ஜெ
சல்யகீதை அற்புதமானது. ஒரு அழகிய கற்பனை. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு
தேர் ஓட்டுகிறான். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டுகிறான். அப்படியென்றால் சல்யனும் ஒரு
கீதையைச் சொல்லக்கூடும்தானே? சல்யன் சொல்லும் உபதேசத்திலும் கீதையின் வரிகளை அழகாக
கலந்துவிட்டிருக்கிறீர்கள். அதுவும் கீதையே என காட்டுகிறது அந்த வரிகள். சல்யர் எந்தத்
தத்துவமும் சொல்லவில்லை. அனுபவத்தைச் சொல்கிறார்.எ ந்த அப்பாவுக்கும் மகனிடம் சொல்ல
சொந்த அனுபவம் சார்ந்த ஒரு வரியாவது இருக்கும். அதை தன் நெஞ்சின் குருதியிலே முக்கித்தான்
அவர் சொல்வார்.
ஆனால் அத்தனை உபதேசங்களுக்கும் இறுதியில்தான் நான் உன் தந்தை
என அவரால் கூவ முடிகிறது, அதை அவன் நிராகரித்தபின் அந்தத்தேரில் அமரவும் முடியவில்லை.
கண்ணெதிரே மகன் சாவதைப் பார்க்கவும் முடியவில்லை. ஆகவே அவர் அவனைக் கைவிட்டுவிட்டுச்
செல்கிறார். அந்த இடம் உணர்ச்சிகரமானதாக இருந்தது
ராம்