Sunday, March 4, 2018

ஒரே முரண்பாடு.



ஜெ

வெண்முரசின் உச்சங்களில் ஒன்று இப்போது குருதிச்சாரலில் நிகழும் கடைசிகட்டவிவாதம். இதில் வெவ்வேறு தளங்களில் விவாதம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இரண்டாவது முறையில் துரியோதனன் பேசியது மிகமிகத் தர்க்கபூர்வமானது. ஆனால் இப்போது நடக்கும் இந்தத் தத்துவ விவாதம் மேலும் முக்கியமானது.

உண்மையில் வெண்முரசில் வரப்போகும் மகாபாரதப்போருக்கான பூசலே இங்கேதான் உள்ளது. இதுவரை இந்த முரண்பாடு சார்ந்து வந்த விஷயங்களை எல்லாம் படிப்படியாகத் தொகுத்துப்பார்க்கையில் அந்த மனநிலையை அடைகிறேன். வேதத்துக்கும் வேதாந்தத்துகுமான முரண்பாடு என்று இப்போது உள்ளது. கொஞ்சம் முன்னால் சென்றால் கிருஷ்ணன் சொல்லும் நாராயண வேதத்திற்கும் நால்வேதத்திற்குமான முரண்பாடு. அதற்கும் முன்னால் ஷத்ரியர்களுக்கும் மற்றவரளுக்குமான முரண்பாடு. அதற்கு முன்னால் புதிய சக்திகளுக்கும் பழைய அமைப்புக்குமான முரண்பாடு. இது மழைப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது .முதற் கனலில் சென்றால் வேள்விமரபுக்கும் நாகர்களுக்குமான முரண்பாடு.

இருப்பது ஒரே முரண்பாடு. அதன் வெவ்வேறு பக்கங்களை விரித்து விரித்து எழுதிக்கொண்டே வந்திருக்கிறது வென்முரசு என தோன்றுகிறது


மனோகர்: