஒரு கனவைச் சொல்கிறான். அதில் அவன் ஒரு காட்டுப்பன்றியாக பீஷ்மரைக் கொல்லச் செல்கிறான். அவருடன் இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டு தயங்குகிறான். அப்பெண் அவன் தாய் அம்பை போல இருந்ததாகச் சொல்கிறான்.


ஊர்வரையின் கனவோடு ஒத்துப் போகும் கனவு இது. சிகண்டி இக்கனவிலிருந்து ஒன்றை அறிகிறான். தன் தாய் பீஷ்மரைக் கொல்லச் சொன்னது வஞ்சத்தால் அல்ல. அவர் மீது கொண்ட பெருங்காதலாலேயே! ஆம். பீஷ்மர் இயற்கைக்கு எதிராக, மானுடத்தின் ஆதார விசைகளுக்கு எதிராக ஓர் ஒறுத்தல் வாழ்வை வாழ்கிறார். அதனாலேயே சலிப்புற்று, எதிலும் பிடிப்பில்லாமல், கனிந்த விளாங்கனி ஓட்டுக்குள் என இருக்கிறார். ஓட்டிலிருந்து ஒட்டாத கனியை அறிந்தவள் அம்பை ஒருத்தியே. அவள் முன் தன் ஓடை ஓர் இரும்புக் கோட்டையாக மாற்ற முயன்று பரிதாபமாகத் தோற்கிறார் பீஷ்மர்.


அவரை அவரதுகூட்டுக்குள்ளிருந்து விடுவிக்க நினைத்தவள் அம்பை. அவளை அவ்வாறுஎண்ண வைத்தது அவள் அவர் மேல் கொண்டிருந்த பெருங்காதல். அன்பாலும், இனிய வாழ்வாலும் அவரை வெளிக்கொணர அவள் செய்த முயற்சிகள் வியர்த்தனமானதாலேயே, அவரை மரணிப்பதன் மூலமாகவாவது விடுதலை அளிக்க எண்ணுகிறாள் அவள். ஆம், அவள் பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என சிகண்டிக்கு உத்தரவிடுவது அவர் மீது கொண்ட குரோதத்தாலோ, வெறுப்பாலோ அல்ல. அவர் மீதுகொண்டிருந்த மாளாப் பெருங்காதலே அவளை அம்முடிவை நோக்கித்தள்ளியது. அதையே அக்கனவுகள் பீஷ்மருக்கும், சிகண்டிக்கும் உணர வைக்கின்றன. அதற்குப் பிறகு சிகண்டி பீஷ்மரை வெறுப்பதில்லை. அவரைக் கொல்ல வேண்டும் என்பது அவனளவில் ஓர் செயல் மட்டுமே. அச்செயலில் எந்த விழைவையும் அவன் கலப்பதில்லை. அதனாலேயே அவனால் அச்செயலை வெற்றிகரமாக முடிக்க இயல்கிறது.


3. குந்தியின் கனவு: வண்ணக்கடலின் துவக்கத்தில்வருகிறது இக்கனவு. ஒருவகையில் இது ஒரு அகவெளிச் சலனம்(hallucination) என்று கூடச் சொல்லலாம். சதசிருங்கத்திலிருந்து குந்தி தன் ஐந்து புதல்வர்களோடும், தன் அணுக்கத்தினரோடும் அஸ்தினபுரிக்கு வரும் வழியில் ஒரு அதிகாலையில், ஓர் ஆற்றின் கரையில் நிகழ்கிறது இது. அவள் முன் பேருருவம் கொண்டு எழுந்து வருகிறான் கார்க்கோடகன். கர்ணனைப் பற்றிய அக்கனவு நம் வாசகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. அதிலும் சில அசாத்திய இணைவுகளை நிகழ்த்தியிருப்பார் ஜெ.


