Saturday, May 7, 2016

நாக உலகம்



வெண்முரசின் சமீபத்தைய அத்தியாயங்கள் மெல்ல அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கின்றன. படிப்படியாக உருவாகிவரும் ஒரு மிகப்பெரிய சித்திரத்தைக் காணமுடிகிறது. ஆரம்பத்திலேயே மானசாதேவி வழியாக ஒரு நாகர்பண்பாட்டின் அடித்தளம் மீது மகாபாரதம் நிகழ்வது சொல்லப்பட்டுவிட்டது. அதன்மேல் தான் மகாபாரதமே வளர்கிறது. அனைத்து திருப்புமுனைகளிலும் நாகர்கள் இருக்கிறார்கள்

வெய்யோனில் நாகங்களின் வரலாற்றுச்சித்திரம் ஒன்று விரிவாக உருவாக்கப்பட்டுவிட்டது. இப்போது அது வரலாற்றுமோதல் என்பதற்கு அப்பால் சென்று ஒரு தத்துவமோதலாக உருவம் கொள்கிறது. இத்தனை ஆயிரம் பக்கங்களில் மிகமெதுவாக ஆனால் ஒத்திசைவாக விரியும் இந்த அடித்தளம்தான் வெண்முரசின் மிகப்பெரிய கொடை

சாமிநாதன்