Thursday, March 22, 2018

சொல்லவை குறிப்புகள் - 3 (குருதிச்சாரல் - 76)




கிருஷ்ணர்: அறிவு என ஒன்றிருக்கும் எதுவும் அறியப்படவேண்டியவையே. ரிக்வேதம் அனைவரையும் ஒன்று சேர்ந்து  அறிவுசாவச்சொல்கிறதுஅதனால்தான் வேள்விக்கு முன் சொல்லவை சூழ வேண்டும் என முறைமை இருக்கிறது.

கௌதம சிரகாரி: வேள்விக்கு முன் சொல்லவை என்பது வேள்வி தேவையா என்பதற்காக அல்ல. வேள்வியின் பொருட்டு தோன்றும் ஐயங்களைக் களைந்துகொள்ளும் பொருட்டே.
கிருஷ்ணர்:  

·    வேத முடிபு,    சொல்லை கருத்து எனசெயலை எண்ணமென குறுக்கிகொள்வதாக அளவை நெறியினரின்  கூற்று அமைந்துள்ளது. ஒரு செயலின் பின்னணியில் எண்ணம் இருக்கிறதுஎண்ணம் என்பது எண்ணத்தின் அப்பாலுள்ளதின் ஒரு கருவி. அந்த நுண்மையை நாம் எண்ணத்தால்தான அறிய முடியும் என்பதால் சிந்தனையால்  அளைந்து நாம் அந்த நுண்மையை அறிய முற்படுகிறோம். அது தெளிவாகையில் எண்ணத்தையும் உதறிட்டு அந்த நுண்மையில் அமைகிறோம்.
·        அறிவு எண்ணத்தால் அறியப்படுகிறதுவாலறிவு புவியை படைத்து அனைத்துமாகி நிற்கிறது   அனைத்து மனிதர்களில் உறைவது. ஒவ்வொருவரும் அதை அறிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால அதை நுண்ணறிவு என்கிறோம்.    அதே நேரத்தில் அது சில மானுடருள் மட்டும் உறைவதென்பதில்லை, மானுடர்களுக்குள் மட்டும் இருப்பதுமென்பதும் இல்லை. அனைத்து உயிர்க்குலங்களிலும் உறைவது. அதனால் அது  இலங்கறிவு என கூறப்படுகிறது. பின்னர் அனைத்து பொருட்களிலும் உறைவதாக அறிவது வியனறிவு. அந்த வியனறிவு பெருவெளியை ஆளும்  வானறிவின் அறிவின் சிறு பகுதிஅந்த வானறிவயும் உள்ளடக்கி அனைத்துமாக நிற்பது வாலறிவு. வாலறிவன் என்று நின்றவனை அறிய இயலாத கல்வியில் பயனில்லை என்று நூல்கள் சொல்கின்றன.  
·         இந்தப் பெருவெளியின் அனைத்து நிகழ்வுகளும் வாலறிவு என்ற  நெறிப்படியே நிகழ்கிறது. செயல்களை ஏற்றுக்கொண்டு  எண்ணத்தை இகழ்பவர் தன்னுள் உறையும் அந்த அறிவை இகழ்கிறார். உடல் பிறப்பு இறப்புக்குட்பட்டதுஇடத்தாலும் காலத்தாலும் எல்லையிடப்பட்டது. ஆனால் எண்ணம்  இந்த எல்லைகளுக்குள் அடங்காதது. தன் உடல் விட்டு, உடல் இருக்கும் இடம் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டு போகக்கூடியது
·         நாம் இவ்வுலகை நம் எண்ணத்தால்தான் அறிகிறோம்நாம் ஒன்றை  பொருள்  என அறிவது நம் சிந்தையில் ஒரு எண்ணமாகும்அப்படி எண்ணமென ஆனதை சொல்லில் பொருத்தி மொழியில் இருத்துகிறோம்இப்படி எண்ணி எண்ணி பொருளுக்கு அப்பாற்பட்டு நிற்பதற்கும் சொல்கொடுத்து வேதமென ஆக்கியிருக்கிறோம்எண்ணுபவர் தன் உடலுக்கு அப்பாற்பாட்டு நிற்கும் எண்ணமென்றே ஆகிறார்உடல்கள் அழிகின்றன ஆனால் எண்ணங்கள் நிலைத்து நிற்கின்றன.     இந்தப் பெரும் எண்ணப் பெருக்கில் சிறு துமியென இருப்பதாக நம்மை அறிவது உண்மையில் நம் ஆணவத்தை வெல்வதற்கான வழியாக இருக்கிறது.   