குந்திக்கு கர்ணன் இருக்குமிடம் தெரியும். பாண்டு உயிருடனிருக்கும் போதே அவன் ஒற்றர்களை ஏவி விட்டு தேடச் சொல்கிறான். ஆனால் அவள் அவனது இருப்பையே மறக்க வேண்டும் என நினைக்கிறாள். அது அவளது இடத்தை அஸ்தினபுரியில் நிலைநாட்டிக் கொள்ள அவள் மனது ஆடும் ஆட்டம். மிக நுட்பமான உளவியல் நாடகம் அது. தான் மிக விரும்பிப் பெற்ற ஒரு மகனை மறந்தாக வேண்டும், அதே சமயத்தில் அவளுக்கு எந்த குற்ற உணர்வும் எஞ்சலாகாது. அவனைப் பற்றிய தகவல்களை தன் நனவிலியில் மறைக்க, அவள் அந்த நனவிலியுடன் நடத்தும் நாடகமே அக்கனவு. அதே போன்று அவள் அக்கனவின் இறுதியில் அவனை மறந்தும் விடுகிறாள்.


இக்கனவு நிகழுமிடத்தைக் கவனியுங்கள். அது ஓர் ஆற்றின் கரை. நம் நனவிலி நாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் பாய்ந்தொழுகும் ஆறு என்றே உருவகப் படுத்தப்படுகிறது. அந்த ஆற்றின் கரையிலேயே அவள் கார்க்கோடகனைச் சந்திக்கிறாள்.


ஏன் கார்க்கோடகன்? மழைப்பாடலில் கர்ணனைக் கருவுற்றிருக்கும் குந்தி அவனை கருவழிக்க நினைக்கிறாள். அதற்கு வரும் ஓர் முதிய மருத்துவச்சி ஓர் பெரிய ராஜ நாகம் தீண்டி இறக்கிறாள். அவள் தோழி அனகை அந்த நாகம் அவளை நெடுநேரமாக பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என்று கூறுவாள். அன்றிலிருந்து கர்ணன் பிறப்பு வரை அந்த நாகம் அவளுடன் இருக்கும். எனவே கர்ணன் என்னும் போது இயல்பாகவே நாகமாக அவளது ஆழ்மனம் வெளிப்படுகிறது.


4. துரியனின் கனவு: குந்தியின் கனவு வந்த அடுத்த அத்தியாயத்திலேயே இள வயது துரியோதனனின் கனவு வருகிறது. தன் தனிமையில் சலிப்புற்று, உச்சகட்ட எரிச்சலில் தன் தம்பியரை போட்டு அடிக்கிறான் துரியன். இந்த இடத்தில் வெண்முரசில் அதிகம் பேசியிராத துச்சாதனின் ஒரு முகம் வெளிப்படும். தன் தம்பியருக்கும், அண்ணனுக்கும் இடையில் தானாகவே சென்று விழுவான் அவன். அதன் மூலம் தன் தம்பியரின் மீது விழும் அனைத்து அடிகளையும் அவனே தாங்கிக் கொள்வான். துச்சாதனன் அண்ணன் மீது மட்டுமல்ல, தன் தம்பியரின் மீதும் அதே அளவு பிரியம் வைத்திருப்பவன். 


அவ்வாறு அடித்த பிறகு அவன் தூங்கி விடுகிறான். துயில் எழும் அவன் முன் அடி வாங்கி காயமுற்று தூங்கிக் கொண்டிருக்கும் அவன் தம்பியரைப் பார்க்கிறான். ஆதூரம் மேலெழ கிளம்பி தன்  ரதத்தில் ஏறி மேற்கு கரை ஏரிக்கு செல்கிறான். அந்த பின்னரவில், நிலவெழுந்த ஏரியில் துரியன் கனவெழுந்து வருகிறான் கார்க்கோடகன். அவன் தான் துரியனுக்கு நிறைவைத் தருபவனாக வரப் போகிறவனை, அவன் முழு முதல் எதிரியை அவனுக்குக் காட்டுகிறான். அதன் பிறகே துரியன் தன் நிலையின்மை நீங்கப் பெறுகிறான். இக்கனவும் ஒருவித அகவெளிச் சலனம் தான். நாகம்  என்பது துரியன் பிறப்போடு இணைந்த படிமம். எனவே அவன் ஆழ்மனமும் ஓர் நாகமாகவே தோன்றுகிறது. இதே நாகத்தைத் தான் அவன் தன் கொடியாகக் கொள்கிறான். இதே நாகம் தொடர்பான ஒற்றுமை தான் அவனை கர்ணனுடன் மாறா நட்பு கொள்ளச் செய்கிறது. (இங்கே கனவுடன் தொடர்பில்லாத ஒரு குறிப்பு - கர்ணனின் கொடி: யானைச் சங்கிலி. என்ன ஒரு இயல்பான கொடித் தேர்வு!! ஆம். கர்ணன் என்னும் யானை ஒரு மிகச் சிறிய, எளிதில் உடைத்துத் தெறிக்கக் கூடிய ஆனால் யானையால் உடைக்க இயலாத சங்கிலியால் தானே வாழ்நாள் முழுவதும் கட்டுண்டிருக்கப் போகிறது!!  மற்றொரு வகையில் துரியன் என்னும் யானையைக் கட்டுறுத்தும் சங்கிலி என்றும் கூட கொள்ளலாம்)


