அன்புள்ள ஜெயமோகன்,
இன்றைய வெண்முரசு அத்தியாயத்தை படித்த போது சட்டென இன்னொரு கே ள்விக்கு விடை கிடைத்தது. 'பன்னிரு கால்களுடன் விரையும்பு ரவியில் அமர்ந்திருக்கும் நாங் கள் காலமின்மையை உணர்வதெப்படி?' என்ற வரி படித்தவுடன் சட்டென ஒ ரு மின்னதிர்வு.
ஈராறு கால்கொண்டெழும் படித்த போ து உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தேன். அதில் ஒரு விஷயம் வி ட்டுப் போனது. உங்களுடையஎல்லா ப டைப்புகளையும் படித்தவுடன் மு தலில் நான் செய்வது அப்படைப்பை அதன் தலைப்புடன் ஒப்பிட்டுக் கொ ள்வதுதான். படைப்பின்மையம் எப் பொதும் அதன் தலைப்பை ஒட்டியே இரு க்கும். அதன் சாரத்தை தலைப்பு டன் தொடர்பு படுத்தி ஒரிரு வரி களாக சுருக்கி நினைவில்வைத்துக் கொள்வேன். ஆனால் இக்குறுநாவலை அ வ்வாறு செய்ய முடியவில்லை. கா ரணம் அதன் தலைப்பு சுட்டும் பொ ருள் விளங்கவில்லை. அதையும் அக்கடி தத்தில் சுட்ட நினைத்தேன். மறந் துவிட்டது. இன்று அதற்கான விடை கிடைத்து விட்டது. :) காலத்தையேஅந்த பன்னிரு கால் கொண்ட புரவி சுட்டுகிறது இல்லை யா? அப்பன்னிரு கால்கள் பன்னிரு ஆரங்களாக சுழலும் காலச்சக்கரத் தின் ஒப்பீடல்லவா.
அப்படிப் பார்த்தால் விரையும் கா லத்தில் தனக்கான அறிதலின் காலமி ன்மை சாஸ்தாகுட்டிப் பிள்ளைக்கு கிடைக்கவேயில்லை. இவ்வளவுவருட வாழ்க்கையில் தனக்கான அந்த ஒரு க் கணம் நிகழவேயில்லை. தன் வாழ் நாள் எல்லாம் அலைந்தது ஞானமுத் துனுக்கு வாய்த்ததுபோன்ற அந்த ஒரு கணத்திற்குத்தான். தன் அகம் அழியும் அந்த ஒரு நொடி. பல்வே று திசைகளில் அலைந்து தன் தடத் தை கண்டுகொள்ளும்முன் தனக்கான கா லம் விரைந்தழிந்து விட்டது. இப் போது தோன்றுகிறது நவீனத்துவ நோ க்கில் காலத்தின் இரக்கமின்மையை சுட்டும்படைப்பாகவும் இக்குறு நாவலை வாசிக்கலாமென்று.
அன்புடன்,
பாலாஜி பிருத்விராஜ்