·    ஒருவன் தனித்து எண்ணத் தொடங்குவது அவன் ஆணவத்தால் என்று கருதலாம். ஆனால் அவன் எண்ணி கனிந்து நிறைகையில் தான் என்பது அழிந்து எண்னப்பெருவெளியில் தன்னை கரைத்துக்கொள்கிறான. அந்த எண்ணப் பெருவெளியே தான் என்று உணர்கிறான்இப்படி எண்ணமென தன்னை அறியாமல் உடலென மட்டுமே அறிபவன். உடலின் நோயையும்  முதுமையையும் தான் அடைவதாகக்கொள்கிறான். நோயும் முதுமையும் அற்ற எண்ணம் துயராலும் மகிழ்வாலும் பாதிக்கப்படாதது. அந்த எண்ணமென ஒருவன் ஆகவேண்டும் என்பதே நோக்கம்.
·        நாம் என்ற எண்ணமே ஒருவன் கொள்ளும் அனைத்து எண்ணங்களுக்கு மூலமாக அமைகிறதுநான் என்ற எண்ணத்திலிருந்து தான் ஒவ்வொன்றையும் அறிகிறோம். இப்படி அறிவது அனைத்தும் நாம் என விரிவதுநானேயிறை என்பதன் முதற்பொருள்.   பெருவெளியில் அனைத்தையும் நான் என்று அறிவதே அறிதலின்  இலக்குஉடலென்று மட்டும் அறிகையில் நமக்கு அது வெறும் அன்னம் என்று ஆகிறது. நம்மை எண்ணமென்று கொள்கையில்  நாம்  முடிவற்ற வெளியென ஆகிறோம். அப்போது அடையும் உவகையையே (சத் சித் ஆனந்தம்நான் என்று அறியவேண்டும்
·         உடலெனக் கொள்கையில் பிணியும் இறப்பும் கொள்கிறோம்.   நம்முள்  அழியாது இருக்கும் ஆனந்தத்தை  நான் என்று கொள்ள வேண்டும்அந்த ஆனந்தம் என்றென்றும் கூடாமல் குறையாமல் அசையாது நிலைபெற்றிருப்பது. கல்லுக்குள் அனலென இருப்பதைப்போல உடலுக்குள் இருக்கும் அந்த உவகையை அறியவேண்டும்.    
·       இப்படி அடையும் முழுமை ஒரு சித்தத்தால் மட்டும்  அடையபடுவதில்லைமானுட இனம் தன் இலக்கென கொண்டு அடையவேண்டியது அது. விரல் தொட்டு அறிவதை விட விழி தொட்டு அறிவது அதிகம். அதைவிட எண்ணி எண்ணி சேர்க்கப்பட்டுள்ள சொற்களால் அறிவது பன்மடங்காகும்நம் முன்னோரின் சிந்தைகள் சொற்களாக நமக்கு சேகரித்து வைக்கப்பட்டிருகின்றன. அந்த சொற்களின் துணைகொண்டு மேலும் நம் எண்ணத்தை பெருக்கிக்கொள்கிறோம் சீர்படுத்திக்கொள்கிறோம்
·            சிந்தையும் மொழியும் ஒருவர் மனதில் ஏற்படுத்திக்  கொள்ளும் தனிப்பட்ட  ஒன்று அல்லஅது வழி வழியாக சிந்தனையாளர்களால உருவாக்கி அளிக்கப்பட்டவைஅவற்றை நம் சிந்தையில் நிறைத்து  மேலும் புதிய கருத்துக்களை  எண்ணி, உடன் இருப்பவர்களுடன் சொல்லுசாவி அடைகிறோம்இப்படி சேகரித்த எண்ணங்களின் மூலம் மானிட இனம் தன் இலக்கை சென்றடைய இருக்கிறது.
