Sunday, March 25, 2018

சொல்வளர்காடு



ஜெமோ, 

                    கடந்த சில நாட்களாக உங்களுக்கு கடிதம் எழுத முடியவில்லை, எழுதுவதற்கான தருணங்கள் நிறைய இருந்தும் கூட.  கூட்டம் நிரம்பி வழிந்த வெய்யிலின் கவிதைத் தொகுப்பு விழா பற்றி ; அன்று மாலையே சென்னை வாசகர்களுக்கு கிடைத்த கலந்துரையாடல் வாய்ப்பு பற்றி (you were flowing like a River in this 3 to 4 hours of discussion); இன்னமும் எங்களனைவரையும் பதைபதைக்க வைத்துக் கொண்டிருக்கும் உங்களின் இமயத் தனிமைபற்றி ; இந்த மாத விகடன் தடம் தொடரான மிக முக்கியமான 'செதுக்குகலையும் வெறியாட்டும்' பற்றி என நிறைய தருணங்கள். 

உங்களுடைய நிறைய 'வெறியாட்டுகளில்' ஒன்றான சொல்வளர்காடு நாவலில் ஆழ்ந்து போயிருந்தேன். அதைப் பற்றிய என்னுடைய அவதானிப்புகள் உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 


அன்புடன்
முத்து