5. பாமாவின் கனவு: இந்திரநீலம் முழுவதும் கனவுகள் ஒரு உத்தியாகவே வருகிறது. முழு துவாரகையையும் பாமா கனவில் கண்டு விடுகிறாள். ஒரு வித 'தேஜாவூ' தான் அவளுக்கு உண்மையில் துவாரகை செல்லும் போது நிகழ்கிறது.


ஆனால் நான் மிகவும் வியந்தது, அவளின் கிருஷ்ணனுக்கு அமுது அளிக்கப் போகும் அந்த ஏழு அடிகளில் வரும் சப்த கன்னியரின் கனவே. அக்கனவுகள் வாயிலாகவே பாமா தன் சுய அகங்காரத்தைக் கிழித்து தன்னை முழுவதுமாக அவனுக்கு அர்ப்பணிக்கிறாள். அதில் வரும் முதல் கன்னிக்கு அவள் அளிக்கும் பதில் மிக நுட்பமானது. அதன் மூலம் அவனுக்கு ஒரு தாயாக அவள் இருப்பாள் என்றே துவங்குகிறாள். ஆம். அவள் என்றுமே தன்னை ஒரு பேரன்னையாகவே கருதி வருபவள் தானே. அவளின் அன்னை என்ற மெய்ப்பாடின் வழியாகவே அவளுக்குள் அவன் மீதான பெருங்காதல் நிறைகிறது. அந்த மெய்ப்பாடே அவளை அவனை என்றுமே கட்டுப்படுத்தி வைக்கச் சொல்கிறது. நன்றாகப் பார்த்தால் கிருஷ்ணன் என்றுமே தவறைக் கண்டிக்கும் கோபமான தாய் முன் தலைகுனிந்து சமாளிக்கும் ஒரு குழந்தையாகவே அவள் முன் எப்போதும் இருப்பான்.


6. சிசுபாலனின் கனவு : இதே சப்த கன்னியரும் சிசுபாலனோடு உரையாடும் அந்த அகவெளிச் சலனமும் மிக முக்கியமானது. ஒரு விதத்தில் நமது ஒட்டுமொத்த ஞான மரபையே சுட்டி நிற்பது. ஒரு கன்னியில் காதலை நிறைத்த அதே சப்த மாதாக்களும் இங்கே மானுடம் கொள்ளச் சாத்தியமான அனைத்து எதிர்குணங்களையும் சிசுபாலனின் முற்பிறவிகளாகக் காட்டுகின்றனர். கூடவே சிசுபாலன் என்று ஆகி வந்த தொன்மத்தையும் கூறுகின்றனர். இதன் மூலம் காட்டப்படும் ஒன்று உண்டு. எதிர்குணங்கள் அவை எதிரானவை என்பதாலேயே நிறைவை அடையத் தடையாய் இருப்பதில்லை. எதிர்நிலைகளில் உன்னதத்தை அடைந்தவரும் முக்தியைத் தான் அடைவர். சுவாமி விவேகானந்தர் சொல்வது போல, "நல்லவனாக இருந்தால் மகத்தான நல்லவனாக இருங்கள். தீயவனாக இருந்தால் மகத்தான தீயவனாக இருங்கள்" என்பது நம் மரபு நமக்களித்தது. எதையும் வெறுக்கவில்லை நாம். எனக்குத் தெரிந்து உலகின் வேறு எந்த மரபும் இந்த முழுமையைத் தன்னகத்தே கொண்டிருப்பதில்லை.


