Tuesday, March 27, 2018

ஹவனை



இனிய ஜெயம் 

ஒளிக்காட்சிகள் ,  இணையப் பதிவுகள் இவற்றின் வழியே கொஞ்சம் கொஞ்சமாக மொழி பெயர்த்து ஷோபனவர் சொன்னது என்ன என அவரது அடிப்படை பார்வையை புரிந்து கொள்ள முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன் . [ பௌத்தனாக வேண்டும் என்றால் என்ன பாடு எல்லாம் பட வேண்டியது இருக்கிறது பாருங்கள் ] . 

இமைக்கணம் நாவலில் தியாநிகன் சொல்வது கிட்டத்தட்ட ஷோபனவர் சொல்வதே தான் .  

கொன்று கிழித்து உண்ணும் விழைவே புலிகளில் நகங்களும் ,பற்களும் என வெளிப்படுகிறது .

இங்கே இருக்கவும் ,பெருகவும் விழைவு கொண்டுள்ள வடிவே மனிதன் .

விழைவே நகர்வின் காரணம் . நகர்வு வழியே தூரம் காலம் .ஆகவே விழைவே வெளியும் காலமும் என்றாகிறது .

இதெல்லாம் என் சொற்ப ஆங்கில அறிவைக் கொண்டு மொழிபெயர்த்து வைத்திருக்கும் ஷோபனவர் சொற்கள் . 
தியாநிகன் சொற்களைக் கொண்டு ஷோபனவரை புரிந்து கொள்ள இயலும் போலும் .

// எங்கு தவமும் செயலும் முற்றிணைகின்றனவோ அங்கே தெய்வமொன்று எழுகின்றது. புவியில் அன்று எஞ்சியது அவர்களின் கூட்டில் முகிழ்த்த தெய்வம் மட்டுமே.//

மேற்கண்ட வரி க்ரிஷ்ணார்ஜுணனை அடிக்கோடிடுவது போல அமைந்திருக்கிறது .

இருவரும் சேர்ந்து குருஷேத்திரத்தில் எழுப்பிய தெய்வம்தான் ஹவனை .

கடலூர் சீனு