·      இப்படி அறியும் எண்ணங்களை கடந்து அடைவதை சொற்களால் யாருக்கும் உரைக்கமுடியாது போகலாம்.   அப்படி சொற்களால் கூற முடியாது போவதால் ஒருவர் அதை அடையவில்லை என்று கூறமுடியுமாஅப்படி கடந்தவர்கள் நம்மிடையே அதுவே நான் என வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பரமஹம்சர்கள். அவர்கள் இறையென ஆகி நிற்பவர்கள்மெய்மையை நாடும் ஒருவன் அவரை சென்றடைய ஏறிச்செல்லும் பாதையில் ஏதோ ஓரு படியில் நிற்பவனாகிறான். வேத முடிபே அந்த இறுதி இலக்கின் பாதையாக அமைந்திருக்கிறது
·       வேள்விச்செயல்  புரிபவர்கள் அனைவரும் ஆணவத்தை விட்டகன்று சென்றவர்களாக இருப்பதில்லை. அப்படி இருக்கையில் வேத முடிபு தத்துவத்தை பின்பற்றுவது ஆணவத்தை தருகிறது என்று சொல்லுதல் தவறுஒரு வழி   நல்வழியா என்பதை அவ்வழியில் இறுதிவரை சென்றவரை வைத்தே கூற வேண்டும்.   மனிதர்கள் ஆணவம் போன்ற மாசு நிறைந்தவர்களாக இருப்பது இயல்பு. அந்த மாசில்லாதவர்களை மெய்மை வழிதேடிவந்து அதுவாகவே சேரும். மாசுடையவகளாக  நாம் இருப்பதாலேயே நாம் மெய்மையை தேடிச் செல்ல வேண்டியதாயிருக்கிறது.
·        சொல் முழுதறியப்பட முடியாத ஒன்றுநாம் சொல்லுக்கு  இப்போது கொண்டிருக்கும் பொருளை வைத்தே நாம் தர்க்கம் செய்கிறோம்.   சொல்லின் பொருள் தியானித்து  அதன் உச்சத்தில் அறியவேண்டியதாக முடிவிலியில் இருக்கிறது
·     ஆணவமொழித்தலே வேதமுடிபினரின் வழியும் ஆகும்நம் ஆணவத்தை அழித்து வழி காட்டுபவன் ஆசிரியன் என்று ஆகிறான். கற்றல் என்பதும் ஒரு வேள்வி. அந்தக் கல்வியின் தெய்வம் தட்சினாமூர்த்தியென அமர்ந்திருக்கிறது
·          தான் என உணரும் ஆணவமே தனக்கு நன்மையானது தனக்கு தீமையானது என பிரித்தறிகிறது. இது சரி யென்றும் தவறு என்றும் இது நெறி என்றும் நெறியற்றது என்றும் பிரித்து தேர்வது அந்த   ஆணவத்தின் வெளிப்பாடுதான். உயிர்கள் தான்என விருப்பதை  உவகையாக உணரவதும் நிகழ்கிறது.   தன்னைஅந்த உவகையாக உணர்வதே ஆணவத்தை அறுக்கும் வழி.   அவ்வுவகையே வழி, அதுவே இலக்குஅதுவே தெய்வம்
·         விருப்புவெறுப்பற்று இருப்பதே உண்மை அறிவுடையவன் நிலை. அவனுக்கு இன்பதுன்பங்கள் இல்லை. அவன் முழுமையான விடுதலையை உணர்பவன். அவன் மட்டுமே ஆணவத்தை வென்றவன்அவன் எத்தொழில் செய்தாலும் அல்லது செயலற்று இருந்தாலும் அவன்   கொண்டிருக்கும்  ஆனந்தத்தை வைத்தே அவன் இலக்கடைந்தவனா இல்லையா என்பது தீர்மாணிக்கப்படுகிறதுமுடிவிலியை ஒருவன் உள்ளத்தில் கொள்ளமுடியும் என்பதை உலகில் நிறுவி நிற்பவன் அவன்.  
