Monday, September 3, 2018

காலம் உறையும் தருணம்


காலம் உறையும் தருணம்மரணமில்லா வாழ்வு என்பதை பெருவாழ்வு என்றே சொல்கிறோம்ஆனால் அது அதற்கே உரிய எதிர் மறை அம்சங்களும் நிறைந்தது.. மரணமின்மை என்பது வளர்ச்சியும் விழைவும் அற்று போகும் ஒரு நிலை... தேய்மானம் உண்டு ஆனால் உடலிலிருந்து முழு விடுதலை இல்லை.. எஞ்சியிருக்கும் ஒரு சிறு கூட்டிலும் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது போய் விடாமல்.. இங்கே சிறு புழுவான தியானிகனுக்கும் குருவியான பிரபாவனுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக இந்நூல் துவங்குகிறது


தியானிகன் என்னும் பெயருக்கு ஊழ்கத்திலிருப்பவன் என்று பொருள் கொள்ளலாம்தன்னையே உணவாக அவியாக பிரம்மத்திற்கு அளிப்பவனே தியானிப்பவன் அதே போன்று இந்த புழுவும் தன்னை உணவாக முழுதளித்து பிரபாவன் போன்ற பறவைகளின் ஒரு பகுதியாகவே மாறிவிடுவதாகவும் ஆகவே அதன் ஆற்றல்களுக்கு தாங்களும் ஒரு காரணம் என்று கூறுகிறது-


//பிரபாவரேஎங்கள் முட்டைகளை உங்கள் வயிற்றில் விதைக்கிறோம்அவற்றை உலகமெங்கும் நல்ல நிலம் தேடிச் சென்று பரப்புவதற்காக உங்களை பயன்படுத்திக்கொள்கிறோம்நீங்கள் பசியிலாது பறக்கவும் ஆற்றல் குன்றாது திசைவெல்லவும் உங்களுக்கு நாங்கள் உணவளிக்கிறோம்” என்றது//


இந்த சார்பு கோட்பாட்டை பிரபாவனால் புரிந்து கொள்ள முடியவில்லைஇங்கே ஏன் இந்த உரையாடல் ஒரு புழுவுடன் நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.. அது அனைத்து உயிர்களுக்கும் விதையாக இங்கே உருவகப்படுத்தப்படுகிறதுஅதன் நுண் வடிவங்களே அனைத்துமாக இங்கே பரவியிருக்கின்றன... மகத்தை ஜகத் என்றாக்குவது அவ்விதையே... உயிர்கள் இறப்பற்று போய்விட்டதை அறிந்ததால் அச்சமற்று போனது.. இறப்பு இருக்கும் போது மட்டுமே ஆற்றல் கூர் கொள்கிறது... ஒரு உயிரினத்தின் வடிவமைப்பே அதன் ஆற்றல்கள் அனைத்தும் ஒற்றைப் புள்ளியியல் போய்ச் சேர்வதாகவே இருக்கிறதுநண்டு சிலந்தியிடம் பேசும் போது இது விவரிக்கப்படுகிறது


// என் உடல் அமைந்திருப்பதே என் கொடுக்குமுனை நஞ்சை ஏந்திச்செல்லவும் விசையுடன் செலுத்தவும் உதவும் வடிவில்தான்நஞ்சில்லையேல் என் உடல்வடிவும் பொருளிழந்துவிடுகிறது” என்றது தேள். “ஆகவே இல்லா நஞ்சை நடிக்கிறேன்எனக்கு வேறுவழியில்லை.” சிலந்தி திகைப்புடன் நோக்க “வலையில்லாமல் வெறும்வெளியை நெய்துபார்அது பேருவகை அளிக்கும் பின்னற்கலை” என்றது பூச்சி.//


அனைத்துமே நாளடைவில் உறை நிலைக்கு போய்விடுகின்றன... காமமும் விழைவும் அற்றுப் போய் அந்த சுழற்சியும் நின்று போய் விடுகிறது.‌ இது இறப்பு எவ்வளவு பெரிய வரம் என்பதை உணரச் செய்கிறது


சிவராம்ஹரி