இவை தவிர அம்பைக்கு வரும் அந்த மூன்று தேவியரின் கனவுகள், பீஷ்மருக்கு வரும் அவரது இறந்து போன தமையர்களைப் பற்றிய கனவுகள் போன்றவையும் குறிப்பிடத் தக்கவையே. மொத்தத்தில் வெண்முரசின் கனவுகள் அந்த அந்த கதாபாத்திரங்களின் ஆழ்மன இச்சைகளோ, அவற்றின் நிறைவேறாத ஆசைகளோ அல்ல. மாறாக அவை அந்த கதாபாத்திரங்களின் நிலையை அவர்களுக்கே உணர்த்தும் விதமாகவோ, அவற்றின் வாழ்வைத் தீர்மானிக்கும் ஓர் முடிவைத் தெளிவாக எடுக்க   உதவும் விதமாகவோ மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டிருக்கும். மட்டுமல்லாது அக்கனவுகளில் நிகழ்பவை அனைத்தும் பெரும்பாலும் ஏதாவதொரு வகையில் அக்கதாபாத்திரங்களோடு தொடர்புடையதாகவோ இருக்கும். நன்றி.


அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
Posted by ஜெயமோகன் at Wednesday, July 22, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இரு ஆழங்கள்

ஜெ

சில வரிக்ள் நாவலின் சாராம்சத்தையே கொண்டிருக்கும். அப்படிப்பட்ட வரி கிருஷ்ணன் கிருதவர்மனை மன்னிக்கும்போது சொல்வது

அக்ரூரனை எப்படி சத்யபாமை புரிந்துகொள்கிறாளோ அப்படி நான் கிருதவர்மனைப்புரிந்துகொள்கிரேன் என்கிறார்

அக்ரூரர் பேராசை கொண்டவர். அதை சத்யபாமை தன்னைவைத்து புரிந்துகொள்கிறார். கிருதவர்மன் பெண்ணாசைகொண்டவன். அல்லது திருமகளை விரும்பியவன். அதை கிருஷ்ணன் புரிந்துகொள்கிறான்

அற்புதமான வரி

சாரங்கன்
Posted by ஜெயமோகன் at Wednesday, July 22, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

வழிகள்-2

அன்புள்ள சுரேஷ் வெ,

உங்கள்  கேள்விகளுக்கு வெண்முரசு இதுவரை தந்திருக்கும் விவரங்களில் இருந்து பதில்  தேட(ற) முயல்கிறேன். தகவல்களை வெண்முரசுக்கு வெளியில் தேடத் துவங்கினால் அது முடிவில்லாமல் செல்லும் என்பதும், அது நமது வாசிப்பனுபவத்தை மட்டுறுத்தும் என்பதும் என் எண்ணம்.

1. திருஷ்டதுய்மனின் பாதை : அஸ்தினபுரியில் இருந்து யமுனையைக் கடந்து சப்த சிந்துவின் ஏதேனும் ஒரு கிளையில்  பயணத்தைத் துவக்கியிருப்பார். என்னுடைய அனுமானம் சுதுத்ரி. அதிலிருந்து சிந்துவில் நுழைந்து அப்படியே கடல் வழியாக துவாரகையை அடைந்திருப்பார். உண்மையில் அஸ்தினபுரியில் இருந்து துவாரகை வர எளிதான வழி இதுவே. பாலையை முற்றிலுமாக தவிர்த்து விடலாம்.

2. பிரயாகையில் மகதப் படைகளுடன் போர் தவிர்த்தமை: முதலில் சாத்யகி உட்பட நால்வரும் கிருஷ்ணபுவசுக்கு சென்றது வணிகப் படகு என்ற போர்வையில். எனவே போர் நடைபெறவே இல்லை. கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்த போதும், அதன் பிறகான போரின் போதும் கிருஷ்ணனுடன் முழு படை ஒன்று இருக்கிறது. அதில் அஸ்தினபுரியின் படைவீரர்களும், பார்த்தனும் கூட இருக்கின்றனர். இப்படையை எதிர்த்து மகதம் வந்திருக்குமானால் அது அஸ்தினபுரிக்கு எதிரான போராகவே கருதப்பட்டிருக்கும்.

 இரண்டாவது, மகதத்தின் அனைத்து காவலரண்களுக்குமாக பதினெட்டு யாதவ படைப் பிரிவுகள் செலுத்தப்பட்டு நிலை கொள்ள வைக்கப்பட்டு விட்டன. மகதத்தின் படை அவற்றை எதிர்கொள்வதற்காக பிரிந்து நின்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் கங்கையில் எவ்விதத் தடையுமின்றி கிருஷ்ணன் பவனி வந்து கொண்டிருக்கிறான்.