·        அந்த ஆனந்தத்தை அடைந்திருப்பவன் சென்றிருப்பது தனிமையான பயணம். அது ஒருவன் தன்னுள்ளத்தில் தனித்து நிகழ்த்தும் பயணம். மானுடம் என்ற பெரு மரத்தில் முதிர்ந்து பழுத்திருக்கும் கனி. மானுடத்தை முழுமைநோக்கி வழி நடத்துபவன்.
·        எளியோரால்  முழுமையடந்தவர் எவ்வழியில் சென்றார் என்பதை அறியமுடியாமல் போகலாம். ஆனால்  அப்படி ஒருவர் இருந்தார் என்பதே அனைவர்களுக்கும்  பயனளிப்பதாக ஆகிறதுவேள்விச்செயலின் பொருளை எளியவர்கள் அறிந்திருக்கவில்லையென்றாலும்வேள்வியை நடத்துபவர்கள் அறிந்திருக்க வேண்டும். சூழலுக்கேற்ப காலத்திற்கேற்ப செய்கைகள் மாறுதலுக்குட்பட வேண்டியவை. அத்தகைய மாறுதல்களை அச்செயல்களுக்கான உட்பொருளுணர்ந்தவர்களே செய்ய முடியும். இப்படி பொருளறியாது செய்யப்படும் செயல்களில் தேவைப்படும் மாற்றங்கள் ஏற்படாமல் போவதால் அவை பாதகமான விளைவுகளைத் தருவதாக ஆகிவிடலாம்.   
·        செயலின் பொருள் உணர்தல் என்பதில்செயலின் இலக்கை அறிதல் என்பதும் அடங்குவதாகும். இலக்கற்ற செயல் சிதறி அழியும். ஆகவே வேள்வியை நடத்துபவர் வேள்வியின் இலக்கு மையமென்ன என்று அறிந்திருக்க வேண்டும்அவர் வேள்விக்கான  நெறியை வகுத்தமைக்க  அவை அடிப்படையானவை
·           வேதங்களின் உச்சமென இருப்பது வேத முடிபு. ஆகவே ஒரு கருத்து வேத முடிபுக்கு மாறுபடும் என்றால் வேத முடிபின்படி அமைவதே சரியானது என்று கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேதச்சொல்லும் வேதமுடிபை அடைவதன் பொருட்டே உச்சரிக்கப்படுகின்றன. அனைத்து வேள்விகளும் அந்த வேத மெய்மையை அடையும்பொருடே. வேத மெய்மைக்கென ஆற்றப்படுவதே வேள்வியென ஆகிறதுமற்றவைகள் பொருளற்ற வெறும் செயல்கள்.
·           வேத முடிபுக்கு ஒத்துப்போகும் வண்ணம் வேள்விகள் இருக்கவேண்டுமேயல்லாமல், வெறும் குறிப்பட்ட நெறிகளை பின்பற்றுவதாக இருப்பது மட்டுமே வேள்விகள் என்பது சரியாகாது. வேள்விகள் நிகழ்வும் காலங்கள் மாறுபட்டுக்கொண்டே வருவதால் வேள்வி நெறிகள் மாற்றப்படவேண்டியவைகளாகலாம்அந்த மாற்றங்களை வேதமுடிபின்படி வகுக்கப்படவேன்டும். வேள்வி எது என்பதை வேதமுடிபே அங்கீகரிக்க வேண்டும்.  
