Saturday, May 19, 2018

கணம்



ஜெ

இமைக்கணம் முடிந்ததும் அந்த வார்த்தை அப்படி ஒரு ஆழமான அர்த்தம் கொண்டது. இமைக்கணம் என்பதுதான் கனவுக்கு மிகச்சிறந்த வார்த்தை என நினைக்கிறேன். ஒரு இமையின் கணம். நிமிஷம். நிமிஷாரண்யம் என்ற வார்த்தையிலிருந்து அந்தப்பெயரைப் போட்டிருக்கிறீர்கள். அந்த நிமிஷத்தில் ஒன்றுக்குள் ஒன்று என்று கனவுகள் சென்றுகொண்டே இருக்கின்றன. அர்ஜுனனின் கனவாக இருக்கலாம். அதற்குள் கிருஷ்ணனின் கனவாகவும் இருக்கலாம்

செல்வராஜ்