மூன்றாவது, மகதம் தற்போது உள்ள நிலையில் ஒரு முழுப் போருக்குத்  தயாராக இல்லை. இது முன்பே (வெண்முகில் நகரத்தில்) குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையே வசுதேவரின் அரசவைக்கு வரும் மூன்று மகதத் தூதர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இச்சூழ்நிலைகளால் தான் கிருஷ்ணனுக்கு காசியில் முழு அரச வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதையே, காசியில் போரில்லாமல் அரச சூழ்கையாலேயே வேண்டியதைப் பெற முடியும் என்று கிருஷ்ணன் கூறுகிறான். இவற்றால் தான் மகதத்துடன் போர் தடுக்கப்படுகிறது.

3. திருஷ்டதுய்மன் படையுடன் திரும்பும் பாதை: இப்பகுதியில் கங்கையும், யமுனையும் சற்றே இடம் மாறி வந்துள்ளது போல் தான் தெரிகிறது. கிருதவர்மன் இவர்கள் கையில் மாட்டுவது கங்கைக் கரையில், வாரணவதத்திற்கும் வடக்கே இருக்கும் சுதமவனத்தில். அங்கிருந்து கங்கை வழியாக வந்து, யமுனையில் திரும்பி பின் சர்மாவதிக்குள் நுழைந்து உஜ்ஜயினிக்கு வருகிறார்கள். இது யமுனையில் இருந்து கங்கை வழியாக என்று எழுதப்பட்டுள்ளது. இது மாற்றப்பட வேண்டியதே. மேலும் இவ்வழியில் மதுரா வருவதே இல்லை. மற்றுமொரு குறிப்பு - முன்பு இதே வழியில் தான் பாமாவும் துவாரகை வருகிறாள். ஆக, இரு வழிகள் தான்!!!


அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
Posted by ஜெயமோகன் at Wednesday, July 22, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, July 21, 2015

கண்ணிகள்

ஆசிரியருக்கு,

மகா பாரதத்தில் உள்ள மைய்ய பாத்திரங்களுக்கு இணையாகவே  வெண் முரசில் உள்ள  ஓர பாத்திரங்களும் படைக்கப்பட்டிருக்கும். அது விசித்திர வீரியனானாலும் பூரிசிரவஸ் ஆனாலும் இப்போதைய திருட்டத்தியும்னன் ஆனாலும் இது பொருந்தும்.

அதேபோல மகாபாரத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகளுக்கு  இணையாகவே இந்த ஓர பாத்திரங்களுக்கு நிகழும் நிகழ்வுகளும் அமைக்கப் பட்டிருக்கும். வெண் முரசில் கூடுதல் அம்சம் என்னவென்றால் முக்கிய நிகழ்வுகளுக்கு இணையாகவே அன்றாட நிகழ்வுகளும் விவரிக்கப் பட்டிருக்கும் அது முக்கிய சம்பவங்களுக்கு பங்களிக்கக் கூடியதாக அமைந்திருக்கும். 

இன்று சாத்தியகியும் திருட்டத்தியும்னனும் குதிரையில் செல்லும் அந்த மென்னடையும்,புறக்காட்சிகளும், மாளிகைகளும், அவர்கள் கோமதியின் ஏரியை அடைவதும், திருட்டத்தியும்னன்  அந்தியில்  திகழ்வதும் மீன்கள் அவன் நிழல் தீண்டுவதும்  அதி அற்புதம். இது சியாமந்தகத்திற்கும் சுப்ரையின் நினைவுக்கும் இணையானது.

