Monday, May 21, 2018

திரௌபதியும் நளாயினியும்




ஜெ

நளாயினியின் கதையின் இன்னொரு பக்கத்தை இன்றைக்குத் தெரிந்துகொண்டேன். நளாயினி கற்புக்கரசி என்றும் தொழுநோய் வந்த கணவனை கூடையில் தூக்கிச்சென்றவள் என்றும்தான் நமக்கு சொல்வார்கள். அவள் பெரும் காமம் கொண்டிருந்தாள் என்றும் கற்பும் காமமும் ஒன்றேதான் என்றும் இந்தக்கதைச் சொல்கிறது. அந்தக் காமம் மட்டும் பெருகித்தான் அவள் திரௌபதியாகப்பிறந்திருக்கிறாள். நான் இது உங்கள் கற்பனையா என்று பார்த்தேன். இல்லை மரபிலேயே அப்படித்தான் இருக்கிறது. இந்த odd vision மிக ஆச்சரியமானதாக இருக்கிறது. ஐவருக்கும் மனைவி அழியாத பத்தினி என்ற தெருக்கூத்துப்பாட்டின் அர்த்தம் புரிவதுபோல உள்ளது

ராஜன்