Sunday, February 18, 2018

மூன்று சபைகள்



ஜெ

இந்த நாவலில் மூன்று சபைகள் முக்கியமானவையாக இருக்கின்றன என நினைக்கிறேன். மூன்றுமுறை கண்னன் வந்து தூது சொல்லும் இடங்கள் அவை. மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து ஒரு வடிவ ஒருமையை உருவாக்கியிருக்கிறீர்கள். மூன்றின் இடங்களும் மூன்றுவகை/ முதலில் குடும்பசபையில் சொல்கிறார். அடுத்தபடியா ஷத்ரியசபையில் சொல்கிறார். கடைசியாக வேளிவிசாலையில் சொல்லப்போகிறார். இந்த மூன்று சபைகள் அமைவதைப்பற்றியும் விரிவான சித்தரிப்பு உண்டு. மூன்றுக்கும் கிருஷ்ணன் வந்துசேர்வதைப்பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த மூன்றுசபை, மூன்றுக்கும் வந்துசேர்வது, மூன்றிலும் பேசப்படுவது, மூன்றிலும் கண்ணன் எடுத்த நிலைப்பாடு ஆகியவற்றை மட்டும் ஒப்பிட்டு யோசித்தாலே பெரிய ஒருபுரிதல் கிடைக்குமென நினைக்கிறேன்


சண்முகம்