ஜெ,
வெண்முரசு
நடத்தும் விவாதங்களிலும்சரி, நீங்கள் எழுதிய இந்துஞானமரபு ஆறுதரிசனங்கள் நூலிலும் சரி
பூர்வமீமாஞ்சை ஓர் எதிர்மறையான சிந்தனை, லௌகீகசிந்தனை என்ற அர்த்ததிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல சிந்தனையாளர்கள் மீமாம்சையை உலகியல்வாதம் என்று தூக்கிவீசியிருக்கிறார்கள். அந்தச்
சடங்குவாதத்திற்கு இப்படி ஒரு விரிவான நியாயத்தை நீங்கள் அளித்திருப்பது ஆச்சரியமாக
இருக்கிறது. கௌதமர் சொல்வதெல்லாம் மிகக்கூர்மையாகவும் தருக்கத்துக்குப் பொருத்தமானதாகவும்தான்
உள்ளது. சடங்குகள் அர்த்தமற்றவை அல்ல அவை ஆழ்மனதைப் பழக்குபவை. கூட்டாக நீண்ட நாட்களில்
ஒரு பெரிய விடுதலையை நோக்கிச் செல்பவை
சுவாமி