மிக சரியாக ஏப்ரல் முதல் தேதியில் இங்கு மழை ஆரம்பித்தது. அதற்கு முன்
மழை பற்றிய பேச்சுகள் தான். அலுங்காத வாழ்வு என்பதால் அதிகம்
வியர்க்கவில்லை எனினும் மரங்கள் எல்லாம் தூசு மூடி கிடந்தன. வெயிலின்
மறப்பு அதிகாலை மட்டுமே இருந்தன. எதிர்பாரா காதல் என பின் பெய்ய
தொடங்கியது. சூரியனை மறைத்து வைத்து கொண்டு கொட்டல்... மேலிருந்து தொடர்
ஒளியாக, சீரான மூச்சு போல ... வானம் நிறைந்து வழிந்து கொட்டுவது போல ...ஸல்
என இரைச்சல். திடுக்கென்று விழித்து அழும் குழந்தை போல சில சமயம்
சப்தமுடன் ஒரு அரை மணி நேரம் ஓடைகளை நகரங்களின் எல்லா தெருக்களிலும்
காட்டிவிட்டு உம்மென்று உறுமி கொண்டு கருது கிடந்தபடி .....
இப்படி பார்த்தபடி நாட்கள் செல்லும்போது அங்கே ஹஸ்தினாபுரி மழை பற்றிய எழுத்துகள்.
கர்ணன் விதுரரிடம் அடுத்த நகர்வு பற்றி குழம்பி தவிக்கையில் உள்ளே பட்டது கரியவன் நகர்வான் என. மூன்று பேருடன் என நினைக்கவில்லை.
ஏன் அவனை பிடித்தது? இடத்தும் வலதும் அவன் இரண்டு உடல் இருப்பது தான்.
எதிரி என்பவன் அழிக்கப்பட வேண்டியவன் எனும் போது எவ்விதம் என்பதில் என்ன
வேண்டி கிடக்கிறது. ( துருபதனை அவமதித்த அர்ஜுனன் - மதுராவை பிடித்த
கரியவன் என எல்லாரும் ஒன்று தான் இந்த இடத்தில ) அதிலும் எல்லோரையும்
நேற்று வரவேற்று, குடி ஊத்தி, உணவு நிறைத்து, மறு நாள் அடித்து அடைத்து
வைக்கும் வெறி பற்றி படிக்கையில் ஒரு மிருக நிறைவு தான் வந்தது. இவன்
மட்டும் தானே மற்ற எல்லா அரசர்களுக்கும் குதம் குளிர வைத்தவன் ..."இந்நகர்
என்னுடையது" என்று ஜாரசந்தன் + ஐவரின் கரியவள் தவிர எவர் தன்னில் காண
முடிந்தது ... கிருஷ்ணன் தொட கூடா தொலைவென்று சென்று அமைத்து கொண்டது என
இப்போது தெரிகிறது. ஏன் பிடித்தது? கர்ணனை அணைத்து கொண்ட தோள்கள் ஆனால்
அதற்கு முன் வரை போர் தொடுபதற்கு தயார் என இருந்தவன். நாகம் என முழு
விழிப்புடன், விஷம் நிறைந்து இருந்தவன் ... சிவனை நினைத்து இருந்தவன்
என்பதாலா ?
எப்பேர்பட்ட வீழ்தல் ஜராசந்தன் கொள்ள போகிறான். ஒரு நிம்மதி
பெருமூச்சு தான் வருகிறது.... வரலாற்றின் ஒரு திசை மாற்றத்தின் முதல்
சுழல்.
அவனின் சாவிற்கு காத்து இருக்கும்
லிங்கராஜ்