ஜரா சந்தன் எனும் அரக்கன் - பாதி
மானுடனாகவும் மீதி அரக்கனாகவும் வாழ்ந்தவன் தன்
வீரமரணத்தை அடைந்தான் .இது அவன் விரும்பியதே - “நான் தேனருந்தும் யானை.
பராசரரேகூட என் துதிக்கையின் ஒரு
மூச்சை நிரப்பாதவர்தான். எனக்கு தென்கடல் என
அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது.” -- வெண்முரசு’
– நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28 இதில்
தான் ஜராசந்தன் தொல் வியாசன் எழுதும்
மகா காவியம் பாண்டவர்களை பற்றி
எழுதப்பட்டு வருகிறது என்று சூதர் கூறும்
மொழிகளை நம்பினான் . ஆகவே அதில் தன்னை
பற்றியும் குறிப்புகள் இடம் பெற வேண்டும்
என அவா கொண்டான் ஜரா
சந்தன் .
வரலாற்றில் இடம்
பெற விரும்பாத மானிடர் யாவரும் இல்லை.
இதில் ஜரா சந்தனும் விதி
விலக்கல்ல - இளைய யாதவர் யாரென கண்டு கொண்டான்.
அவன் நடத்தும் நாடகம் தான் பீமனுடன்
தோள் கோர்த்து சாகும் வரை யுத்தம்
- இதில் அவனுக்கு முழு உவகை மற்றும்
முழு சம்மதம் தான் . முதுமையால்
இறந்தாலோ அல்லது வேறு அரசனுடன்
பொருதி மரணித்தாலோ மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் ஜரா
சந்தன் பேர் இடம் பெற்றிருக்காது.எப்படி ராமாயணத்தில் ஸ்ரீ
ராமர் கதையில்
ராவணன் இடம் பெற்றானோ அதை போல் கிருஷ்ணரின்
எதிரியாய் மகா பாரதத்தில் இடம்
பெற்று ,வாயுவின் மைந்தன் பீமனால் கொல்லப்பட்டு
ஜரா சந்தன் பாரத
காவியத்தில் நீங்கா
இடம் பெற்றான்.
ஆயினும் பீமனால் கொல்லப்பட்டஅரக்கர்கள் -
இடும்பன் எனும் காட்டுக்கு அரசன் ,மற்றும்
பகாசூரன் எனும்
நகரத்துக்கு அரசனை விட மகதம்
எனும் தொல் நாட்டின் பேரரசன்
ஜரா சந்தன் வதம் மகாபாரதத்தின் முக்கியமான
நிகழ்வு . ராவணன் வீழ்ந்தது பெண்ணாசையினால்
- கம்சன் வீழ்ந்தது மண்ணாசையினால் என்றால் ஜரா சந்தன்
வீழ்ந்தது தொல் வேதங்களை உயிர்ப்பிக்கும்
ஆசையினால். ஆகவே அவன் அழிவை
இளைய யாதவர் பீமனால் நிகழ்த்தி விட்டார் . நன்றி !
தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்