அன்புள்ள ஜெ
வெண்முரசில் பல வரிகள் செதுக்கி வைத்த சிற்பம் போல அகாலத்தில் நிற்கும். எனக்கு தனிப்பட்ட முறையில், காலத்துக்கும் கதை சொல்பவர்களுக்குமான உறவை பற்றிய வரிகள் எப்போதுமே கவர்கின்றன.
சூதர் தங்களைப்பற்றி இப்படி சொல்லும்போது திடுக்கென்றிருந்தது (இருட்கனி 52)
"என் மைந்தர் இங்கு காணப்போவதென்ன என்பதை இக்குருக்ஷேத்ரம் மட்டுமே அறியும். என் குருதியில் இருந்து முளைத்தெழுந்து இங்கே களம்பாட வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கே இறப்பவர்களும் இவ்வாறு பிறந்து பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். வலசைப்பறவைகள் வந்தமைகையில் மீன்களும் நண்டுகளும் முட்டை விரித்து வெளிவந்து பெருகி நிறைகின்றன"
அடுத்து அவர் 'அறநிலை' (தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே) என்று சொல்லிப்போகும் வரிகள் அற்புதம்
இருட்கனி 52 இறுதி வரிகளில் அஸ்வத்தாமன் மீண்டு எழுவது அபாரம்.
மது
அன்புள்ள மது
ஏறத்தாழ குருஷேத்திரம் இருந்த நிலமே இன்று பானிப்பட்
வரலாறு நமக்கு தெரிந்திருக்கிறது. சூதர்கள் உணர்ந்திருக்கிறார்கள்
ஜெ