Sunday, July 12, 2015

இருகுதிரைகள்

பெருமதிப்பிற்குறிய  ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

இன்றைய 'வெண்முரசில்' சததன்வா சென்ற வழி அறியமுடியாததை எண்ணி,பலராமர் கூறுவதற்கு,கண்ணன்  கூறும் கீழ் கண்ட மறுமொழி மிகவும் அருமை.
"இளைய யாதவர் புன்னகைத்து “மீன்போல நீரில் வாழ்பவனல்ல மானுடன். மண்ணில் காலூன்றி நடக்கையில் முற்றிலும் தடயமின்றி செல்ல மானுடனால் இயலாது”
இதில் ஒரு சின்ன சந்தேகம் குதிரையின் கால் தடங்களை மட்டும் வைத்து சததன்வா சென்றவழி  அறிந்து அவனை பிடித்து விடலாம்  என்று இளைய யாதவர் கூறி அதேபோல் பின் தொடர்ந்து சென்று அவனையும் அவன் படைகளையும் கொன்றுவிடுகிறார்.இதில் குதிரைகளை பற்றி கூறும் போது,சோனக குதிரைகள் விரைவாக ஓடும் ஆனால் எளிதில் களைத்து விடும்,ஆனால் யவனதேசக் குதிரைகள் எடை மிக்கது,சற்று மெதுவாக சென்றாலும் எளிதில் களைப்படையாது என்ற விவரங்கள் எல்லாம் மிகப் பொருத்தமாக ஏற்றுக்கொள்ளும்படி  வருகின்றன  இவை தங்கள் புனைவுகள் தானா இல்லை அதில் உண்மை உள்ளதா.இதைப்போல் பல இடங்களில் வரும் விவரங்கள் உண்மை எது,கற்பனை எது என்று உய்த்தறியாவண்ணம் சிறப்பாக வருகின்றன.

அன்புடன்,

அ.சேஷகிரி.

 அன்புள்ள சேஷகிரி

இப்போதும் உள்ள வேறுபாடுதான் அது. அரபுக்குதிரை மெல்லியது. வேகமானது. ஸ்பானிஷ் குதிரை கனமானது . ஆற்றல் மிக்கது

ஜெ