Thursday, May 5, 2016

உடல் என்பது

 
 
எழுத தெரியமால் திகைத்து கிடைக்கையில் , அருணாச்சலம் மகராஜன் முந்தி கொண்டார்... ( முன்பு இதே போல பாஞ்சாலி நீராடும் போது வந்த வர்ணனைகளை சீனு முந்தி எடுத்து கொண்டார் ) 

34 படித்து விட்டு தினுசான கிளர்ச்சியும் மென் சிரிப்பும் கொண்டு கடந்து சென்ற பெண்களை நினைத்து கொண்டால் கூட, இத்தனை நுணுக்கமாக பெண் அனுபவங்களை தொடர் அனுபவம் என - இறக்கும் முன் நினைத்து பார்க்கும் continuous shots என - fast forward ல் ஒட்டி பார்க்கும் நினைவலைகள் என.... இந்த தருணத்தில் அவன் பிறந்து இருந்தால் மீண்டும் பெண் குமிழ்கள் நிறைந்த வாழ்விருக்கு ஆசிர்வாதம் கிடைத்து இருக்கும். 

இந்த type of வர்ணனை போர் காட்சிகளிலும் பார்த்து இருக்கிறேன். நுனி நுனி கணங்களாய், உறைய போகும் frozen shot  என பின் ஒரு நொடியின் ஒரு அசைவுடன் சித்தம் எடுத்து கொள்ளும் ஜாக்ரதத்தின் துளி துளி நினைவுகளாக மனம் reflex செய்வதை மனம் வேடிக்கை பார்ப்பதாக வந்ததுண்டு ( கர்ணன் துருபதனின் கோட்டை புகும் போதும் + ஆடி நகல் வாசுதேவன் கிருஷ்ணனின் போரில் சாகும் முன் என பல தடவை ) 
ஆனால், இந்த பெண்களின், பெண் அனுபவங்களின் வர்ணனை reflecting back in a split of a second in one go....  ஒரு 10,15 நொடிகளில் எடிட் செய்து நல்ல இசை கொடுத்தால்.... எல்லோரும் செத்து பிழைப்பார்கள்.

அனுபவிக்காமல் எழுத முடியும் என்பதற்கு இவ்வரிகள் மீண்டும் ஒரு உதாரணம் 

அன்புடன் 
லிங்கராஜ்