ஜெ
புழுவும் குருவியும் பேசிக்கொள்வதை மட்டும் ஒரு தனிக்கவிதையாக அமைக்கலாம். இந்த அத்தியாயத்தின் தொடக்கமே சின்னக்குழந்தைகளுக்கான கதைபோலவும் கவித்துவமும் தத்துவமும் கலந்ததாகவும் அமைந்திருக்கிறது. புழுவின் குணம் அதன் வாழ்க்கை சார்ந்தும் பறவையின் குணம் அதன் வாழ்க்கை சார்ந்தும் அமைந்துள்ளது. பருவடிவமான சிறகு அலகு கால்கள் நகங்கள் எல்லாமே புழுவில் தியானவடிவில் உள்ளன என்பதே ஆச்சரியமான கற்பனை என்று பட்டது. புழு தன் தியானத்திலிருந்து இறப்பு இல்லாமலாகிவிட்டதைக் கண்டுபிடிக்கிறது
எல்லா வர்ணனைகளும் கவிதையின் உவமைபோலவே இருந்தன. மீன்களின் சப்கான்ஷியஸ் ஆக கரையே உள்ளது. பறவை தீயையே அணுக விரும்புகிறது. அதன் சப்கான்சியஸ் ஆழத்திலிருக்கும் நீர்தான். அதேபோல நஞ்சையும் கொலையையும் விட்டுவிடுவது. விட்டுவிட்டால்கூட அதை நடிக்கவேண்டியிருக்கிறது. நூல் இல்லாமல் நெய்துபார், வெளியை நெய்ய முடியும் என்று சிலந்தியிடம் சொல்லுமிடம் மெய்யாகவே கவித்துவமானது
மனோகர்