கிருஷ்ணன்.         
Posted by ஜெயமோகன் at Tuesday, July 21, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile

Blog Archive

  • ►  2020 (318)
    • ►  December (15)
    • ►  October (3)
    • ►  September (21)
    • ►  August (156)
    • ►  July (119)
    • ►  March (1)
    • ►  January (3)
  • ►  2019 (663)
    • ►  December (9)
    • ►  November (18)
    • ►  October (10)
    • ►  September (41)
    • ►  August (117)
    • ►  July (1)
    • ►  June (69)
    • ►  May (24)
    • ►  April (50)
    • ►  March (95)
    • ►  February (96)
    • ►  January (133)
  • ►  2018 (1465)
    • ►  December (88)
    • ►  November (148)
    • ►  October (124)
    • ►  September (112)
    • ►  August (107)
    • ►  July (140)
    • ►  June (136)
    • ►  May (124)
    • ►  April (148)
    • ►  March (74)
    • ►  February (129)
    • ►  January (135)
  • ►  2017 (1049)
    • ►  December (114)
    • ►  November (118)
    • ►  October (49)
    • ►  September (50)
    • ►  August (117)
    • ►  July (64)
    • ►  June (66)
    • ►  May (85)
    • ►  April (52)
    • ►  March (109)
    • ►  February (112)
    • ►  January (113)
  • ►  2016 (1269)
    • ►  December (77)
    • ►  November (146)
    • ►  October (52)
    • ►  September (109)
    • ►  August (160)
    • ►  July (151)
    • ►  June (14)
    • ►  May (26)
    • ►  April (137)
    • ►  March (104)
    • ►  February (144)
    • ►  January (149)
  • ▼  2015 (1446)
    • ►  December (127)
    • ►  November (105)
    • ►  October (83)
    • ►  September (70)
    • ►  August (79)
    • ▼  July (69)
      • உடன்போக்கும் செவிலியும்
      • என்னுள் உறையும் அமிதை
      • உடல்மொழி
      • வெண்முரசில் வாழ்வின் உணர்வுகள்:
      • பெண்ணின் உள்ளிருக்கும் உலோகம்
      • கதைமானுடர்
      • இன்னொரு கம்சன்
      • தமையன்
      • வெண்முரசு யூ டியூபில்
      • நாயகன்
      • வில்
      • உண்டாட்டு
      • குறுக்கல்
      • இருகேள்விகள்- மேலும்
      • பழிமூலம்
      • அரசியலில் அலைகழிக்கப்படும் பெண்கள்.
      • இரு கேள்விகள்
      • யோகப்படிமம்
      • வெண்முரசில் காமம்
      • பருவங்கள்
      • முடியுரிமை
      • நான்கு வினாக்கள்
      • கனவுகள்
      • நாம் ஏன் காதல்கொள்கிறோம்?
      • வழிகள் 3
      • வெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்
      • இரு ஆழங்கள்
      • வழிகள்-2
      • கண்ணிகள்
      • வழிகள்
      • ஆழி
      • கிருஷ்ணனின் தோல்வி
      • பெண்னிண் சந்தேகமும் சம்மதமும்
      • வஞ்சங்கள்
      • திருஷ்டதுய்ம்னனின் பிழையா?
      • வானிலொரு தோட்டம்
      • லௌகீகமும் நீதியும்
      • நாமறியா காரணம்
      • தண்டித்தல்
      • துருபதனின் பழி
      • குலக் குழுக்களில் குறுகும் அறம்
      • இரு பயணங்கள்
      • இன்னொரு துரோணர்
      • கனவு
      • ஹைக்கூ வரிகள்
      • வெண்முரசில் குருமார்கள்
      • கொல்லும் கண்ணன்
      • கிருஷ்ணனின் கண்கள்
      • போரின் அழகு
      • கண்ணனின் விஸ்வரூபம்
      • நீதியின் கண்கள்
      • சிறியபெரும்போர்
      • காலடியோசை
      • இருகுதிரைகள்
      • நகை
      • ஏன்?
      • சியமந்தகக் காலம்
      • அணுக்கமும் விலக்கமும்
      • ஏழு
      • சிசுபாலனும் ஏழு அன்னையரும்
      • அக்ரூரரும் ஆசையின் தத்துவமும்
      • அக்ரூரரின் குரல்
      • இவரா இப்படி?
      • அயோக்கியப்பயல்
      • ஆடல்
      • மணியின் முகங்கள்
      • அக்ரூரரா?
      • பெண்ணின் அனுமதி
      • காதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:
    • ►  June (84)
    • ►  May (131)
    • ►  April (178)
    • ►  March (167)
    • ►  February (152)
    • ►  January (201)
  • ►  2014 (808)
    • ►  December (188)
    • ►  November (153)
    • ►  October (166)
    • ►  September (133)
    • ►  August (43)
    • ►  July (124)
    • ►  January (1)
Simple theme. Powered by Blogger.