Monday, May 28, 2018

வெய்யோன்



ஜெ

வெய்யோன் வரை வந்திருக்கிறேன். முதல் வரியை இன்றைக்கு வாசித்தபோது இந்தக்கடிதத்தைஎழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்

செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது? விழிமுனைகளன்றி பகையேது? ஆடியன்றி கூற்றமேது?

இது கர்ணனைப்பற்றியமிகச்சிறந்த வரி. தன் நிழலால் துரத்தப்படுபவன் முகத்தில் ஒளியை வாங்கியவன். அவனுக்கு ஒளிய இடமே இல்லை. விழிமுனைகள் அன்றி பகை இல்லை. அவனே அவனுக்கு எமன்

வெய்யோனை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த வரிகளையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்


ஜெயராஜ்