Saturday, May 7, 2016

வேதமுடிவு



இன்றைய வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42 ஜராசந்தன் ,இளைய யாதவர் உரையாடல் மிக  அருமை .இன்னும் மகாபாரத போருக்கு நீண்ட தொலைவுகள் உள்ளன.ஆனால் இளைய யாதவர் -" முறைகொண்ட நால்வேதம். அதுவே முழுதும் மானுடர்க்குரியதல்ல. அதுவும் மீண்டும் செதுக்கி கூராக்கப்படவேண்டும். அதிலிருந்து அதன் இறுதி பிரித்தெடுக்கப்படவேண்டும்.”-என உரைக்கிறார்  ஆம் அந்த இறுதி தான் பகவத் கீதையாய் கண்ணனிடம் இருந்து  நான்கு வேதங்களின் சாரமாய் உலகுக்கு அறங்கள் காக்க வரப்போகிறது..உண்மையிலே கீதையின் தோற்றதிருக்கும் அரக்கன் ஜரா சந்தன் ஒரு வகையில் காரணமாகி விட்டான். நன்றி ஜெய மோகன் அவர்களே !

தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்