·    வேதத்தின் சொற்கள்  விதைகள் போன்றவைஅவற்றிலிருந்து வனங்கள் முளைத்தெழ வேண்டியவைவேதங்கள் என்பவை கட்டிபோடப்பட்டு தனக்கான கருத்துக்களை மட்டும்  கறந்தெடுக்கப் பயன்படும் பசு அல்ல. உலகு முழுதும் சுற்றி வரத்துடிக்கும் குதிரை  அதுஇவ்வுலகு  முழுதும் தம் கருத்துக்களால் நிறைக்கவேண்டியவை வேதங்கள். வேதங்களை காக்கிறோம் என்று அதன் கால்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது ஷத்திரியக்குடி. வேதத்தை இந்நாள் வரை காத்தவர்கள் இப்போது அதற்கு சிறையென இருக்கிறார்கள். தாம் அதற்கான காவலர்கள் என்பதை மறந்து அதற்கு உரிமையானவர்கள் என்று கருதுகிறார்கள். வேதம் அக்குடியின் பாதுகாவலில் இருதிருக்கலாம். அது பல்கிப் பெருகுகையில் அது மேலும்  தனக்கான  காவலர்களை பெருக்கிக்கொள்ளும்அதை தடுப்பவர்கள் வேதத்தை தன் அடிமையென கொள்பவர்கள் மற்றும் வேதத்திற்கு எதிரானவர்கள்வேதத்தை காரணம்காட்டி தன் சொந்த நலன்களை பெருக்கிக்கொள்ள தலைப்பட்டவர்கள்.
·      இப்படி வேதத்தை தம் வசம் வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கும் அதை பெருகிப் பரவவேன்டும் என நினைப்பவர்களுக்குமான பூசல் என்றென்றைக்குமாக இருப்பது.   வேதம் பெருகி பரவுதல் இரு வகைகளில் தொகுக்கப்படுகிறது. ஒன்று எல்லைஅமைத்து அதற்குள்  இருத்துவது. மற்றொன்று மையமென ஒன்றை வைத்து அதைச் குறிவைத்து  சுழல்வதாக விடுதல். முதல் வழி அதற்கு வடிவத்தை அமைக்கிறது. இரண்டாவது வழி அது தன் விசையை குன்றாமல் இருக்க வைப்பதுபூர்வமீமாம்சை வேத கருத்துககளுக்கு வடிவம் தந்து காத்து நிற்கிறது. வேத முடிபு  வேதம் பரவுவதற்கான  விசையைத் தருகிறது
·     பாரத தேசத்தில் பல்வேறு இடங்களில்  பல்வேறு குரு நிலைகளில்  வேதக் கருத்துக்கள்  பெருகிவளர்வதாக இந்நாள்வரை இருக்கிறது. அப்படி எழும் வேதத்திற்கு வடிவமைத்து  காப்பவர்களாக அளவை நெறியினர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துவந்திருக்கின்றனர். வேடம்  இன்னும் பரவிப் பெருகவிருப்பதுஅது தம்மக்களென மேலும் அதிகமானவர்களைத் தழுவிக்கொள்ள இருக்கிறது.   அதற்காகத் தன் வடிவை அது பெருக்கிக்கொகொள்ள நேரிடும்.   அதை வேதமுடிபு முன்னெடுத்து நிகழ்த்தும்.   அதை தடுப்பது வேதக்கருத்துக்களை பெருக விடாமல் தேங்கச்செய்தலாகும்.    
·         வேதத்தை இந்நாள் வரை காத்து நின்றவர்களால் வேதம் பயனடந்தது என்பதைவிட வேதத்தால் அவர்கள் அடைந்த பயனே அதிகம். வேதத்தைப் பெருகச் செய்வதால் அவர்கள்  மேலும் அதிகப் பயனையே அடைவார்கள். ஆகவே இப்படி வேதம் பெருகி எழ அவர்களும் முயலவேண்டும். பெருகி எழும் வேத்தை தடைபோட யாராலும் முடியாது. வேதம் தனக்கான போராளிகளைக்கொண்டு எதிர்ப்புகளை  உடைத்து நொறுக்கிப் பாயும்இதை சத்திரியர்கள் உணர இயலவில்லையென்றால் அதை எடுத்துரைப்பது அந்தணர்களின் கடமையாகும்.     
·         இப்படி பெருகும் வேதத்திற்காக என எழுபவர்கள் ஷத்டிரியர் குடிக்கு வெளியிலிருந்தும் வருவதை நம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன்படி கர்ணன் இவ்வேள்வியில் அவையமர தகுதிவாய்ந்தவராகிறார்.
தண்டபாணி துரைவேல்